பேக் டூ பேக் சென்னை!





Image result for old chennai photos




4

சென்னை சீக்ரெட்ஸ்!- பிகே

சென்னப்பட்டிணம் உருவானது எப்படி?


சாந்ேதாமில் போர்த்துக்கீசியர்கள் இரட்டைக்குழல் துப்பாக்கியாக வணிகத்தையும் மதத்தையும் பரப்பிக் கொண்டிருந்தனர். டச்சுக்காரர்களுடன் இருந்த வணிகப் போட்டியாலும், ஆங்கிலேயர்களும் எதிர்த்து நின்றதால் சாந்தோமிலிருந்த போர்த்துக்கீசியர்கள் ஆங்கிலேயர்களை ரெட் கார்பெட் வரவேற்பு கொடுத்தனர். அப்போது துபாஷ் (இருமொழி வல்லுநர்) ஆக இருந்த பெரி திம்மப்பா  பிரான்சிஸ் டேக்கு உதவினார்.

அன்று இந்தப் பகுதி முழுவதும் விஜயநகர மன்னரின் தர்மல வெங்காடத்ரி என்பவரின் கீழ் செயல்பட்டு வந்தது. தலைநகரம் வந்தவாசி. அன்று, பூவிருந்தவல்லியின் நாயக்கரான சகோதரர் ஐயப்பா கரையோர பாதுகாப்புக்கு பொறுப்பாளர். மதராசபட்டிணம் வடக்கே ஆங்கிலேயர் கோட்டை கட்டிக் கொள்ளலாம் என அனுமதித்தது இவர்தான். ‘our madraspatnam’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, மதராசபட்டிணம் என்ற ஒரு கிராமம் ஏற்கனவே அங்கே இருந்ததும் அங்கே கோட்டைக் கட்டிக் கொள்ளலாம் என்பதும் தெளிவாகிறது. சென்னப்பட்டிணம் எப்படி வந்தது?


Image result for old chennai photos



5
சென்னை சீக்ரெட்ஸ்! - பிகே

மெட்ராஸ் உதயம்!

ஆங்கிலேயர்களின் தொழிற்சாலை 1639ம் ஆண்டு உருவானது.‘History of the City of Madras’ என்கிற நூலில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சி.எஸ்.னிவாசாச்சாரி ‘‘பழவேற்காட்டில் இருந்த டச்சுக்கும், சாந்தோமில் இருந்த போர்த்துகீசியர்களுக்கும் நடந்த போர்களால் மக்கள் நிம்மதி இழந்தனர். அதைத் தடுக்க, இப்பகுதியை ஆண்ட தமர்ல வெங்கடாத்ரி நினைத்து, டச்சுப் பகுதிக்கும், சாந்தோமிற்கும் இடையில் தம் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் கிராமத்தை(சென்னப்பட்டணம்) உருவாக்குகிறார்.
ஆங்கிலேயர்களுக்கு மணல்திட்டு பகுதியைத் தமர்ல வெங்கடாத்ரி அளிக்கும்போது, அப்பகுதி ஒப்பந்தத்தில் மதராசபட்டிணம் என்றுள்ளது. ஆக, மதராசபட்டிணம், சென்னப்பட்டிணம் என்பது இருவேறு கிராமங்கள்.

ஆங்கிலேயர்கள் கோட்டையுடன், தங்குவதற்கான குடியிருப்பையும் கட்டுகின்றனர். கூடுதலாக, இந்திய பணியாளர்களுக்காக வடக்கே புதிதாக ஒரு நகரும் உருவாகிறது. இந்நகரையும் சென்னப்பட்டிணம் என்றே நம்மவர்கள் அழைத்துள்ளனர். இந்தியர்கள் வாழ்ந்த இடம் சென்னப்பட்டிணம் என்றும், கோட்டையும், ஆங்கிலேயர்களின் குடியிருப்பும் மதராசபட்டிணம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலேயர்கள் இவ்விரு நகரினையும் மதராசபட்டிணம்(மதராஸ்) என்றே குறிப்பிட்டனர்’’ என்கிறார் அவர்.



Image result for old chennai photos


6

சென்னை சீக்ரெட்ஸ்!- பிகே

தேவாலயத்தை கட்டிய குடும்பம்!

சாந்தோமில் மத்ராஎன்ற போர்த்துகீசிய குடும்பம் வசித்துள்ளது. தேவாலயத்தை கட்டி வழிபடும் செல்வ செழிப்பு கொண்ட குடும்பம் இது. அன்று இக்குடும்பத்தின் பெயரிலேயே அக்கிராமமும்  அழைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து, ‘மதராஸ்என்கிற சொல் வந்திருக்கலாம் என்கின்றனர். இதற்கு ஆதாரமாக 1927ம் ஆண்டு மேனுவல் மத்ரா மற்றும் அவரின் தாயாரின் கல்லறையை, சாந்தோமில் புனித லாசரஸ் தேவாலயத்தைக் கட்டும்போது கண்டெடுத்துள்ளனர்.

அதில், 1637 இல் இங்கு கோயில் கட்டிய மத்ரா மற்றும் குடும்பத்தை கௌரவிக்கும் வசனங்கள் இருந்தன.
எப்படியோ, சென்னையும் மெட்ராஸூம் மக்களின் மனங்களிலிருந்து பிரிக்க முடியாத பெயர்களாகிவிட்டன. இவ்விரு கிராமங்களுடன் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களும் ஒன்றிணைந்ததே சுமார் 80 லட்சம் மக்கள் வாழும் இன்றைய சென்னை பெருகரம்! 

காப்புரிமை: பேராச்சி கண்ணன்