நாங்கள் உருவாக்கிய இவலைத்தள முறையை யாருமே நம்பவில்லை! - மார்க்கோஸ் கால்பெரின், லத்தீன் அமெரிக்கா
மார்க்கோஸ் கால்பெரின்,
இ வணிக நிறுவனர், லத்தீன் அமெரிக்கா
சியரா நியூஜென்ட், டைம்
அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளை விட லத்தீன் அமெரிக்காவில் இ வணிகம் எப்படி மாறுபடுகிறது?
இங்கு நாங்கள் அனைத்தையும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினோம். இ வணிகத்திற்கான அடிப்படைகளையும், போக்குவரத்துகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அப்படித்தான் உலகளவிலான போட்டியாளர்கள் இபே, அமேசானை சமாளிக்கிறோம். எங்களது வளர்ச்சியைப் பார்த்தால் ஒரே இரவில் வளர்ந்தது போல தெரியலாம். ஆனால் எங்கள் வளர்ச்சி இருபது ஆண்டுகள் உழைப்பால் உருவானது.
மெர்காடோ லிப்ரே முறை எப்படி வெற்றி பெற்றது?
நாங்கள் ஸ்டான்போர்டைச் சேர்ந்த இருபது லத்தீன் அமெரிக்க நண்பர்களிடையே இந்த முறையை எடுத்து சொன்னபோது, அதனை யாரும் நம்பவில்லை. ஆனால் இன்று அந்த இவலைத்த முறை வெற்றி பெற்றுள்ளது. அன்று இந்த முறையை யாரும் பார்த்ததில்லை. செயல்படுத்தியதில்லை. எனவே அதனை யாரும் நம்பவில்லை.
பெருந்தொற்று காலம் நிறைய பாகுபாடுகளை லத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது. உங்கள் வணிகம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதா?
நிச்சயமாக. நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது. பாகுபாடு என்பதை பெரிய மதிப்புடையதாக நான் நினைக்கவில்லை. ஒருவருக்கு நல்ல ஐடியா தோன்றுகிறது. அதனை செயல்படுத்தும்போது நிறையபேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதனை செய்வதில் எந்த தவறும் கிடையாது. போட்டியில் சிறந்த அணி வெல்லும். மோசமான அணி தோற்றுப்போகும். சமூகமும் இந்த வகையில்தான் இயங்குகிறது.
உங்களது அடுத்த திட்டம் என்ன?
லத்தீன் அமெரிக்காவில் ரொக்க பரிமாற்றம் முடிவுக்கு வந்துள்ளதாகவே தெரிகிறது. எனவே டிஜிட்டல் வழியில் மக்களுக்கு கடன் பரிமாற்றம் செய்யும் விதமாக சேவைகளை தொடங்க உள்ளோம். பெரும்பாலான மக்கள் கடன்பெற முடியாத சூழலில் உள்ளனர். அவர்களுக்கு நாங்கள் உதவ நினைக்கிறோம்.
நீங்கள் செஸ் விளையாடுவதாக கேள்விப்பட்டோம். இது உங்களுக்கு வணிகராக எப்படி உதவுகிறது?
நான் செஸ் விளையாட்டின் ரசிகன் அவ்வளவுதான். ஆனால் இப்போது அதில் என் மகனிடம் தோற்றுவிடுகிறேன். எனவே அதன் ரசிகனாக இனியும் இருக்கமுடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக