இடுகைகள்

ஹேப்பி சயின்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கை, தொழில் என இரண்டிலும் வாகை சூடுவதற்கான வழிகாட்டி நூல்!

படம்
  ரியோ ஒகாவா நூல் வாகை சூடும் சிந்தனை ரியோ ஒகாவா ஜெய்ஹோ தமிழாக்கம் – மிஸ்டிக் ரைட் நிறுவனம்     நான் நன்றாக இருக்கிறேன் என்ற புத்தகம் ரியோ எழுதியதுதான். பக்கம் 85. நூல் சற்று சிறியது. கருத்துக்களும் அதனால் சிறியதோ என்று தோன்றும்படி நூலை உருவாக்கியிருக்கிறார்கள். அந்த நூலோடு ஒப்பிடும்போது வாகை சூடும் சிந்தனை சொல்லும் கருத்துகள் அடிப்படையில் சற்று மேம்பட்ட சுய முன்னேற்ற நூல் எனலாம், ஹேப்பி சயின்ஸ் ஆன்மிக மத தலைவர் ஆற்றிய நான்கு உரைகளை தொகுத்து ‘வாகை சூடும் சிந்தனை’ என நூலாக்கியிருக்கிறார்கள். இப்படி நூலாக்குவதில் உள்ள நுட்பம் பற்றியும் ரியோ, பேசியுள்ளார். ஆனால், அது எந்தளவு சரி என்பதை வாசகர்கள்தான் படித்து புரிந்துகொள்ளவேண்டும். பானாசோனிக் நிறுவனத்தின் நிர்வாக முறை. குழாய் தண்ணீர் தத்துவத்தை எப்படி கடைபிடித்து நிறுவனம் மின்சாதனங்களை விற்றது என்பது படிக்க நன்றாக இருந்தது. இன்று அந்த தத்துவத்திற்கு என்ன மதிப்பு என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அதை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுத்திய காலம் முக்கியமானது. குறிப்பிட்ட பதவி, அதிகாரம் கிடைத்தபிறகு நாம் எப்படி செயல்படவேண்டுமென ர