தேசியக்கலாச்சாரம் தனிப்பட்ட பார்வை நிறைவுப்பகுதி -தியோ ஏஞ்சலோ பவுலோஸ்





குறியீடுகளின் மரபு குறித்த பகுதி பல குறியீடுகள் ஒன்றிணைந்ததாக உள்ளது. தேவாலயத்தில் நடைபெறும் நிகழ்வு போல ஒன்றிணைந்ததாகவே அது உள்ளது.

ஐன்ஸ்டீன் சிந்திப்பது போல உலக சினிமா சிந்திக்கிறது என அப்படங்கள் மீதான ஈர்ப்பை நாம் கூறுகிறோம். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும்  ஒத்தமைவு தொகுப்பு குறித்தவற்றை கிரிபித்திடமிருந்து பெற்றிருக்கிறோம். மான்டேஜ் – இடைவெட்டில்லாத தொடர்ச்சியான காட்சி என்பதை நான் காட்சிக்குள் இருக்கும் ஒன்றாகவே காண்கிறேன் இது ஆச்சர்யமான ஒன்றாகவே இருக்கிறது.

      என்னுடைய படங்களில் தொடர்ச்சியான காட்சி என்பது உயிர்ப்பாக இருப்பதை அதனை வெட்டுவது என்பதோடு தொடர்புடையதல்ல. இயக்கத்தோடு தொடர்புடையது ஆகும்.  தொடர்ச்சியான காட்சி என்பது படமாக்கப்படும் காட்சிகளில் உள்ள நேரம் இயக்கம் அதோடு இடைவெளியும் தொடர்புடையனவாகும். இயக்கம் மற்றும் இசை என இரண்டிற்கும் இடையேயான இடைவெளியில் இடைநிறுத்தம் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை சிந்தித்துப்பாருங்கள்.  முழுமையான விளைவு என்பதை ஏற்படுத்தும் வகையில் அவை முக்கியமானவை ஆகும். என்னுடைய படத்தின் காட்சிகள் முழுமையடைந்தனவாக உள்ளன. அவற்றின் இடையே உள்ள இடைநிறுத்தங்கள் அவற்றை ஒருங்கிணைந்த ஒன்றாக மாற்றுகின்றன. ஒருவேளை வேட்டைக்காரர்கள் படம் எனக்கு நெருக்கமான இசைப்பாடல் நிறைந்ததனால் எனக்கு பிடித்தமானதாக இருக்கலாம் எனினும் அதன் காட்சிகளில் இசைத்துடிப்புகளை பாடல் போன்று எளிதில் எண்ணிவிட முடியும்.

எள்ளல், நகைச்சுவையின் முக்கியத்துவம் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள்? உங்களுடைய பணியில் இவை தெளிவான பகுதியாக அமைந்துள்ளதா?

      எள்ளல், நகைச்சுவை குறித்து நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் எனினும் எனது படங்களில் வஞ்சப்புகழ்ச்சியாகவே நகைச்சுவை இடம்பெற்றிருக்கும்.  பனி சூழ்ந்த நிலப்பரப்பில் வைக்கப்பட்டிருக்கும் கோழிக்கறி துண்டு ஒன்றினை பசியில் வாடும் நடிகர்கள் யாரோ ஒருவர் கைப்பற்றுவதற்காக  ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள். இது வேடிக்கை போல இருந்தாலும்  அவல நகைச்சுவையான காட்சி இது. இதுபோல நிறைய காட்சிகள் படத்தில் உள்ளன. வேட்டைக்காரர்கள் படத்தில் இதுபோல காட்சிகள் இருந்தாலும் அவை மறைபொருளாக இருக்கும். 36 நாட்களில் படத்தில் இதுபோல அவல நகைச்சுவையான காட்சிகள் அதிகமுள்ளன. நாரையின் தடுக்கப்பட்ட பாதை படத்தில் நகைச்சுவை மற்றும் விளையாட்டுத்தனமாக தொலைக்காட்சிக்குழு செய்யும் விஷயங்கள்தான் படத்தின் நம்பிக்கையற்ற, விரக்தி தன்மையை குறைக்கும் வண்ணம் உள்ளன. தங்களைச் சுற்றி எவ்வளவு மோசமானவை நிகழ்ந்தாலும் அதனை அவர்கள் நல்லதாக எடுத்துக்கொள்கிறார்கள்.

கிரீசின் கிராமப்புறங்கள், வடக்குப்புற கைவிடப்பட்ட கிராமங்கள் விடியற்காலை, அந்திவேளை, பனிக்காலம் என கிரீசின் உட்புறத்தை விரிவாக காட்சிபடுத்தி உள்ளீர்கள். அது பற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா?

