இடுகைகள்

39ஏ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மரண தண்டனை கைதிகளுக்கு உதவும் வழக்குரைஞர்! அனுப் சுரேந்திரநாத்

படம்
  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் இந்தியா போன்ற பல்வேறு கலாசாரம், பண்பாடு கொண்ட நாட்டை ஒழுங்குபடுத்துவது சாதாரண காரியமல்ல. இதைத்தான் பல்வேறு முன்மாதிரிகளை கொண்டு பி ஆர் அம்பேத்கர் சாத்தியப்படுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றினார். இதன் வழியாகவே எது குற்றம் என்பதையும், உரிமைகள் என்னென்ன என்பதையும் அறிய முடிகிறது.  மாநில, மத்திய அரசுகளைப் பொறுத்தவரை சட்டம், வழக்கு என்பதெல்லாம் மக்களுக்குத்தான். தங்களுக்கும் தங்கள் அதிகாரத்திற்கும் அல்ல என்ற முடிவுக்கு வந்து செயல்பட்டு வருகிறார்கள். இதனால் செல்வாக்கு, அதிகாரம் கொண்டவர்களை நீதிமன்றத்தால் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வரமுடிவதில்லை.  வழக்குரைஞர் அனுப் சுரேந்திரநாத் அனுப் சுரேந்திரநாத் சட்டத்தை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகிறார். நாட்டில் சட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் கூட அதனை செயல்படுத்தும் நீதிமன்றம் போதுமான  வேகத்தில் செயல்படுவது இல்லை. இதற்கு பல்வேறு அரசியல், சூழல் காரணங்கள் உண்டு. இதன் நேரடி பாதிப்பாக, சிறையில் 70 சதவீத த்திற்கும் அதிகமான கைதிகள் விசாரணை கைதிகளாகவே சிறைபட்டுள்ளனர். இவர்களை வெளியே கொண்டு வர வழக்கு முடிவ