இடுகைகள்

ஆனந்த் மகிந்திரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உதயமாகும் பேரரசன் - ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  ஆனந்த் மகிந்திரா வாகனத்துறையில் வேகமாக முன்னேறி வரும் தொழிலதிபர். தொடக்கத்தில் இரும்பு உற்பத்தி ஆலையாக தொடங்கப்பட்ட மகிந்திரா இன்று 20க்கும் மேற்பட்ட துறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. உள்நாடு, வெளிநாடு என அனைத்து இடங்களிலும் வருமானத்தை பெருக்கும் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் உள்ளவர்தான், ஆனந்த் மகிந்திரா. ட்விட்டரில் தொடர்ச்சியாக மக்களிடம் உரையாடி அவர்களின் எண்ணங்களை தெரிந்துகொண்டு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார். அவரின் சிந்தனைகள் எப்படியானவை, நோக்கம் என்ன, வெற்றி சூத்திரங்கள் என்ன என்பதை அறிய நீங்கள் இந்த நூலை வாசித்தே ஆகவேண்டும்.. அமேசான் வலைத்தளம் https://www.amazon.in/dp/B0BSLYLGBB

உதயமாகும் பேரரசன்- ஆனந்த் மகிந்திரா - புதிய மின்னூலின் அட்டைப்படம்

படம்
 

மலிவுவிலை ட்ரெட்மில் சாதனை! - ஆனந்த் மகிந்திரா பகிர்ந்த காணொலி

படம்
  முக்கியமான கண்டுபிடிப்பு விருதை பல்வேறு தொழில் நிறுவனங்களும் வழங்கத் தொடங்கியுள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் முக்கியமான உதாரணம். கவின்கேர். இந்த நிறுவனம், சின்னி கிருஷ்ணா என்ற தங்களது குடும்ப தொழில் முன்னோடியின் பெயரில் சுயதொழிலில் சாதிப்பவர்கள், தொழிலுக்கான ஐடியாக்களைக் கொண்டிருப்பவர்களை ஊக்குவித்து விருதுகளை வழங்குகிறார்கள்.இப்படி செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன.   ஒன்று, சுயதொழில் ஆர்வம் கொண்டவர்களுக்கு பண உதவியும், பெரு நிறுவனத்தின் வலைப்பின்னல் வழியாக பொருட்களை விற்பதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. அடுத்து, பெரு நிறுவனம் பல்லாண்டுகளாக தான் செய்யும் தொழிலில் பணம் சம்பாதித்து இருக்கும். ஆனால் புதிய சிந்தனைகள், பொருட்கள் கிடைத்தால்தான் தொழில் நிறுவனங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். இதற்கு சுயதொழில் முனைவோர்களின் சிந்தனையும், பொருட்களும் நிறுவனத்திற்கு பேருதவியாக அமையும்.   பெரு நிறுவனங்களுக்கு இப்படி வறுமையான நிலையில் உள்ள சுயதொழில் முனைவோர்களுக்கு உதவுவதன் வழியாக அவர்களுக்கு சமூக அளவில் நல்ல பெயர் கிடைக்கிறது. அதாவது, பெரு நிறுவனத்திற்கு சிறந்த நன்மதிப்பு. பிராண்டிங். அதேசமயம்

மக்களின் நம்பிக்கையை பெறுவதே முக்கியம் - ஆனந்த் மகிந்திரா

படம்
  மகிந்திரா நிறுவனம் நேர்காணல் ஆனந்த் மகிந்திரா முதலீட்டாளர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து பெரும்பாலான தொழில்கள் நடைபெறுகின்றன. இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதைப பற்றி தங்கள் கருத்து என்ன? 2007-2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. நிறைய பெரிய நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால் மக்களுக்கு பெரு நிறுவனங்கள் என்றாலே நம்பிக்கை வைக்க முடியாது என நம்பத் தொடங்கினர். பிறகுதான், மெல்ல நிலைமை மாறியது. கோவிட் -19 ஏற்பட்ட காலம் மீண்டும் நிறுவனங்களுக்கு சோதனையான காலகட்டம். பெரிய நிறுவனங்கள் நடப்பு நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவிப்பது சாத்தியமில்லை. இதில் சில நிறுவனங்களிடம்தான் டிவி சேனல் அல்லது பத்திரிகைகள் உள்ளன.      நிறுவனத்தின் தேவை, லட்சியம் பற்றி மக்களுக்கு தெரிய வேண்டும். முதலீட்டாளர்களுக்கும் விளக்கி விடுவது நல்லது. இப்படி எதையும் கூறாதபோது மக்கள் நிறுவனங்களை நம்ப மாட்டார்கள். இதனால் தொழில் சரிவுக்கு உள்ளாகும். முதலீட்டாளர்களுக்கு செலவிட்ட பணம் திரும்ப கிடைக்காது. சில நிறுவனங்கள் ஊடகங்களைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் லாபம் பெற முயல்கிறார்கள். ஆனால் நீ