      ஏதேன்ஸ் நகரத்தில் வாழ்வு என்பது ஏறத்தாழ 40 சதவிகிதம் கிரீஸ் மக்கள்இங்கு வாழ்கின்றனர் என்பது சிதைவடைந்த வடிவமாதிரியாகவே கிரீக் மக்களின் வாழ்வாக காட்டப்படுகிறது. இது சுவாரசியமாக இருப்பினும் உண்மையானதல்ல. ஏதேன்ஸ் தினசரி நடைமுறை வாழ்வை அதன் பின்னால் உள்ளவற்றை அறியாமல் மாற்ற முடியாது. ஏதேன்ஸை மட்டும் கண்டீர்கள் என்றால் கிரீஸ் குறித்து தவறான கண்ணோட்டத்தையே கொள்வீர்கள். எனவேதான் நான் வேறுபட்ட கிரீஸ் குறித்து காட்சிபடுத்த முயன்றேன். இந்த ஏதேன்ஸ் குறித்த உண்மையை திறந்துகாட்ட முயன்றேன். மேலும் ஜாய்ஸ் உலிசெஸ் படத்தில் டப்ளினில் செய்தது போல ஏதேன்ஸிற்காக செய்யும் விஷயங்கள் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் அது என் திட்டமல்ல. நான் அப்படிச் செய்யாததன் காரணம் இது என்னுடைய குழந்தைப் பிராயம். எனவே அதனை அழிக்க விரும்பவில்லை.

இருவகையான படங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். வேலையைப் பகிர்ந்துகொள்ளும் குழு போலான ஜான்ஃபோர்டு படங்கள், அல்லது இதன் அடுத்தப்படியாக நாயகனுக்கு அந்தியத்தன்மை தரும்படியான படங்கள். சாப்ளின் சாலை ஒன்றில் தனியாக கடப்பது போன்றதை உதாரணம் கூறலாம். இதில் நீங்கள் என்ன வகை?

      ஜான் ஃபோர்டு வகையின் அருகில்தான் நான் வருகிறேன். நாரையின் தடைசெய்யப்பட்ட பாதை படத்தில் டெலிபோன் கம்பத்தில் ஏறி இணைப்புகளை பலர் ஏற்படுத்த முயலும் காட்சி மக்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் தொடர்பில் இருக்க விரும்பும் முயற்சிதான்.

உங்களது படங்கள் கடல் அல்லது விண்வெளி உள்ளிட்ட பயணங்கள் குறித்தவையாகவே உள்ளன. தங்கள் படங்களில் வரும் முக்கியமான இந்த கருத்துரு குறித்து விளக்குங்களேன்.

      மூடுபனிநிலம் படத்தில் இரு சிறுவர்கள் அப்பாவைத் தேடிச்செல்கிறார்கள் என்று சுருக்கிவிட முடியாது. வாழ்க்கை தொடங்குவதற்கு ஒரு புள்ளியாய் அந்தப் பயணம் அமைகிறது. அன்பு, மரணம், பொய், உண்மை, அழகு, அழிவு என அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள்.

      பயணம் என்பது வாழ்க்கை நமக்குத் தருகிற விஷயங்களை நோக்கி கவனம் குவிக்கச்செய்கிறது. சிதெராவிற்குப் பயணம் படத்தில் பயணம் என்பது முன்னதாகவே ஒடிஸியஸ் குறித்த புனைவை மறு உருவாக்கம் செய்து உருவாக்கப்படுகிறது. ஹோமருக்கு முன்னால் எழுதப்பட்ட இந்த முறை தாந்தேயின் வடிவிலான தன்மையோடு ஒத்துப்போகிறது. இதில் ஒடிஸியஸ் குதாகா வந்து சேர்ந்த பின்பு மீண்டும் பயணம் செய்வதாக கதை நகருகிறது

நிகோலஸ் கஸண்ட்ஸாகிஸ் இந்தப்புனைவை தி ஒடிஸி: நவீனத் தொடர்ச்சி என்று மாற்றி வெளியிட்டிருப்பார். எனவே படமானது வீடு திரும்புதல் என்பதைத் தாண்டி விலகிச் செல்கிறது. தொன்மையான எடுத்துக்காட்டுகள் மீது எனக்கு ஆர்வமுண்டு. அவை உண்மையிலேயே புதிதானவை இல்லை. தொன்மையான எழுத்துக்களிலிருந்த திருப்புதல்கள், மறுதீர்மானங்களை  உருவாக்கிக் கொள்கிறோம்.



பிரபலமான இடுகைகள்