உரையாடல்போல அமைதியும் பொருள் கொண்டதுதான் -3














குறிப்பிட்ட மையக்கருத்துகளே உங்களது படத்தில் திரும்ப வருகின்றன. வாழும் நிலப்பரப்பின் மீதான காதல் கொண்ட மக்கள், வட கிரீஸ் பகுதியைச்சேர்ந்த மக்கள் திருமணம் சாரந்த கொண்டாட்டங்களைக் கூறலாம்.

      இறுதிக் கேள்விக்கான பதிலாக நான் மூன்று மகள்களை பெற்றிருக்கிறேன் ஆனால் இன்னும் மணம் புரியவில்லை. ப்ராய்டின் தத்துவப்படி என் வாழ்வில் இழந்ததை படத்தில் ஈடு செய்ய நினைக்கிறேனோ என்னமோ? எப்படியாயினும் இவற்றை நான் படத்தில் திரும்ப திரும்ப பயன்படுத்தி வருகிறேன். சிறுவர்கள் (அ) இளமையான மனிதர்கள் போலவே செய்கிறேன். இது முக்கியமானதுதானா என்று தெரியவில்லை. சினிமா விமர்சகர்கள் என் படத்தில் 80 காட்சிகள் இருப்பதாக கூறுவார்கள். எத்தனைக் காட்சிகள் படத்தில் உள்ளன என்பதை நான் அறிவேன். ஆராய்ச்சியாளர்கள், சினிமா ஆய்வாளர்கள் தாண்டி இது யாருக்கேனும் அர்த்தமுடையதாக உள்ளதா? 80 காட்சிகள் என்பதற்குப் பதில் 85 இருந்தால் என்ன வேறுபாடு இருக்கப்போகிறது?

எப்படியாயினும் ஆராய்ச்சியாளர்கள் உங்களுடைய இந்த கருமையான படத்தைக் குறிப்பிட எந்தத் தேவையும் இல்லைதான். அனைத்து காட்சிகளும் கடும் பழுப்பு நிறத்தில் அமைந்துள்ளன. அனைத்திலும் முன்னே நிற்பது இந்த நிறம்தான்.

      இந்த விஷயத்தில் எனது தவறை ஒப்புக்கொள்கிறேன். கேன்ஸ் விழாவில் திரையிடுவதற்காக படத்தின் பிரதியை உருவாக்கும்போது ப்ரொஜெக்டரின் ஒளி அடர்த்தியை கணிக்காமல் விட்டுவிட்டோம். ஒளி வலிமையாக மாறியதில் நிற அடர்த்தி காட்சிகளில் கூடி வந்துவிட்டது. இப்படத்தினை எதிர்காலத்தில் திரையிடும்போது கிடைக்கும் பலன் என்னவென்றால் மூடுபனி நிலத்தை விட அடர்த்தியான பிரதியாக இருக்காது என்பதுதான். இதில் உள்ள வண்ணம் என்பது சாம்பல் நிற வண்ணத்துடன் சிறியளவிலான பச்சையும் கலந்துள்ளது.

இந்தப்படத்தினை எடுக்க வடக்கு எல்லையோர கிரீஸ் வரை சென்றிருக்கிறீர்கள். இதுவரை தாங்கள் செய்யாத முறையில் வெளிநாடு சென்று அடுத்தபடத்தை உருவாக்கும் திட்டமிருக்கிறதா?

      வாய்ப்பு இருக்கிறது. நியூயார்க்கிற்கு இருமுறை சென்று இருக்கிறேன். அந்த இடம் என்னை மிகவும் வசீகரித்து விட்டது என்றாலும், எப்போதும் நிறைவு கொள்ளாத என் மனநிலை காரணமாக அதன் தன்மைகளை நிராகரித்துவிட்டேன். வேறுபட்ட மனித இனங்கள் தொடர்பாக அவற்றுக்கிடையேயான உறவுகள் குறித்து அங்கே ஒரு படத்தை நிச்சயமாக உருவாக்குவேன்.

அப்படி நீங்கள் படத்தை உருவாக்கினால் இயற்கையான ஒரு தொடர்ச்சியாக உங்களது பணியில் அமையலாம். இதன் முன்பு நீங்கள் செய்த படங்களில் நிலப்பரப்பு, கதாபாத்திரங்கள் கதை என அனைத்தும் கிரீக் நாட்டைச் சுற்றியே அமைந்திருந்தன. தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க் படம் இதிலிருந்து மாறுபட்டிருக்கிறது. வேரில்லாத மனிதர்கள் குறித்து பேசியிருந்தீர்கள். அவர்களது தேசிய அடையாளம் என்பது சந்தேகத்துக்குரியது. இடதுசாரி என்பது தனிப்பட்ட அடையாளம் எனலாம். அந்நாட்டிலுள்ள நிலப்பரப்பு சார்ந்து முன்னமே அதனை இறந்த காலம் என்று முடிவு செய்ய முடியாது அல்லவா?

      நான் நியூயார்க்கில் சந்தித்த மனிதர்கள் அங்கேயே வாழ்ந்து வருகின்றவர்கள்தான். அவர்கள் வேறெங்கும் வாழ் வாய்ப்பில்லை. இன்றுவரை இடம்பெயர்க்கப்பட்ட வேரில்லாத, சொந்த வீடு இல்லாதவர்கள் அவர்கள். எனவே இதற்கு மாற்றாக கிரீக் குடியிருப்பு, சிறிய இத்தாலி, சீனாடவுன், யூதர் குடியிருப்பு என உருவாக்கிக் கொள்கிறார்கள். அனைவருமே ஏன் தங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பான வேலி அமைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்?
  


பிரபலமான இடுகைகள்