உரையாடல் போல அமைதியும் பொருள் கொண்டதுதான் பகுதி நிறைவு











புரட்சி குறித்து பேசுவது சரி, ஆனால் அது குறித்த கனவு உடைந்துபோக, மாயைகள் அழிந்துபோன பின்பு வாழ்ந்து வரும் நிலையில் புரட்சி என்பது நீடிக்கின்ற தொடர்கின்ற ஒன்றுதானா?

      அப்படி கூறமுடியாது. மெக் அலெக்ஸாண்ட்ரோஸ் படத்தில் 68 ஆம் ஆண்டிற்கான உற்சாகத்தைக் கொண்டு அது விரக்தி நிலைக்கு மாறுவதை சுட்டிக் காட்டியிருப்பேன். குறிப்பிட்ட யாரையும் நான் கூறவிரும்பவில்லை எனினும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஊழலை சந்திக்கவேண்டிய அபாயம் எப்போதும் உள்ளது. எனது முதல் தொடர்ச்சியான வரிசைப் படங்களை எடுத்து முடிக்க (36 நாட்களில், பயணிக்கும் வீரர்கள், வேட்டைக்காரர்கள்) 5 ஆண்டுகள் தேவைப்பட்டன. பிறகு எடுக்கத் தொடங்கிய படம்தான் வரலாற்றின் அமைதி படமாகும். சிதெராவிற்குப் பயணம் படம் கம்யூனிசம், வரலாற்றின் இறுதி பெரும் கருத்தியல்கள் குறித்து பேசியது. ஒருமுறை அவை நிறைவுபெற்றால், அதனுள் பிறகு பார்க்க ஏதுமில்லை. அடையாளம் குறித்த சிதைவுகளுக்கு நாம் சாட்சியாக நிற்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் பேச புதிதாக ஏதும் இல்லாத நிலையில் வரலாற்றின் இறுதியில் நிற்கிறார்கள். என்னுடைய படங்கள் தனிப்பட்ட ஆழமான என்பதைத்தாண்டியுள்ளது என்று எண்ணுகிறேன். அவற்றில் வரும் மையப்பாத்திரம் மூலம் அவற்றின் குணம், ஏமாற்றம், கனவுகள் ஆகியவற்றை வெளிப்படுத்த முனைகிறேன். தேனீக்காவலர் படம் அந்தமுறையில் அமைந்தது என்று குறிப்பிட முடியும். தனிப்பட்ட தொழில்முறையிலான சிக்கலிலும் அப்போது நான் சிக்கியிருந்தேன். நீங்கள் கூறியது போல, நான் நிலையான வாழ்வை நிர்ணயித்துக் கொண்டு விட்டதாக நினைக்கவில்லை. என்னுடைய பொறுப்பு குறித்து கவனமாக இருக்கிறேன். புரட்சி குறித்து சிந்திப்பவனாகவும் கசப்பு நிறைந்தவனாகவும் முன்பைவிட இப்போது மாறியிருக்கிறேன். குடும்பம் என்னை மாற்றிவிடவில்லை. குழந்தைகள் பிறப்பின் அர்த்தம் என்பது  எதிர்காலம் குறித்து சிந்திப்பதுதான். மூடுபனி நிலம் படத்தின் கதையை எழுதி முடித்தபின் பனியில் அவர்கள் தொலைந்து போகும் பகுதியை என் மகளுக்கு வாசிக்கக் கொடுத்தேன். அவள் அதை படிக்கும்போது அவள் கண்ணில் தெரிந்த சோகத்தை என்னால் மறக்கவே முடியாது.  இது குறித்து அவளின் அம்மாவும் ‘அந்தப் பெண் செய்தது சரியே என்று கூறினாள்.  இதுதான் உண்மை. நான் அதற்கு மேல் புதிதாக எதையும் உருவாக்கிவிடவில்லை. பெரும் ராட்சத கற்களிலான அரக்கர்கள் பார்வையாளர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தி பின் சுபமாக நிம்மதி கொடுத்து முடியும் கதைகளை இன்று யாரும் எழுதுவதில்லை. வீடு எங்கேயிருக்கிறது? அவளது அப்பா எங்கேயிருக்கிறார்? என்று ஓயாமல் எனது மகள் கதையைப் படித்ததிலிருந்து கேள்வியாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு நான் எனது பாணியில் முடிவை திரையில் மரமாக காட்டினேன். என்னுடைய படங்களில் வெளிப்படுத்தப்படுபவையும் உலகில் நடப்பனவற்றையும் குறிதுத கவனமாக இருக்கிறேன். நான் போர்ஹேஸ் போல் என் நண்பர்களுக்காகவும், நேரத்தைக் கடத்துவதற்காகவும் எழுதி படம் இயக்குகிறேன்.

