பேராசைக்கு எதிராக ஒரு குரல்: மயிலம்மா : போராட்டமே வாழ்க்கை

மயிலம்மா: போராட்டமே வாழ்க்கை ஜோதிபாய் பரியாடத்து தமிழில் - சுகுமாரன் எதிர் வெளியீடு விலை ரூ. 55 நாம் தொடர்ந்து இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றவேண்டிய தேவை இருந்துகொண்டே இருக்கிறது. பெரிய நிறுவனங்கள், அவர்களுக்காக தரகு வேலை செய்யும் இந்திய நிறுவனங்கள், பேராசை கொண்ட தனிப்பட்ட முதலாளிகள், அறியாமை கொண்ட பேராசையின் சார்பில் நிற்கும் மனிதர்கள் என நாம் தொடர்ந்து இயற்கையை சீரழிக்கும் பல தீய எண்ணங்களுக்கு எதிராக போராடிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகிவருகிறது. ஆதிவாசிப் பெண்ணான மயிலம்மாவும் தனது கணவரற்ற சூழலில் ஆறு குழந்தைகளோடு வாழ போராடி அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையினை உருவாக்கி கொடுத்ததோடு நிற்காமல் தனக்கு ஆதரவளித்த இயற்கை தாயினை, அவளது மடியினை ஈரத்தை பிறரும் உணர வாய்ப்பு தரும் பொருட்டு பிளாச்சிமடை பகுதியில் தொடங்கப்பட்ட கோக கோலா நிறுவனத்தின் நீர் சுரண்டலுக்கு எதிராக நீதி கேட்டு போராடியதன் மூலம் புகழ் பெற்றவர். இந்த நூல் வெறும் போராட்ட வடிவத்தை மட்டும் பேசாமல் மயிலம்மா தன் வாழ்க்கை எப்படி இருந்தது என்று இயல்பான தன் மொழியில் கூறிச்செல்கிறார். அதனால்தான் இந்த எழுத்