சீன கல்வி சீர்திருத்தங்கள் - கல்வி கற்பதற்கான சிறந்த நாடு!
சீனா, உலக நாடுகளில் பட்டுச்சாலை திட்டத்தை(பெல்ட் அண்ட் ரோட்) உருவாக்கிவிட பல கோடி ரூபாய்களை செலவிட்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் உருவாகிவரும் வலதுசாரி மதவாத அரசியல் சூழ்நிலைகளே சீனாவை மகத்தான வல்லரசு நாடாக மாற்றிவிடும் என்று தோன்றுகிறது. அமெரிக்காவை தனிமைப்படுத்தி பிற நாடுகளை தனது கைக்குள் வைத்து வழிகாட்டவேண்டும் என்பது சீனாவின் பேரரசு கனவு. தனது தற்சார்பு கொண்ட தொன்மைக்கால பெருமையை, கலாசாரத்தை சீனா இன்றும் கைவிடவில்லை. இன்றைக்கும் அதன் அறிகுறிகளை வெளியுறவு கொள்கைகளில் காணலாம். சீனா, தொடக்கத்தில் வெளிநாடுகளின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் இப்போது, தனது நாட்டுக்கே உரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. வல்லரசு நாடுகளை விட பின்தள்ளி முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகளை, சாதனைகளை செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் படிக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்தையும் கடந்துவிட்டது. இதில் 80,000 பேர் தொடக்க, உயர்நிலைக்கல்வியும், 5,00,000 லட்சம் பேர் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியையும் பயின்றனர். 1949ஆம் ஆண்டு, சீனாவில் இருந...