இடுகைகள்

உண்மையா? லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேக் டூ பேக் - உண்மையா? உடான்ஸா?

படம்
  சலிப்பு அல்லது பதற்றம் ஏற்படும்போது சில பழக்கங்கள் உருவாகின்றன! உண்மை.  இதனை மருத்துவத்தில் பிஹேவியரல் ரெஸ்பான்ஸ் என்று பெயர். ஒருவர் பதற்றமாக இருக்கும்போது அல்லது சலித்துப்போகும்போது தலைமுடியில் பிடித்து விளையாடுவது, விரல்களை மேசையில் தட்டுவது, கால்களை ஆட்டுவது என செய்துகொண்டிருப்பார்கள். இதை பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். எனவே, இதுபற்றி பதற்றப்பட அவசியமில்லை.  காலையில் இயல்பாக தூக்கம் கலைந்து எழுவது சிறந்தது! உண்மைதான். தூக்கத்தின் ஆழத்தைக் குறிக்க  ஐந்து நிலைகள் வரை உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரின் தூக்கம் இயல்பாக கலைந்து எழுவதே உடலுக்கும் மனதுக்கும் சிறப்பானது. ஆனால் இன்றைய சூழலில் அலாரம் வைத்து எழுவது அவசியமாகிவிட்டது. முடிந்தவரை இதை தவிர்க்கும் வகையில் சூழலை மாற்றிக்கொள்வது நல்லது.  நமது முடியின் வளர்ச்சி வயதாகும்போது மாறுபடும்! உண்மையல்ல. உடல்பாகங்களில்  உள்ள முடியின் (Hair follicles) வளர்ச்சி வேகத்தை ஒருவரின் மரபணுக்களே தீர்மானிக்கின்றன. இவற்றை அனைத்தையும் ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிடமுடியாது. தலையில் வளரும் முடியை விட அக்குளில் வளரும் ரோமக்கற்றைகளின் வளர்ச்சி கு