கருப்பு பணம் காதலையும் சுமந்து வந்தால்... பிளாக் மணி லவ்(கரா பரா ஆஸ்க்) துருக்கி டிவி தொடர்

 

 

TV Review: 'Black Money Love' ('Kara Para Aşk') On Netflix ...

 

New Turkish Series: Black Money and Love

 

 

 

பிளாக்மணி லவ் (கரா பரா ஆஸ்க்)

துருக்கி டிவி தொடர்

2014-2015

164 எபிசோடுகள்

துருக்கியின் இஸ்தான் புல்லில் வாழும் அஹ்மது டெனிஸர். தனது மகள் எலி்ப் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டுவிட்டு ஆபீசிற்கு நள்ளிரவில் செல்கிறார். செல்லும் வழியில் காரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவருடன் அவரது மகள் வயதில் இளம்பெண் ஒருவரும் இருக்கிறாள். இந்த வழக்கை  ஹூசைன் டெமிர் என்ற இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். அங்கு லீவுக்கு வான் நகரிலிருந்து அவரது தம்பியும், குற்றப்பிரிவு கேப்டனுமான உமர் டெமிர் வந்திருக்கிறார். நாட்டிலேயே ஸ்மார்டான சிறந்த போலீஸ் அதிகாரி அவர். தனது காதலியை திருமணம் செய்துகொள்ள நினைத்துள்ள நேரத்தில் அவரின் பணிக்காக  பாராட்டி விருது வழங்கப்படுவதோடு ஒரு மாத காலம் சம்பளத்தோடு விடுமுறையையும் அரசு வழங்குகிறது. அதில்தான் இஸ்தான்புல்லிலுள்ள தனது அம்மா, அண்ணன் குடும்பத்தை பார்க்க வந்திருக்கிறார் உமர் டெமிர். 

The Black Money Love tv series did a great job!

அஹ்மது டெனிஸர் கொல்லப்பட செய்தி வயர்லெஸில் சொல்லப்பட, அண்ணன் ஆபீசில் ஆர்டா என்ற நண்பனோடு பேசிக்கொண்டிருக்கிறார் உமர். ஆர்டா அந்த வழக்கு தொடர்பாக பேசிக்கொண்டே  கிளம்பும்போது, உமரையும் சரி நீயும் வா என்று அழைக்கிறார். அங்கு சென்றபிறகுதான் உமருக்கு தெரிகிறது. இறந்துபோன தொழிலதிபரோடு தனது காதலியும் காரில் இருந்திருக்கிறாள் என்று. ஆர்தா, ஹூசைன் டெமிர் உட்பட பலரும் அவரது காதலி பற்றி மோசமான கருத்துகளை பேச, கடுங்கோபம் கொள்ளும் உமர் அந்த வழக்கை தானே எடுத்து தீர்க்க நினைக்கிறான். அதில் அவன் எலிஃப் டெனிஸர் என்ற கொலையுண்ட அஹ்மது டெனிஸரின் மகளுடன் இணைந்து விசாரிக்கிறான். எலிஃப்புக்கு தன் தந்தையை யார் கொன்றார்கள் என்று தெரியவேண்டும்.  உமருக்கு காதலியை யார் கொன்றார்கள் என்று தெரிய வேண்டும். கூடவே அவர் வைத்திருந்த வைரங்களும் தேவைப்படுகிறது. மேலும் இதில் கருப்பு பண விவகாரமும் உள்ளது. 

Black Money Love é uma nova série que chegou hoje à Netflix
உமருக்கும், எலிஃபுக்குமான சந்திப்பு மெல்ல இருவர் மனதிலும் நினை

த்து பார்க்கமுடியாத காதலை, அன்பை உருவாக்குகிறது. காதலி வழக்கை ஆராய்கிறோம். ஆனால் நமது மனது எலிஃப் பக்கம் சாய்கிறதே என நினைக்கும்போது எலி்ப் யோசிப்பதேயில்லை. நச்சென இச்சொன்றை கொடுத்து முதலில் காதலை டிக்ளர் செய்கிறாள். ஆனால் உமர் எதுவும் சொல்வதில்லை. இதனால் எரிச்சலாகும் எலிஃப் செய்யும் டார்ச்சர் நாடகத்தால் உமரும் ஐம் இன் லவ் என பதிலுக்கு இறுக்கி அணைத்து உம்மா தந்து காற்றில் காதல் வாசத்தை பரவ விடுகிறார். 