போர்ஹேஸ் தன் நண்பர்களை குறித்து பேசத் தொடங்குகிறார், அவர்கள் சிலர், நூறு, ஆயிரம், கோடி என்று கூட இருக்கலாம். வியட்னாமிய மனிதரைச் சந்தித்துப் பேசியது பல்வேறு கருத்துகள் எனக்குள் உருவாக உள்ளார்ந்த தூண்டுதல் கிடைக்க உதவியது. இந்த முறையில் அவை இருமுறை நிகழ்ந்தன. ஒருமுறை மான்ட்ரியலில் நடந்தது; இரண்டாவது பல்காரியாவில் நான் சந்தித்த பெண்ணின் மூலம் நடந்தது. அவளின் அப்பா கிரீக் தேசத்தவர், அம்மா ரஷ்யன் ஆவார். எனவே இந்தப் பெண் எங்கு சென்றாலும் அவளின் மனதில் தான் ஒரு நாடோடி என்று தோன்றியிருக்கிறது. சிதெராவிற்குப் பயணம், படத்தின் ஒவ்வொரு நுட்பத்தையும் கவனித்துப்பார்த்து அது அவள் தந்தையின் வாழ்க்கையைப் போலவே இருக்கிறது என்று கூறினாள். இங்கே இன்னுமொரு விஷயத்தையும் கூறவேண்டும். வடக்கு கிரீசில் இந்தப்படத்திற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேடி நான், ஒளிப்பதிவாளர், அரங்க வடிவமைப்பாளர் என மூவரும் தேடிச்செல்கையில்தான் அந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது.  

      மலைகள் சூழ்ந்த அக்கிராமத்தில் மனச்சோர்வோடு தொலைந்துபோய் விட்டோமா என்று அச்சத்தோடு கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தோம். சிறு குடியானவர்கள் எங்களுக்கு வழிகாட்டினார்கள். அவர்கள் தங்கள் பண்ணை ஆடுகளுடன் பனிக்காலம் வருவதற்குள் கிளம்பும் முனைப்பில் இருந்தார்கள். அதில் சிலர் மட்டுமே அக்கிராமங்களில் கோடைக்காலம் வரை அந்த இடத்தினைப் பாதுகாப்பதற்காக தங்கி இருப்பார்கள். அவர்கள் கிளம்பிச்செல்வதற்கு முன் விருந்து ஒன்றினை நடத்துவார்கள். நாங்கள் சென்றபோது பெரும்பாலானோர் கிளம்பி சென்றிருந்தனர். எஞ்சியிருந்த சிலரும் நடந்து வந்த எங்களை பேய்கள் போல பார்த்தனர். அரங்க வடிவமைப்பாளர் கடுமையாக சோர்ந்துபோய் இதற்கெல்லாம் நான்தான் காரணம் என்பதுபோல் பார்க்கத் தொடங்கியிருந்தார். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பற்றிக் கூறவே வேண்டாம். எங்களது உரையாடல்களை கேட்டுக்கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவர், ‘நீங்கள் உண்மையிலே ஏஞ்சலோ பவுலோஸா? என்று கேட்டார். ஆம் என்றதும்,  அவர் என்னுடைய அனைத்து படங்களையும் பார்த்திருப்பதாகவும், அவரருகில் அமர்ந்திருந்த இன்னொருவரிடமும் ஒரு பெண் தன் கணவனைக் கொல்லும் காட்சி வரும் என்னுடைய படத்தினைப் (மறுகட்டமைப்பு)   பற்றிக் நினைவிருக்கிறதா என்று கேட்க தொடங்கினார். தங்களது வட்டார வழக்கில் இருவரும் படத்தினைப் பற்றிப் பேசத்தொடங்கிய அவர்கள் அந்தக் கதை தங்கள் ஊரில் சாதாரணமான ஒன்றுதான் என்று கூறினார்கள். நான் கூறிய படத்தின் விஷயங்களின் அத்தியாயங்களிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அவர்கள் என்று பின்னர் புரிந்துகொண்டேன்.


      இப்படி எதிர்வினைகள் உலகத்தில் பல்வேறு மூலைகளிலிருந்து வருவது கலைஞன் ஒருவனுக்கு மிக முக்கியமாகும். இது அவர்களுக்கு பேராசையை திருப்திபடுத்தி, திரைப்படச்சீட்டுகளை அதிகமாக விற்க வைக்கலாம். என்னைப் பொறுத்தவரை என்னுடைய படம் வீணாக்கவில்லை. ஒரு வழியில் மற்ற மனிதர்களை எல்லைகள் தாண்டி கடல்தாண்டி சிந்திப்பதும் உணர்வதும் ஒன்றுபோல இருக்கும் மனங்களை அடைந்து இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியே. 

பிரபலமான இடுகைகள்