இடுகைகள்

சர்வாதிகாரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லத்தீன் அமெரிக்காவில் மக்களின் அபிமானம் பெற்ற சர்வாதிகாரி ! நாயூப் பக்லே

படம்
  கைதிகள் சிறைக்கூடத்தில்.. - எல் சால்வடோர் நாயூப் பக்லே கிரிப்டோகாயினில் அரசு பண முதலீடு மீள முடியாத சிறைவாசம் ட்விட்டரில் சர்வாதிகாரி என அறிவித்தபோது... சால்வடோரில்   உதயமான புதிய சர்வாதிகாரி கழிவறையில் அமர்ந்துகொண்டு கிரிப்டோகரன்சியில் மக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்வது, அரசு உத்தரவுகளை, சட்டங்களை சமூக வலைத்தளத்தில் முதலில் வெளியிடுவது, சிறைக்கைதிகளன் அரைநிர்வாண படங்களை வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவது, பேஸ்பால் விளையாட்டு வீரர் போல உடையணிந்துகொண்டு ஊடகங்களை சந்திப்பது என சால்வடோர் மக்களுக்கு அந்த நாட்டு அதிபர் நாயூப் பக்லே காட்டும் காட்சிகள் நிச்சயம் புதிதான். நாட்டில் அவர் செய்யும் செயல்பாடுகளை பார்ப்பவர்களுக்கு கோமாளிக்கூத்தாகவே தெரியும். ஆனாலும் மக்கள் அதை பெரிதாக எதிர்ப்பதில்லை. என்ன காரணம் என்று பார்ப்போம். நாட்டின் புகழ்பெற்ற இமாமிற்கு மகனாக பிறந்தவர், பக்லே. அவருக்கு குடும்பத்தொழிலே விளம்பரப்படங்களை எடுப்பதுதான். அதற்கென குடும்ப ம் சார்ந்த விளம்பர நிறுவனம் உள்ளது. பக்லேவின் மூன்று சகோதரர்கள்தான், இப்போது அவருக்கு அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். தனது அரசியல் செயல

எனக்கு விதிகள்தான் முக்கியம்! - பழுத்த மிளகாய் சோள முறுக்கு

படம்
  1 அன்புக்குரிய இனிய மக்களே, வணக்கம்.  நலமாக உள்ளீர்களா? நீங்கள் நலம் என்று பதில் தருவதை விட நாடு நன்றாக இருக்கட்டும் ஐயா, நான் அதற்குப் பிறகு தான் நலமாக இருப்பேன் என்று சொன்னால் நன்றாக இருக்கும். நான் அதைத்தான் விரும்புகிறேன் என்பதால், நீங்கள் கட்டாயம் அதைத்தான் கூறவேண்டும்.  இப்போது பாருங்கள் டிஜிட்டல் வழியில் ஏராளமாக மக்கள் செலவழித்து வருகிறார்கள்.  இதற்காகத்தான் அரசு, பணத்தை அச்சிடுவதை நிறுத்தி வைத்தது.சமயம் கிடைக்கும்போது பணத்தை செல்லாது என சொல்லிவிட்டு நான் வெளிநாட்டிற்கு போவது மூலம் நாடு நல்வழிக்கு திரும்பியுள்ளது.  எனக்கு விதிகள் தான் முக்கியம். நான் பொது மக்களோடு இணைந்துள்ளேன். முதலில் நாட்டைக் காப்பாற்றுவதுதான் முதல் பணி. பிறகுதான் எங்கள் சகோதர  குண்டர்கள் படை கிளம்பிட்ட பிரச்னைகளை சமாளிப்பது.  நம்முடைய தேசத்தில் தோமா தான் ராஜா. அவர் கூற்றுப்படி தர்மம்தான் முதலில் வழங்கப்பட வேண்டும். எனவே பல்வேறு ஒலைச்சுவடிகளில் இதைப்பற்றி படித்துள்ளதாக நாங்கள் தீவைத்து எரிக்கும் முன்னர் பண்டிதர்கள் கூறியதாக வன்முறை குழு 1 என்னிடம் தகவல் தெரிவித்தனர். எனவே, சாகும்போது ஒருவர் உண்மையை கூறியிரு

சர்வாதிகார அதிபரின் கோமாளித்தனமான உரைகள்! - பன் பட்டர் ஜாம் - மின்னூல் வெளியீடு- அமேஸான்

