இடுகைகள்

சக்திகாந்த் தாஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாண்டிச்சேரியின் பசுமை பரப்பை அதிகரிக்கும் கல்லூரி முதல்வர்!

படம்
  வங்கத்தைச் சேர்ந்த கவிஞர் ரவீந்திரநாத் தாகூரை அறிந்திருப்பீர்கள். அவரது தந்தைதான் டெபேந்திர நாத் தாகூர். இவர்தான் மரங்களடர்ந்த இடத்தைப் பார்த்து அங்கு கல்வி நிலையம் அமைக்க நினைத்தார். அதன் பெயர்தான், சாந்தி நிகேதன். பாண்டிச்சேரியில் இதேபோல முயற்சி நடைபெற்றுள்ளது. இதனை தாகூர் கல்லூரி முதல்வர் சக்திகாந்த தாஸ் செய்துள்ளார். கல்லூரி வளாகத்தில் உள்ள பயன்படாத நிலம் 15 ஏக்கரில் ஏராளமான மரங்களை நட்டு அதனை வளப்படுத்தியுள்ளார். இப்போது கல்லூரி வகுப்புகளை கூட அங்கு நடத்தி வருகிறார்கள்.  தொடக்கத்தில் அங்கு மரக்கன்றுகளை நட தனது சொந்த பணத்தை செலவு செய்திருக்கிறார் சக்தி. இவர், ஒடிஷா மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். இன்று இவரின் முயற்சியை பலரும் செயல்படுத்த, 4 ஆயிரம் மரங்கள் வளர்ந்து சிறு காடாகவே நிற்கிறது.  தொடக்கத்தில் காடுகளை வளர்க்கிறோம் என்று சக்தி இருந்துவிட, உள்ளே புகுந்த மாடுகள் தாவரங்களை மேய்ந்துவிட்டு சென்றன. எனவே இப்போது இதனை பாதுகாக்கவென தனி பாதுகாவலரை ஏற்பாடு செய்துவிட்டனர். புதுச்சேரியில் தற்போது காடுகளின் அளவு 10 சதவீதம்தான். அதனை 20 சதவீதம் ஆக்கவேண்டுமென சக்தி விரும்புகிறார். அதனை தன்