ஹை ஃபைவ் வரலாறு அறிவோமா?
ஹை ஃபைவ் செய்யுங்க!
2002 ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாவது வியாழக்கிழமை தேசிய ஹை ஃபைவ் தினமாக கொண்டாடப்படுகிறது.
24 மணிநேரம் பிறருக்கு உதவிகளை செய்வதுதான் இத்தினத்தின் நோக்கம்.
வர்ஜீனியா பல்கலைக்கழக
மாணவர்கள் இத்தினத்தில் நன்கொடை சேகரித்து நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள். கையை பிறரின்
கையோடு உற்சாகமாக தட்டிக்கொடுப்பது தனிப்பட்ட சாதனைக்கான பாராட்டு. விளையாட்டு வழியே இது உலகெங்கும் பரவலானது. ஹை ஃபைவ்
கலாசாரத்தை 1977 ஆம் ஆண்டு கிளென் புர்கே என்ற என்ற பேஸ்பால்
வீரர் தொடங்கி வைத்தார் என்றும், லூயிஸ்வில்லே பேஸ்பால் டீம்
தொடங்கியதாகவும் கூறுகிறார்கள். இதனை ஜாஸ் இசைக்கலைஞர்கள் அல்
ஜோல்சன், கேப் கலோவே, ஆண்ட்ரூ சிஸ்டர்ஸ்
ஆகியோர் பிரபலப்படுத்தினர்.