படம்
  பொதுவாகவே சர்வாதிகாரிகள் ஊடகங்களை மிக திறமையாக தந்திரமாக கையாண்டு தங்கள் வசப்படுத்திக்கொள்வார்கள். இதன்படி மெகந்தியா நாட்டு அதிபர் ******** மாதம்தோறும் மக்களுக்கு வானொலி வழியாக உரையாற்றுகிறார். நாட்டின் பிரச்னைகளை பேசுவதை விட அதை மடைமாற்றி தனது கனவுகளைப் பற்றியும், தொழிலதிபராக உள்ள நண்பர்களின் முன்னேற்றங்களையும் பேசுகிறார். அதனை சாத்தியப்படுத்துவதால் என்ன நன்மை என்பதையும் வெளிப்படையாக சில சமயங்களில் உளறுகிறார்.  நாடு முழுக்க பிரிவினை, சீரழிவுகள் இருந்தாலும் அதிபரின் சொத்துக்களும் அவரின் இனாம் தாரர்களான தொழிலதிபர்களும் வளர்ந்துகொண்டே இருக்கிறார்கள். இதுபற்றிய பகடியான சில சமயம் கோபம் வரும்படியான பதினெட்டு உரைகளை இந்த நூல் கொண்டுள்ளது.  பன்பட்டர்ஜாம்  நூலை வாசிக்கும்போது, சமகால நிகழ்வுகள் உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு காரணம், நாம் கேள்வி கேட்காமல் வரிசையில் நின்றுகொண்டிருப்பதே என்று உணருங்கள். சர்வாதிகார, ராணுவ ஆட்சி நடைபெறும் தேசங்களை உதாரணமாக கொண்டு எழுதப்பட்ட நூல் இது.  இதற்கான உத்வேகத்தை திரைப்படக் கலைஞர் சார்லி சாப்ளின் வழங்கினார். நூலின் அட்டைப்படத்தை அழகுற வரைந்த கதிர் அவர

வரி கட்ட மக்கள் வாழ்ந்தாக வேண்டும்!

படம்
  அன்புக்குரிய மெகந்தியர்களே,  பெருந்தொற்று காலத்தில் உடனடியாக பொதுமுடக்கத்தை கொண்டு வந்தபோது மக்கள் மகிழ்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்போதுதான் மகாத்மா போலவே பலரும் நடக்க தொடங்கினார்கள். அதுவும் நல்லதுதான். அப்போதுதான் மக்கள் நாடெங்கும் உள்ள சாலைவசதிகளைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்திலும் வெளிநாடுகளுக்காக ஆக்சிஜன் சப்ளை பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் பிராணவாயுவும், தடுப்பூசியும் கிடைக்காதபோது மெகந்தியர்களாகிய நாம் எப்படி மானமுடன் உயிர்வாழ முடியும்? நல்ல லாபத்திற்கு  ஆக்சிஜனை எனது நேசத்திற்குரிய நண்பர்கள் விற்றனர். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மக்கள் நடக்கிறார்களே என சிலர் விமர்சனங்களை கிளப்புகிறார்கள். அதை பொய்யாக்க இதோ ஆக்சிஜன் டேங்கர் ஓட்டும் மனேஷிடம் பேசலாம். மனேஷ் எப்படி இருக்கீங்க? உங்களின் ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன்யா உங்க குழந்தைகள் படிச்சுட்டு இருக்காங்களா? என்னோட மூணு பிள்ளைங்களும் படிச்சுட்டு இருக்காங்க ஐயா மூணு குழந்தைகளை வளர்க்கிற அளவுக்கு உங்களிடம் பணம் இருக்குதா? ஜினாக்ஸ் கம்பெனி எங்களை அக்கறைய

பிற நாட்டினரை காப்பதே நமது முதல் குறிக்கோள்!

