குப்பை உணவுகள் நம் மனதைக் கவருவது எப்படி? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

 

 

 

Junk Food By Carlos Augusto | Politics Cartoon | TOONPOOL

குப்பை உணவுகள் எளிதாக நம்மை ஈர்ப்பது ஏன்?

காரணம் அதனை குழந்தைகளுக்கு பிடிக்கும்படி கவர்ச்சிகரமாக வடிவமைக்கிறார்கள். மேலும் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அதில் உள்ளது. இளம் வயதில் சுவைக்காக பலரு்ம் குப்பை உணவுகளையே தேர்ந்தெடுப்பார்கள். ஒருவகையில் மூளையில் உள்ள ஆக்சிடோசின் சுரப்பை குப்பை உணவுகள் தூண்டுகின்றன. எனவே இயற்கையான உணவுகளை அதிகம் எடுத்த்துக்கொள்வது முக்கியம். இன்று உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுக்க அதன் நிறம் முக்கியமான காரணமாக உள்ளது. பச்சை நிற ஆப்பிளை விட சிவப்பு நிற ஆப்பிள் கடைகளில் அதிகம் விற்றுப்போவதே இதற்கு சாட்சி. குப்பை உணவுகளில் உள்ள அதிகபட்ச கலோரிகள் பற்றி தகவல்கள் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும். எனவே, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் அறியாமல் சாப்பிட்டுவிட்டு, உடல் பருமன், இதய நோய் பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சாப்பிட்டனர். இதற்காக அலைந்து திரிவது அவசியம். அப்படி அலைந்து திரிந்தாலும் கூட உணவு கிடைக்கும் என்பதற்கான நிச்சயத்தன்மை கிடையாது. அதனால் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை கூடுதலாக சேர்ந்திருக்காது. இறுக்கமாக பின்னிய நரம்பு நாற்காலி போல உடல் ஆதிமனிதனுக்கு இருந்தது. ஆனால் இன்று அனைத்து பொருட்களும் கைக்கு எட்டும் தொலைவில் உள்ளன. ஆனால் அவற்றைத் தேர்ந்தெடுப்பதில் நாம் காட்டும் தவறால், குப்பை உணவுகளை சாப்பிடத் தொடங்கிவிட்டோம்.








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்