இடுகைகள்

லத்தீன் அமெரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லத்தீன் அமெரிக்காவில் மக்களின் அபிமானம் பெற்ற சர்வாதிகாரி ! நாயூப் பக்லே

படம்
  கைதிகள் சிறைக்கூடத்தில்.. - எல் சால்வடோர் நாயூப் பக்லே கிரிப்டோகாயினில் அரசு பண முதலீடு மீள முடியாத சிறைவாசம் ட்விட்டரில் சர்வாதிகாரி என அறிவித்தபோது... சால்வடோரில்   உதயமான புதிய சர்வாதிகாரி கழிவறையில் அமர்ந்துகொண்டு கிரிப்டோகரன்சியில் மக்களின் வரிப்பணத்தை முதலீடு செய்வது, அரசு உத்தரவுகளை, சட்டங்களை சமூக வலைத்தளத்தில் முதலில் வெளியிடுவது, சிறைக்கைதிகளன் அரைநிர்வாண படங்களை வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றுவது, பேஸ்பால் விளையாட்டு வீரர் போல உடையணிந்துகொண்டு ஊடகங்களை சந்திப்பது என சால்வடோர் மக்களுக்கு அந்த நாட்டு அதிபர் நாயூப் பக்லே காட்டும் காட்சிகள் நிச்சயம் புதிதான். நாட்டில் அவர் செய்யும் செயல்பாடுகளை பார்ப்பவர்களுக்கு கோமாளிக்கூத்தாகவே தெரியும். ஆனாலும் மக்கள் அதை பெரிதாக எதிர்ப்பதில்லை. என்ன காரணம் என்று பார்ப்போம். நாட்டின் புகழ்பெற்ற இமாமிற்கு மகனாக பிறந்தவர், பக்லே. அவருக்கு குடும்பத்தொழிலே விளம்பரப்படங்களை எடுப்பதுதான். அதற்கென குடும்ப ம் சார்ந்த விளம்பர நிறுவனம் உள்ளது. பக்லேவின் மூன்று சகோதரர்கள்தான், இப்போது அவருக்கு அரசியல் ஆலோசகர்களாக உள்ளனர். தனது அரசியல் செயல

லத்தீன் அமெரிக்க நாடுகளை மோட்டார் சைக்கிளில் சுற்றிய சேகுவேராவின் அனுபவம்! மோட்டார்சைக்கிள் டைரீஸ்

படம்
  மோட்டார் சைக்கிள் டைரிஸ் சேகுவேரா நன்றி புக் பை வெயிட், சங்கரா ஹால், ஆழ்வார்பேட்டை, சென்னை சேகுவேரா அவரது நண்பர் ஆல்பெர்டோவுடன் செல்லும் பயண அனுபவம்தான் நூலாகியிருக்கிறது. இருவரும் மருத்துவர்கள். காசநோய் சார்ந்த பிரச்னைகளை செல்லும் இடங்களில் தீர்க்க முயல்கிறார்கள். முக்கியமாக மோட்டார் சைக்கிளில் சாலை வழியாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். சாலை வழியாக பயணிப்பது என்றாலே நிறைய பிரச்னைகள் எழும். தங்குவது, சாப்பிடுவது, வாகனம் பழுதானால் அதை சரி செய்வது, சோதனைச் சாவடி, நாட்டின் எல்லையில் ஏற்படும் இடர்ப்பாடுகள்,   பணப் பற்றாக்குறை, நோய்கள் என அனைத்தையும் எதிர்கொள்கிறார்கள். இந்த அனுபவத்தின் வழியாக பல்வேறு மனிதர்களை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நல்லவை,   அல்லவை என இரண்டு வகையாகவும் மனிதர்களையும் பார்க்கிறார்கள். அவர்களின் மூலம் பல்வேறு சலுகைகளை, சங்கடங்களை அனுபவிக்கிறார்கள். குறிப்பிட்ட தூரம் நண்பர்கள், தெரிந்தவர்கள், வனத்துறை அலுவலர்கள் என தங்கி செல்கிறார்கள். பிறகு காசு கொடுத்து சரக்கு வாகனத்தில் செல்கிறார்கள். இதில் சேகுவேரா ஆஸ்துமா நோயாளி. அவருக்கு அடிக்கடி மூ

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆட்சியைப் பிடிக்கும் இடதுசாரிகள்!