படம்
  பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்! எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே,  பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை எதிர்க்க  அரசு நடத்திய யாகங்கள், பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகள் நடந்து அதன்மூலம் நோய் பரவும் என  சமூகவிரோதிகள் கூறிவருவதை நான் கண்டிக்கிறேன். விரைவில் அவர்களை கண்டுபிடித்து மறு உலகிற்கு அனுப்ப உறுதிகொண்டுள்ளேன். மக்கள் தங்களுக்கு நோய் வந்தால் அதை அவர்களேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் காட்டிய வழியில்தான் கண்ணை மூடிக்கொண்டு நடந்து செல்கிறேன்.  எனக்கு நோய் தொற்றக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக இருக்கும்போது டிவிதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் மருத்துவர்கள் பெருந்தொற்று ஏற்பட்டவர்களை கவனித்துக்கொள்வதை பார்த்தால் இவர்களுக்கு எப்படி இந்தளவு துணிச்சல் வந்தது என ஆச்சரியமாக உள்ளது.  இயற்கைப் பேரிடர்களான சுமான், ஜிசாப் ஆகிய புயல்களைக் கூட மக்களேதான்  எதிர்கொண்டனர். இடிந்துபோன வீடுகளை பின்னர் அவர்களேதான் கட்டிக்கொண்டனர். இதற்கு அரசு என்ன செய்யமுடியும்? இதற்கு

என் அப்பாவின் வாழ்கையிலிருந்துதான் மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்! - டெரி வெய்ட், மனிதநேய செயல்பாட்டாளர்

படம்
  டெரி வெய்ட் 1987-1991 காலகட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் டெரி வெய்ட் உலகின் கவனத்தை ஈர்த்தார் . ஹிஸ்புல்லா இயக்கத்தினரால் ஐந்து ஆண்டுகள் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர் இவர் . லெபனானில் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவருக்கு இன்று வயது 81 ஆகிறது . உங்கள் சிறுவயது எப்படி தொடங்கியது ? நான் செஷையர் பகுதியில் பிறந்தேன் . நூற்பு ஆலை அருகே இருந்த ஸ்டைல் என்ற கிராமத்தில் வளர்ந்தேன் . அது தொழில்நுட்ப புரட்சியின் தொடக்க காலம் . சாமுவேல் கிரெக் ஊரக தொழில்துறையை உருவாக்கி வந்தார் . பின்னர் அந்த தொழிற்சாலைகள் கைவிடப்பட்டன . இன்று அது அருங்காட்சியமாகி உள்ளது . உங்கள் அப்பா காவல்துறை அதிகாரி அல்லவா ? அவரது சம்பளத்திற்கு நாங்கள் நல்ல வீட்டில்தான் வாழ்ந்தோம் . அப்பாவின் குறைவான சம்பளத்தில் பெரிய வீடுதான் அது . அங்கேயே தோட்டமும் இருந்தது . நாங்கள் எங்கள் வீட்டிற்கான பழங்கள் , காய்கறிகளை விளைவித்துக்கொண்டோம் . சில சமயங்களில் குற்றவாளிகளை விசாரணை செய்யவும் வீட்டின் அறைகளைப் பயன்படுத்துவார் . முடிந்தவரை அங்கு அமைதி நிலவுமாறு

ரஷ்யாவை முடக்கும் ஊடக சர்வாதிகாரி!

படம்
ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரி! 2017 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் ரஷ்யாவில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நூறுபேர்களுக்கு மேல் ஊழலுக்கு எதிராக மாஸ்கோ வீதிகளில் போராடத் தொடங்க, அதற்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. உடனே அரசுப்படைகள் மக்களை அடித்து விரட்டத் தொடங்கினர். 2 ஆயிரம் மக்களுக்கு மேல் போராடிய இந்த போராட்டங்களை வாய்ப்பு கிடைத்த தென மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ய அலைபாய்ந்தனர். ரஷ்ய ஊடகங்களும் இதனை செய்தியாக்கினர். ஆனால் மக்களுக்கு இந்த செய்தி மி க குறைவாகவே கிடைத்தது. மார்ச் 26 தொடங்கிய போராட்டம் அப்படியே வலிமை குன்றிப் போனது. ஊடகங்களை அடித்து மிரட்டி கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர், அலெக்ஸி கிரமோவ். புதினின் அரசைக் கட்டுப்படுத்திக் காப்பாற்றுவதில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளவர் அலெக்ஸி.  வேறுமாதிரி சொல்வது என்றால் புதின் சொல்லும் சரி, தவறு விஷயங்களை ஊடகங்களுக்கு வழங்குவது இவர்தான். முக்கியமான சமாச்சாரம், ரஷ்யா டுடே டிவியின் இணை நிறுவனர் வேறு யாருமில்லை, அலெக்ஸிதான். 70 களில் மாஸ்கோ மாநில பல்கலையில் வரலாறு படித்தவர். கால்பந்