கோவிட் -19 காலத்திலும் தானம் அளிப்பது குறையவில்லை, கூடியுள்ளது! - கிவ் இந்தியா சர்வே

 

 

 

 Homeless Man, Beggar, Poverty, Begging, Alms

 

 

கோவிட் -19 பாதிப்பு மக்களை பிறருக்கு தானம் கொடுக்க ஊக்கம் கொடுத்துள்ளதை பெங்களூருவைச் சேர்ந்த கிவ் இந்தியா அமைப்பு தனது சர்வே மூலம் அறிந்துள்ளது.இப்போது அதற்கான டேட்டாவைப் பார்ப்போம்.

பிறருக்கு பொருட்களை வழ ங்குவதை கோவிட் 19 சூழல் ஊக்கப்படுத்தியுள்ளது என 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

கோவிட் -19 இல்லாத விவகாரங்களுக்கு நிதியுதவி அளிக்கிறீர்களா என்று கேட்டபோது, 72 சதவீதம் பேர் அதற்கு ஆம் என்று பதில் அளித்துள்ளனர். 31 சதவீதம் பேர் முன்னர் தாங்கள் நிதியளித்த பல்வேறு விவகாரங்களுக்கு தொடர்ச்சியாக நிதியுதவியை நிறுத்தாமல் செய்து வருகின்றனர்.

இதில் 24 சதவீத மக்கள் தாங்கள் செய்துவந்த விவகாரங்களுக்கான உதவியை அதிகரித்துள்ளனர்.

44 சதவீதம் பேர் தாங்கள் சமூக விஷயங்களுக்கு உதவுவது பற்றிய தெளிவான கருத்துடன் உள்ளனர்.

74 சதவீதம் பேர் வெளிப்படையான தன்மையுடன் பணம் செலவிடப்படுவது தானம் அளிப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறியுள்ளனர்.

49 சதவீதம் பேர் தாங்கள் சமூகத்திற்கு திரும்ப உதவிசெய்து நன்றிக்கடனை தீர்க்க நினைக்கிறார்கள்

பிஸினஸ் ஸ்டாண்ர்டு
கீதாஞ்சலி கிருஷ்ணா


 


 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்