இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியல்! - இந்தியா டுடே இதழில் வெளியான ஆற்றல் மனிதர்களில் சிலர்...

 

 

 

 

ஷிவ் நாடார்

 

 

அசிம் பிரேம்ஜி

 

 

விராட் கோலி 

 

சக்தி வாய்ந்த மனிதர்கள்


அசிம் பிரேம்ஜி


இந்தியாவின் மூன்றாவது பெரும் மென்பொருள் நிறுவனம். 61,020 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. 1,125 கோடி ரூபாயை அசீம் பிரேம்ஜி பவுண்டேஷன் கோவிட் -19 நிவாரண உதவிகளுக்கு வழங்கியுள்ளது. அசீம் பிரேம்ஜி இப்போது சமூகம் சார்ந்த விவகாரங்களிலும், தொழில்துறை சார்ந்தும் பேசி வருகிறார்.


அசீம் பிரேம்ஜி ஸ்டான்போர்டு பல்கலையில் மாணவராக இருந்தபோது வயது 21. 1966ஆம் ஆண்டு தனது தந்தை இறந்தவுடன் நிறுவனத்தில் இணைந்தார். நடப்பு ஆண்டில் விப்ரோ நிறுவனம், 1,095 கோடி ரூபாயை டிஜிட்டல் தொழில்களில் முதலீடு செய்துள்ளது.


ரத்தன் டாடா, 82


டாடா அறக்கட்டளைக்கு தலைவர். கோவிட் -19 பிரச்னைக்கு 500 கோடி ரூபாய் உதவியை அறிவித்த நல்லிதயம் கொண்டவர். இரண்டு டஜன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். 2012இல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்து விலகினார். டாடா சன்ஸ் நிறுவனம் கோவிட் -19 நோய்த்தொற்று உதவியாக ரூ.1000 கோடி அளித்துள்ளது. எல்பின்ஸ்டோன் கட்டிடத்தில் இல்லை என்றாலும் அனைத்து சந்திப்புகளையும் விர்ச்சுவல் முறையில் நடத்திவருகிறார் ரத்தன் டாடா.


விராட் கோலி 31.


உலக கிரிக்கெட் அணியில் டாப் பேட்ஸ்மேன். ஏபிடியைப் போலவே 360 டிகிரி கேப்டன் என்று சொல்லலாம். 2019இல் 2, 445 ரன்களை எடுத்துள்ளார். 20 ஆயிரம் ரன்களை வேகமாக எடுத்த வீரர். ஐசிசி வெளியிடும் ஒருநாள், டெஸ்ட் கிரிக்கெட் டீமில் இடம்பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.


போர்ப்ஸ் பட்டியலில் 66 இடம் பிடித்துள்ள அதிக சம்பளம் பெறும் கிரிக்கெட் பிரபலம் இவர்தான். இவர் விளம்பர தூதராக இருபது பிராண்டுகளுக்கு உள்ளார் இதன் மதிப்பு, 1,733 கோடி. இன்ஸ்டாகிராமில் இவர் தனது பதிவுக்கு 1.2 கோடி ரூபாய் பெறுகிறார். ட்விட்டரில் 2.5 கோடி ரூபாய் வருமானம் பார்க்கிறார்.


விராட் கோலி பவுண்டேஷன் மூலம் டென்னிஸ், கோல்ஃப், டேபிள் டென்னிஸ், அம்பு எய்தல் விளையாட்டுகளில் திறமையுடைய 17 பேர்களை ஆதரித்து வருகிறார்.


ஷிவ் நாடார்

75


ஷிவ் நாடார், அவரது மகள் ரோஷின் நாடார் மல்கோத்ரா என இருவரும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை நிர்வாகம் செய்கிறார்கள். நிறுவன மதிப்பு 2.45 லட்சம் கோடி. நிறுவனத்தின் வருமானம் 70, 678 கோடி ரூபாயாக உள்ளது.


கடந்த ஆண்டில் சமூக செயல்பாடுகளுக்கு என ரூ. 826 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர். ஐடி நிறுவனங்களை நிர்வகிக்கும் பெண் இயக்குநர்களில் ரோஷினி முக்கியமானவர்.


சுனில் பார்தி மிட்டல்


63


இந்தியாவின் இரண்டாவது பெரும் தொலைத்தொடர்பு நிறுவன அதிபர். சிறுவயதில் சைக்கிள் பாகங்களை வாங்கி விற்று முன்னேறியவர். 18 நாடுகளில் ஏர்டெல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டிலிருந்து வருமானம் 23சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் நடப்பிலுள்ள தொலைத்தொடர்பு கொள்கைகளை விமர்சித்து பேசி வருகிறார். ஜியோ நிறுவனத்தின் முதன்மையான போட்டியாளர் இவரது ஏர்டெல் நிறுவனம்.






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்