இடுகைகள்

மேன்ஷன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புங்கமர நிழலாக பூக்கும் காதல்- கடிதங்கள் - கதிரவன்

படம்
  வெயிலுக்கு புங்க மர நிழல் ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலம் . மழை பெய்தாலும் பத்திரிகைகளுக்கு விடுமுறை கிடையாது . வேலை செய்தே ஆகவேண்டும் . நாமும் ஆபீஸ் போயே ஆகவேண்டும் . ஆனால் அந்த நேரத்தில் வேலை செய்யும் மனநிலை வரவே மாட்டேன்கிறது . அதுதான் இருப்பதிலேயே கடினமானது . இனிய உதயம் பத்திரிகை படித்தேன் . இதில் சுரா மூன்று சிறுகதைகளை தமிழில் எழுதியிருக்கிறார் . அதாவது மொழிபெயர்த்து தமிழில் எழுதியிருக்கிறார் . பூட்டப்பட்ட வீடுகள் உறூப் எழுதிய கதை . சுகுமாரன் என்பவரைக் காதலிக்கும் உடல் ஊனமான பெண்ணின் கதை . அம்முக்குட்டி என்ற பெண்ணை அவளது பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரே ஆள் சுகுமாரன் மட்டுமே . பிறர் அவளை கேலி செய்து ஊனத்தை பட்டப்பெயராக வைத்து அழைக்கிறார்கள் . இதனால் சுகுமாரனின் மீது அம்முக்குட்டிக்கு காதல் பிறக்கிறது . அவரைப் பார்க்கும்போது கத்தரி வெயிலில் புங்கமர நிழல் கிடைத்தது போலாகிறது . அவள் தனது காதலைச் சொல்லப் போகும்போது சுகுமாரனுக்கு பெண் பார்த்துவிடுகிறார்கள் . அதற்குப் பிறகு , அம்முக்குட்டியின் நிலை என்னவானது என்பதே கதை . நன்றி ! அன்பரசு 30.11.2021 மயிலாப்பூர் -----------------

அறையில் மலராக பூக்கும் பூஞ்சை! - முருகானந்தம் ராமசாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நலமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். வரும் வாரத்தில் நாளிதழ் வேலைகள் தொடங்கவுள்ளன. தீபாவளி  அன்று தாமதமாக எழுந்தேன். இப்போது நான் இருக்கும் மூன்றாவது மாடியில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். முதலில் நான்கு பேர்கள்தான் இருந்தோம். இப்போது பக்கத்து அறையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டனர். இவர்கள் அதிகாலை 5 மணி முதல் 8.30 மணி வரை குளியலறை, கழிவறையைப் பிடித்துக்கொள்கிறார்கள். எனவே, நான் அவர்களுக்கு முன்னதாகவே எழுந்து குளித்துவிட்டு 7 மணிக்கு அலுவலகத்திற்கு சென்று விடுகிறேன்.  அந்திமழை இதழைப் படித்தேன். பெண்களின் மனத்தைப் பற்றி சிறப்பிதழாக செய்திருந்தார்கள். எழுத்தாளர் கலாப்ரியா எழுதியிருந்த கட்டுரை நன்றாக இருந்தது. நாளிதழ் வேலைகள் தொடங்கிவிட்டால் வாழ்க்கை மிக பரபரப்பாக மாறிவிடும். இப்போதே ஓரளவு எழுதி வைத்துக்கொள்ள முயன்று வருகிறேன். கிழக்கு பதிப்பகத்தில் அருகர்களின் பாதை  நூலை வாங்க வேண்டும். தீபாவளிக்கு முதல்நாள் எங்கள் அலுவலகத்தில் உள்ள கிழக்கு பதிப்பகத்திற்கு சென்றோம். அங்கு சென்றபோது ஊழிய

சுயநினைவு எங்கே போனது - மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
பொதுவாக நாம் தினசரி நிறைய நினைவுகளால் அலைகழிக்கப்பட்டு வருகிறோம். அதில் குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால் மக்களுடன் இணைந்து வேலைகளை செய்யும்போது, அது நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். நெடுநாள் பார்க்காத நண்பர், அவர் கல்லூரியில் அல்லது பள்ளியில் படித்திருப்பார். போனில் பேசிவிட்டு உடனே தன்னை அடையாளம் கண்டுபிடி என மோசமாக விளையாடுவார். இதெல்லாம் சத்திய சோதனை என்றாலும் வேறு வகை. நான் மயிலாப்பூரில் உள்ள நெருக்கடியான தெரு ஒன்றில் உள்ள மேன்ஷனில் குடியிருக்கிறேன். அங்கு புதிதாக வலம்புரி பிள்ளையார் கோவிலுக்கு பூஜை செய்யும் குழு ஒன்று வந்தது. வாடகைக்கு வந்தது ஒருவர் என்றாலும் அவருக்கு உதவி செய்ய வந்த பரிசாரகர்கள் குழு அதிகம். இவர்கள் அடிக்கடி தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருப்பார்கள். ஒருநாள் இரவு ஆபீசிலிருந்து ரூமுக்கு சென்றேன். சென்றபிறகு குளிக்கலாமே என்று தோன்றியது. நேரமே குளிக்கவில்லையென்றால் பக்கத்தில் உள்ள ஜவ்வாது மனிதர், குளியலறையை கடுப்பேற்றும் ஜவ்வாது மணம் கொண்ட பாத்டப்பாக மாற்றிவிடுவார். தலையே வலிக்கும் அளவு உடம்பில் ஜவ்வாது பூசிக்கொள்வத