இடுகைகள்

சூரிய வெப்பம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் முறைகளும், அதன் கண்காணிப்பும்! - அறிவியல் அறிவோம்

படம்
  அறிவியல் எப்படி வேலை செய்கிறது? அறிவியல் என்பது தகவல்களை சேகரித்து வைக்கும் தொகுப்பு என பலரும் நினைக்கலாம். அப்படியல்ல. புதிய விஷயங்களைக் கண்டுபிடித்து அதனை சோதித்துப் பார்ப்பது அறிவியலின் முக்கியமான இயல்பு. அறிவியலாளர்கள் புதிய சிந்தனைகளை வைத்து கணிப்புகளை உருவாக்கி சோதிக்கின்றனர். அறிவியல் ரீதியாக சிந்தனைகளை சோதித்துப் பார்ப்பதை அறிவியல் முறை என்கிறார்கள். ஆங்கிலத்தில் சயின்டிஃபிக் மெத்தட். கவனித்தல் அல்லது கண்காணித்தல் அறிவியல் முறையில் அடிப்படையே, ஒன்றைக் கண்காணித்தல்தான். பூக்கள் தோட்டம் வைத்திருந்தால் இந்த முறையில் சூரிய வெளிச்சம் படுவதை எளிதாகப் பார்க்கலாம்.  இப்படி கண்காணித்தலை ஹைப்போதிசிஸ் என்று கூறுகிறார்கள். ஒரு பொருளை, தாவரத்தைக் கண்காணிப்பதை விளக்குவதுதான் ஹைப்போதிசிஸ். மண் சூரிய வெப்பத்தைப் பெற்று கதகதப்பாக இருப்பதை கண்டறிவது இந்த வகையில் சேரும்.  ஒரு தாவரம் வளருவதற்கு சூரிய வெளிச்சம் முக்கியமானது. அதை சூரிய வெளிச்சம் உறுதி செய்கிறது. தோட்டத்தில் மூடாக்கு போட்டு செடிகளை வளர்ப்பவர்கள் செயற்கையான முறையில் பல்புகளை எரிய விட்டு செடிகளை வளர்ப்பார்கள். குறிப்பிட...

வினோதரச மஞ்சரி - சிவப்புநிற பனி, டைனோசர் தூக்கம்

படம்
  தெரியுமா? சிவப்புநிற பனி! துருவப்பகுதிகளில் உள்ள மலைகளில் சிவப்பு நிற பனியைப் பார்க்கலாம். இதற்கு வாட்டர்மெலன் ஸ்னோ (Watermelon snow) என்று பெயர். இந்த பனி உள்ள இடத்தில் பழவாசனையை உணரலாம். வாசனையை உணர்ந்து, ஆவலோடு உடனே பனியை எடுத்து சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்.  பனியின் சிவப்பு நிறத்திற்கு காரணம், அதிலுள்ள க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் (Chlamydomonas nivalis) என்ற பாசிதான். கோடைக்காலத்தில் பாசி தன்னை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சிவப்பு நிறத்தை உற்பத்தி செய்கிறது. சிவப்புநிறத்திற்கு கரோட்டினாய்ட் வேதிப்பொருளே காரணம்.  க்ளாமிடோமோனாஸ் நிவாலிஸ் பாசி உருவாக்கும்  சிவப்பு நிறம் சூரிய ஒளியை பிரதிபலிக்கும் திறன் கொண்டதல்ல. இதன் காரணமாக, வெப்பத்திலிருந்து பாசி தன்னைக்காத்துக் கொண்டாலும் அங்குள்ள பனி உருகுவதை தடுக்க முடிவதில்லை.  டைனோசர் தூக்கம் டைனோசர் எப்படி தூங்கியிருக்கும்? தரையில்  அல்லது உட்கார்ந்தபடியே தூங்குமா என யோசித்தால் வினோதமாக இருக்கிறது. இதற்கு உறுதியான பதில்களை சொல்லுவது கடினம்.  12 கோடியே 50 லட்சம் ஆண்டுகள் தொன்மையான பறவைகளுக்கு ந...

கடலின் தனித்துவம் அறிவோம்!

படம்
  கடலின் தனித்துவம்! கடலில் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது பற்றி உலக பொருளாதார கூட்டமைப்பு, தி ஓசன் எகானமி  2030 என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில அம்சங்கள் இதோ.. நிலப்பரப்பை விட கடற்பரப்பு பெரியது. சூழல் அமைப்பும், உயிரினங்களும் வேறுபட்டவை. கடல் பரப்பில் உள்ள எல்லைகளும் நாடுகளுக்கு நாடு மாறுபடும்.  கடலில் உள்ள நீரில்,  ஒளிபுகும் தன்மை குறைவாகவே இருக்கும். கடல்படுகைகளை செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பதும் பல்வேறு சவால்களைக் கொண்டது.  கடல் பரப்பில் சூழல் பாதுகாப்பு திட்டங்களை திட்டமிடுவது, அதனை வரைபடமாக்குவது, மேலாண்மை செய்வது கடினம்.  கடல் நீரில் மாசுபாடு எளிதாக பிற இடங்களுக்கு பரவும். வேறு இனங்களைச் சேர்ந்த தாவர இனங்கள் இதன் வழியாக எளிதாக பரவ வாய்ப்புள்ளது.  கடல்வாழ் உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பு சவால்களைக் கொண்டது.  சட்டவிரோதமான செயல்பாடுகளை தடுப்பது கடினம். கடல் பரப்புக்கு உரிமை, பொறுப்பு என வரையறுப்பது சிக்கலானது.  புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வந்தால், மனிதர்கள் கடலில் வாழ்வது சாத்தியமாகலாம்.  ...