மகிந்திரா நிறுவனத்தை அடித்தளமிட்டு உருவாக்கிய இரண்டு சகோதரர்கள்!

படம்
  இடமிருந்து வலம் - கே சி மகிந்திரா, ஜே சி மகிந்திரா, குலாம் முகமது வீடு, தொழிற்சாலை என கட்டுமானங்களுக்கு அடித்தளம் சரியாக அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் அதனை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கட்ட முடியும். அடித்தளம் என்பது கட்டிடம் எங்கு எழும்புகிறதோ அங்குள்ள மண், இயற்கைப்பேரழிவு ஆபத்துகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு அமைக்கின்றனர். ஒரு நிறுவனத்தை தொடங்குபவர் உயர்ந்த லட்சியத்திற்காக, வானுயர்ந்த நோக்கத்தை கருத்தில் கொண்டு உருவாக்குகிறார். அடுத்து தலைமை பதவிக்கு வருபவர், நிறுவனரின் லட்சியத்தை மேம்படுத்துகிறார். விரிவுபடுத்துகிறார். இப்படி தலைமை   பதவிக்கு வருபவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நல்லது. குடும்பம் என்பதை விட திறமையே முக்கியம். இதற்கு எடுத்துக்காட்டு   வேண்டுமெனில் வெளிநாடுளில் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் நிறுவனங்களை அடையாளம்   கூறலாம். இந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பை வகிப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது குடும்பத்தில் பெண் எடுத்தவர்களாக இருக்கிறார்கள். பல்வேறு தலைமுறைகளாக நிறுவனம் நிலைத்து நிற்க அர்ப்பணி

மக்களின் மனதைப் புரிந்துகொள்ள முயலும் தொழிலதிபர் - ஆனந்த் மகிந்திரா

படம்
  இந்தியாவில் தற்போது பொதுமக்களோடு அதிகம் உரையாடிக் கொண்டிருக்கும் தலைவர் யாரென   நினைக்கிறீர்கள்? அமெரிக்காவில் இதுபோல இயங்கும் சர்ச்சை கிளப்பும் தலைவர் ஒருவருண்டு. அவர் எலன் ம|ஸ்க் என அனைரும் தெரிந்துகொண்டிருப்பீர்கள். இந்தியாவில் எலன் ம|ஸ்கையொத்த பல்வேறு பரிசோதனை முயற்சிகளை செய்துகொண்டிருப்பவர் இவர் ஒருவரே…. அவர்தான் ஆனந்த் மகிந்திரா. இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலதிபர்கள் யாரும் வெளிப்படையாக தங்கள் கருத்தை எங்கும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். என்ன காரணம்? அரசியல் கட்சிகள் அதை வைத்து அவர்களது தொழிலை நசித்து விடுவார்கள் என்பதுதான்   முக்கியமான காரணம்.   ஆனந்த் மகிந்திரா இந்தவகையில் அரசியல் என்பதைப் பற்றி கவலைப்படாமல் நம்பிக்கையான மனிதர்கள், அவர்களைப் பற்றிய வீடியோ என பகிர்ந்துகொண்டு   ட்விட்டரில் இயங்கி வருகிறார்.   ஆனந்த்   நாள்தோறும் ட்விட்டரில் பகிரும் வீடியோக்களைப் பார்க்க பகிரவே நிறைய மனிதர்கள் ட்விட்டரில் அவரைப் பின்தொடர்கிறாரகள். மகிந்திரா நிறுவனம் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2022ஆம் ஆண்டோடு 77 ஆண்டுகளை   நிறைவு செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் 75 ஆண்டுகளை நிறைவு செய்தது. மகிந்