வெயிலை சமாளித்து வாழும் கிரிஸ்பிஆர் எடிட்டிங் செய்யப்பட்ட பசுக்கள்!
சுற்றுச்சூழலை தாங்கும் மரபணு மாற்றப்பட்ட பசுக்கள்!
கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் மரபணு மாற்றப்பட்டு பசு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மரபணு குறைவான வெயிலை ஈர்க்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மரபணுக்களை கிரிஸ்பிஆர் மூலம் மாற்றுவது, அவற்றின் பாதிப்பை குறைக்க உதவும். இம்முறையில் கால்நடைகள் வெப்பத்தை எதிர்க்கமுடியும். அதன் நிறத்தை நீர்த்துப்போன முறையில் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலை தாக்குப்பிடிக்க முடியும் என்கிறார் நியூசிலாந்தைச் சேர்ந்த கோய்ட்ஸ் லைபிள். இவர் ஏஜி ரிசர்ச் என்ற ஆய்வுமையத்தைச் சேர்ந்தவர்.
இப்போது நியூசிலாந்தைச் சேர்ந்த பசுக்கள் 20 சதவீதம் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு கருவுறுதல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு கன்று ஈனுவதோடு அவற்றின் பால் உற்பத்தியும் பண்ணைக்கு தேவைப்படுகிறது. வெயில் நேரத்தில் கன்று ஈனுவது கடினமாகி வருகிறது.
கருப்பு நிறத்திலுள்ள கால்நடைகள் வெப்பத்தினால் அதிகம் பாதிப்பு அடைகின்றன. எனவே நிறத்தின் அடர்த்தி குறைந்த கால்நடைகள் இருப்பது அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். எனவே இதற்கு காரணமான பிஎம்இஎல் எனும் மரபணுவைக் கண்டுபிடித்தனர். கிரிஸ்பிஆர் தொழில்நுட்பம் மூலம் அவற்றின் நிறம் சார்ந்த மரபணு பிஎம்இஎல்லை மாற்றினர். இப்படி இரண்டு பசு கன்றுகள் பிறந்தன. அதில் ஒன்று நோய்த்தொற்றால் சில வாரங்களில் இறந்துவிட்டது. வெள்ளை நிறத்திலுள்ள பசு, கருப்பு நிற பசுவை விட வெப்பத்தை சிறப்பாக சமாளிக்கவும் பாலை அதிகம் தரவும் செய்கிறது.
அமெரிக்காவைச்சேர்ந்த ரீகாம்பைனடிக்ஸ் என்ற நிறுவனம் ஆங்கஸ் என்ற மரபணு மாற்றப்ப்பட்ட பசுவை உருவாக்கியது. இந்த பசு, வெப்பத்தைத் தாங்க கூடியது. சூழலுக்கு பாதிப்பு ஏறபடுத்தாமல் இறைச்சி அளவையும் அதிகம் தரக்கூடியதாக உள்ளது. வெப்பமயமாதல் பாதிப்பில் நூறுகோடிக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. இவற்றால் உலகில் ஏற்படும் பசுமை இல்ல வாயு பாதிப்பு அளவு 18 சதவீதமாக உள்ளது.
நியூ சயின்டிஸ்ட்
மைக்கேல் லீ பேஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக