இடுகைகள்

இந்தியா ஸ்பெண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவை உருக்குலைக்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு!

படம்
healthline ஊட்டச்சத்து பற்றாக்குறையால் தடுமாறும் இந்தியா! தேர்தல் வந்தவுடன் இந்தியர்களை வேலையின்மை , பசி ,பட்டினி அனைத்தையும் மறக்கடிக்க பணத்தை வாரிறைக்க தொடங்குகின்றனர். இதெல்லாம் ஆட்சியைப் பெறும்வரையில்தான். அப்புறம்... இதுவரை நீங்கள் என்ன பார்த்தீர்களோ அதுவேதான் தொடரும். வீடு, உணவு, உடை என அடிப்படை ஆதாரங்களுக்கே நாம் இன்னும் அரசை நம்பியுள்ள நிலையில், தற்சார்பை அதிகரிக்கும் திட்டங்கள் கண்ணுக்கு எட்டியுள்ள தூரம் வரை  காணோம். தற்போது குழந்தைகளை பாதுக்கும் ஊட்டச்சத்துக்குறைவு எனும் பாதிப்பு மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் செய்த ஆய்வுகளில் 20 சதவீத அளவுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறை மேலோங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. ரத்தசோகை, குறைந்த எடை, வளர்ச்சிக் குறைவு ஆகியவை இதன் முக்கிய பாதிப்புகள். ஜார்க்கண்டில் பத்து தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 19 தொகுதிகள், கர்நாடகத்தில் பத்து தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் பத்து தொகுதிகள், ராஜஸ்தானில் ஆறு தொகுதிகள் இவ்வகையில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆதார அறிக்கை எகனா