கருப்பு பண விவகாரத்தில் சிக்கிய தொழிலதிபரின் மகளுக்கும், நேர்மையான காவல்துறை அதிகாரிக்கும் இடையில் நடக்கும் பாஸ்பரஸ் ஆக்சிஜன் போலான காதல், என்னவானது என்பதை 20 எபிசோடுகள் வரை சுவாரசியமாகவும் அதற்குப் பிறகு ஐய்யோடா சாமி எனும்படி காட்சிகளை இழு இழுவென இழுத்து சொல்லியிருக்கிறார்கள்.

 

டிவி தொடராக க்ரைம் டிராமா என்பது புதுசு. சுவாரசியமாக சில இடங்கள் இருந்தாலும் நீதி தோற்பது, அனைவரும் ஊழல் செய்வது, காவல்துறை காதலன் காதலுக்கு ஒகே, கல்யாணத்திற்கு கறைபடாத மணமகன் தேவை என  எலிஃப் சொல்வது ஆகிய விஷயங்கள் மனதிற்கு நெருடலான விஷயங்கள். 

டிவி தொடர் க்ரைம் சார்ந்து இருந்தாலும் கூட ஆக்சன் காட்சிகள் ரொம்பவே குறைவு. படம் முழுக்க நம்மை ஆக்கிரமிக்கும் கதாபாத்திரங்கள் தய்யார் துந்தர்(எர்கன் கேன்), பாத்தி துந்தர் ஆகியவைதான். இரண்டுமே கருப்பான எதிர்மறை பாத்திரங்கள். அதிலும் தய்யார் துந்தார் பாத்திரத்தின் வலிமை எப்படி இருக்கிறது என்றால், இறுதிவரை நாயகனால் வெல்லமுடியாத அளவு மனவலிமை கொண்டது. இறுதியில் நாயகனே கூட வில்லனின் குரூர மனோபாவத்துடன்தான் பழிவாங்குதலை செய்கிறான். ஆனால் அவனை விட்டு எலிஃப் பிரிந்துவிடுகிறாள். 

20 எபிசோடுகள் வரையிலான காதல் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன. பிறகு வரும் காவல்துறை காட்சிகள், திரும்ப எலிஃப் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு செல்வது, சிறை காட்சிகள், அவை பைத்தியமாக்க செய்யும் முயற்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. ஒருகட்டத்திற்கு மேல் உமர் டெமிர் செய்வதற்கு ஒன்றும் இல்லை என ஆகிவிடுகிறது. நீதித்துறை மொத்தமாக விலைபோய்விடுகிறது. அப்புறம் சாட்சிகளை வைத்து ஹேண்ட்பால் விளையாடுவதா?

உமருக்கு தன் வாழ்நாளில் முழுக்க ஒரே லட்சியம்தான். அது நேர்மையாக இருப்பதும், அந்த வழியில் வரும் உறவுகளை பேணுவதும்தான். இறுதியாக தனது காதலி எலிஃபை கைபிடிக்க தனது தொழில்வாழ்க்கையை விட்டுக்கொடுக்கிறார். ஆனால் அவரது தந்தை எப்படி இறந்தார் என்பதைக் கண்டுபிடித்து குற்றவாளியையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்து விடுகிறார். அதோடு தன் பதவியை விட்டு விலகிவிடுகிறார்.  காதலியை தேடிப்பிடித்து புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். அதோடு முடியவில்லை. குற்றவாளிகளை தண்டிக்க சாதாரண மனிதர்களாக உமரும் எலிஃபும் முயல்கிறார்கள் என்பதோடு தொடர் முடிவுக்கு வருகிறது. 

மற்றவர்களுக்கு அநீதி நடக்கிறது என்றால் பார்த்துக்கொண்டு நிற்காமல் சாதாரண மனிதர்களாக நாம் என்ன செய்யமுடியுமோ அதை செய்யலாம்  என்பதுதான் இறுதியில்  கிடைக்கும் செய்தி. 

