நாவித காதலனுக்கு தங்கையைத் திருமணம் செய்துகொடுக்க மறுக்கும் ரவுடி அண்ணன்!
விய்யாலாவாரி கய்யாலு உதய் கிரண், நேகா ஜூல்கார ஶ்ரீஹரி நகரத்தில் படிக்கும் இளம்பெண்ணான நாயகி, நாயனை காதலிக்கிறாள். ஆனால் திருமணம் தனது ரவுடி அண்ணனின் சம்மதத்துடன் நடக்க வேண்டும் என விரும்புகிறாள். இதற்காக நாயகன், அவளது அண்ணனை சந்திக்க செல்கிறான். அவனால், திருமணத்திற்கான சம்மதத்தைப் பெற முடிந்ததா இல்லையா என்பதே கதை. பொதுவாக, தெலுங்குப்படங்களில் நிலப்பிரப்புத்துவ இயல்பை, ஆண்டான் அடிமை சமாச்சாரங்களை விசுவாசம், நேர்மையுடன் தொடர்புபடுத்தி பெருமையாக கூறுவார்களே ஒழிய, சாதி, வர்ணாசிரமம், சனாதன படிநிலையின் கொடூரங்களைக் காட்ட மாட்டார்கள். காதல் படத்தில் இருந்தாலும் அதை பெற்றோருக்கு கூறி அவர்களை ஒப்புவித்து திருமணம் செய்வதற்கு பாடுபட்டு இரண்டரை மணிநேர படத்தை ஓட்டுவார்கள். டூ ஸ்டேட்ஸ் நாவலில் சேட்டன் பகத், இந்திய சமூகத்தில் ஆண், பெண்ணைக் காதலிப்பதோடு முடிந்துவிடாது. அவனை பெண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பெண்ணை, ஆண் வீட்டாருக்கு பிடிக்கவேண்டும். பிறகுதான் திருமணம் நடைபெறும் என பகடியாக எழுதியிருப்பார். அதேதான் இங்கும் நடக்கிறது. அ...