இடுகைகள்

பிரிட்டிஷார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கிலேயர்களோடு கூட்டு சேர்ந்த பார்ப்பனர்கள், மராட்டிய கலாசாரத்தை நாடகம் வழியாக உருவாக்கிய வரலாறு!

படம்
  பார்ப்பனர்களோடு கூட்டு சேர்ந்த பிரிட்டிஷார்  மராட்டியத்தில் நடைபெற்ற தமாஷாக்களில் மகர் இன பெண்கள் நடனமாடுவது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இதை பிரிட்டிஷார், மேல்தட்டு வர்க்க இந்தியர்கள் பாலியல் தன்மையை சற்று குறைத்து இசை நடனமாக மாற்றி பல்வேறு இடங்களில் நடத்துமாறு மாற்றினர். இப்படி கூறுவதால், பிரிட்டிஷார் தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்கினர் என்றோ, அநீதியை தண்டித்தனர் என்றோ புரிந்துகொள்ளக்கூடாது. அவர்கள் வணிகர்கள். வணிகத்திற்கு பிரச்னை வராதபடி சாதி மேலாதிக்கத்தை பார்ப்பனர்களோடு சேர்ந்த கடைபிடித்து தமாஷாக்களை நடத்தினர். இதன் வழியாக சாதி மேலாதிக்கம், அதன் அடிப்படையிலான பொருளாதாரம் கட்டமைக்கப்பட்டது. 1898ஆம் ஆண்டில் இரு மகர் இன பெண்கள், தமாஷாக்களில் போட்டி நடனமிடுவது பற்றியெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது அரிதானதுதான் என்றாலும் அப்படி செய்கிறார்கள் என்றால், அவர்கள் புகழ்பெற்ற இசை, நடனக் கலைஞர்களாக உள்ளனர் என்று புரிந்துகொள்ளலாம்.  பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டில் விக்டோரியா கால ஒழுக்கம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷார், கலைகளை ஐரோப்...

இந்தியாவை பிரிட்டிஷார் சுரண்டிய வரலாறு! - இந்தியாவின் இருண்டகாலம் - சசி தரூர்

படம்
  இந்தியாவின் இருண்டகாலம் சசிதரூர் தமிழில் ஜே கே ராஜசேகரன் கிழக்கு பதிப்பகம் நூலை தொடங்கும்போது, சசிதரூர் தான் இங்கிலாந்து அரசுக்கு வைத்த கோரிக்கை ஒன்றை முன்வைத்து தொடங்குகிறார். 200 ஆண்டுகளாக காலனி நாடாக இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்டனர். இந்த ஆட்சியில் இந்தியாவை சுரண்டியதற்கு அடையாளமாக நஷ்ட ஈடு தரவேண்டும். குறைந்த பட்சம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பேசுகிறார். பின்னாளில் இப்பேச்சுக்கு ஆதரவாக எதிர்ப்பாக நிறைய கருத்துகள் எழுகின்றன.  இவற்றை முன்வைத்து நூல் மெல்ல பல்வேறு தகவல்களை பேசத் தொடங்குகிறது. அட்டையில் பிரிட்டிஷார் இந்தியாவை கொள்ளையடித்த கதை என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தான் நூலில் சொல்லுகிறார். வித்தியாசம் என்னவென்றால், பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நிறைய வசதிகளைக் கொடுத்ததாக பலரும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எதுவும் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்தது என்பதற்கு இந்தியா நிறைய விலை கொடுத்திருக்கிறது என்பதை சசிதரூர் பல்வேறு ஆதாரங்கள் வழியாக விளக்குகிறார்.  ரயில்வே, சட்டம், நிர்வாக முறைகள் ஆகியவற்றை பிரிட்டிஷாரின் கொடை என்பார்க்ள். இன்று நூலை நன்கொடை என பெரிய விலை போட்...