சிறந்த டிவி தொடர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை என ஏராளமான விருதுகளை வென்றுள்ளது பிளாக் மணி லவ். காவல்துறையில் இருப்பவர்களை காதலிக்கலாம். ஆனால் அவர்களை கை ரத்தக்கறை படிந்துள்ளது. எனவே அவர்களை திருமணம் செய்யக்கூடாது என்று எலிஃப் பாத்திரம் கூறுவது ஏற்றுக்கொள்ளமுடியாததாக உள்ளது. இதனை உமர் துப்பாக்கி குண்டு பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது ஹூசைன் டெமிர் தெளிவாக எலிஃபுக்கு சொல்லிவிடுகிறார். காதலிப்பது வேறு வாழ்வது வேறு. அதிலும் போலீஸ்காரனை திருமணம் செய்துகொண்டு வாழ்வது கடினமானது என்று சொல்லி, எல்லோராலும் அப்படி ஏற்று வாழ முடியாது என்கிறார். ஆனால் எலிஃப் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 

போலீஸ்காரன் என்ற நிலையைத் தாண்டி காதலன் என்ற நிலையில் உமர் டெனிஸர் குடும்ப பெண்களை அனைத்து பிரச்னைகளிலிருந்தும் காக்கிறான். நீதியை நிலைநாட்டும் உறுதியில் தனது அண்ணன் ஹூசைனுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறான். தனது அகாடமி கால காதலி பிளஸ் தோழி ஐபெக்கை இழக்கிறான். காவல்துறையில் உமர் தலைமையிலான குழு முழுக்க டெனிஸர் குடும்பத்திற்கு தான் வேலை செய்கிறதோ எனுமளவு அத்தனை வழக்குகளையும் ஏற்று போராடுகிறார்கள். ஆனால் எலிஃப்  தய்யாரை உமர் தற்கொலை செய்துகொள்ள தூண்டியதாக கூறியதும் அமைதியான வாழ்க்கை பற்றி பேசுவதும், விட்டு பிரிவதும் உண்மையை நேருக்குநேராக சந்திக்கமுடியாமல் விட்டுக்கொடுப்பது போலத்தான் படுகிறது. 

எலிஃப்பாக நடித்துள்ள துபா பியூகுஸ்துன், உமரான நடித்துள்ள என்சின் ஆகிய இருவரும் பிரமாதமாக நடித்துள்ளனர். துபாவின் உடைகளின் தேர்வு அபாரம், அணிகலன்கள் அசத்துகின்றன. முத்தம் கொடுத்து காதலை சொல்லுவது, பிறகு உமர் அதற்கு பதில் சொல்லாததால் லெவன்ட் மூலம் காதல் நாடகம் நடத்தி பொறாமையை தூண்டி உமரின் காதலை பெறுவது, என்கிட்ட ஆர்டர் போடாதே நான் எலிஃப் என எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது, உமரின் காதல் மொழிகளில் கண்ணீர் சொரிந்து உருகுவது, நான் தப்பு செஞ்சிட்டேன்னா எதுவும் பேசாம இருக்காதே திட்டு என குற்றவுணர்வு கொள்வது  என காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்கிறார். 

உமர், வாழ்க்கை தான் நேசிக்கப்பட்டவர்களாலேயே வஞ்சிக்கப்படும் பாத்திரம். அண்ணன் செய்த துரோகங்களும் சொன்ன பொய்களாலும் உயிர்கள் பலியானதை நினைத்து வருந்துவது, செய்து கொடுத்த சத்தியத்திற்காக அண்ணனை கூண்டில் ஏற்றுவது, எலிஃபை குற்றவுணர்வு கொண்டு கல்யாணம் செய்துகொள்ள மறுப்பது, தய்யாருக்கு எதிரான வழக்கில் சாட்சிகளை பறிகொடுத்துவிட்டு விரக்தியில் அலறுவது, இறுதியில் வேறுவழியின்றி தய்யாரை கொல்லும் முடிவெடுப்பது என என்சின் அகியுரேக் அசத்தியுள்ளார். 

காதலுக்காக 


கோமாளிமேடை டீம்

 

 










 

 

 

 

 

 

 




கருத்துகள்