  லத்தீன் அமெரிக்க நாடுகள் பறக்கும் சிவப்புக்கொடி லத்தீன் அமெரிக்க நாடுகளில் மில்லினிய ஆண்டு தொடங்கி இடதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வென்று வருகின்றன. இங்குள்ள நாடுகள் மெக்சிகோ, ஹோண்டுராஸ், கொலம்பியா, பிரேசில், பெரு, சிலி, பொலிவியா, அர்ஜென்டினா. மெக்சிகோ ஆண்ட்ரெஸ் மானுவேல் லோபெஸ் ஆப்ரோடர் 2018 போதைப்பொருட்களை ஒழிப்பதாக சொல்லி நாட்டின் அதிபரான இடது சாரித் தலைவர். இந்த வகையில் முதல்முறையாக அதிபரான முதல் இடதுசாரி இவரே. இருபது ஆண்டுகளாக இவரே மெக்சிகோவை ஆள்கிறார். அர்ஜென்டினா ஆல்பெர்டோ ஃபெர்னான்டெஸ்   2019 சற்று மையமான இடதுசாரி தலைவர். பொருளாதார சீரற்ற நிலையில் நாட்டின் தேர்தலில் போட்டியிட்டு கடுமையான போட்டியில்தான் வென்று அதிபரானார். பொலிவியா லூயிஸ் அர்சே 2020 மார்க்சியர். தற்போது அதிபராக உள்ளவர் முந்தைய காலத்தில் ஈவோ மொராலெஸ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரத்தை உயர்த்திய பெருமைக்கு சொந்தக்காரர். சிலி கேப்ரியல் போரிக் 2021 36 வயதில் நாட்டின் அதிபரான சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டில் பணவீக்கம் அதிகரித்து ஒருவர் வாழவே அதிகம் செலவு செய்யும் நிலையை மாற்றுவதாக சொல்லி

நாங்கள் உருவாக்கிய இவலைத்தள முறையை யாருமே நம்பவில்லை! - மார்க்கோஸ் கால்பெரின், லத்தீன் அமெரிக்கா

படம்
        மார்க்கோஸ் கால்பெரின், இ வணிக நிறுவனர், லத்தீன் அமெரிக்கா சியரா நியூஜென்ட், டைம் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளை விட லத்தீன் அமெரிக்காவில் இ வணிகம் எப்படி மாறுபடுகிறது? இங்கு நாங்கள் அனைத்தையும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினோம். இ வணிகத்திற்கான அடிப்படைகளையும், போக்குவரத்துகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அப்படித்தான் உலகளவிலான போட்டியாளர்கள் இபே, அமேசானை சமாளிக்கிறோம். எங்களது வளர்ச்சியைப் பார்த்தால் ஒரே இரவில் வளர்ந்தது போல தெரியலாம். ஆனால் எங்கள் வளர்ச்சி இருபது ஆண்டுகள் உழைப்பால் உருவானது. மெர்காடோ லிப்ரே முறை எப்படி வெற்றி பெற்றது? நாங்கள் ஸ்டான்போர்டைச் சேர்ந்த இருபது லத்தீன் அமெரிக்க நண்பர்களிடையே இந்த முறையை எடுத்து சொன்னபோது, அதனை யாரும் நம்பவில்லை. ஆனால் இன்று அந்த இவலைத்த முறை வெற்றி பெற்றுள்ளது. அன்று இந்த முறையை யாரும் பார்த்ததில்லை. செயல்படுத்தியதில்லை. எனவே அதனை யாரும் நம்பவில்லை. பெருந்தொற்று காலம்  நிறைய பாகுபாடுகளை லத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது. உங்கள் வணிகம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதா? நிச்சயமாக. நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது. ப