குறுக்கெழுத்து புதிர்களும், சமூக பிரச்னைகளும் வேறுவிதமானவை! - வெய் ஹூவா ஹூவாங்
வெய் ஹூவா ஹூவாங்
முன்னாள் கூகுள் பொறியாளர், புகழ்பெற்ற குறுக்கெழுத்து திறனாளர், கணினி விளையாட்டு வடிவமைப்பாளர்.
புதிதாக கல்வி கற்க கல்லூரி செல்பவர்கள், தொழிலைத் தொடங்குபவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நாம் எடுக்கும் சரியான முடிவு என்பது எப்போதும் சரியான விளைவை ஏற்படுத்தும் என்று கூறிவிட முடியாது. விளைவுகள் என்பது அதிர்ஷ்டம், சூழல், அப்போதைய வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. நமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் ஒரு முடிவை எடுப்போம். ஆனால் அதன் விளைவு என்பது நாம் யோசித்தாற்போல அமையாது.
விளைவுகள் எப்படி இருந்தாலும் நாம் மனதில் நம்பிய விஷயங்களை பின்தொடர்ந்து செல்வதே சிறப்பானது.
இன்று உலகம் நிறைய சவால்களை சந்தித்து வருகிறது. இதுபற்றி தங்களது கருத்து என்ன?
புதிர்களையும், குறுக்கெழுத்துகளையும் உருவாக்குபவனான நான் இதைப்பற்றி என்ன சொல்லுவது? புதிர்களை உருவாக்கி அதற்கான விடையை கண்டுபிடிப்பது வேறு. நிஜமான பிரச்னைகளுக்கான தீர்வுகளை தேடுவது வேறு. புதிர்கள், குறுக்கெழுத்துகள் என்பது மகிழ்ச்சிக்கானது.
சமூக பிரச்னைகளுக்கான சரியான தீர்வு என்பது யாருக்குமே தெரியாது. கணிதம், இயற்பியல் என சில துறைகளில் கண்டறியும் முடிவுகள் இதற்கு தீர்வாக அமையலாம். சமூக பிரச்னைக்காக போராடுபவர்களுக்கு நாம் கைகொடுப்பது அவசியம். அவர்கள், சுயபிரச்னைகளுக்கு எப்படி வேகமாக தீர்வு காண்கிறார்களோ அதேபோல சமூகப் பிரச்னைகளையும் கையாள்கிறார்கள். மக்களின் ஆதரவின்றி இது சாத்தியமாகாது.
உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை வழங்குவது முக்கியம். அவர்களே கூட நாளை வெப்பமயமாதல், பெருந்தொற்று பிரச்னைகளுக்கான தீர்வைக் கண்டுபிடிக்கலாம். வரலாற்றில் செய்த தவறுகளை அறிவதன்மூலம்தான் எதிர்காலத்தில் அதுபோன்ற தவறுகளை நிகழாமல் தடுக்க முடியும்.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற குறுக்கெழுத்து புதிர்களுக்கான பகுதி ஆசிரியர் வில் ஷார்ட்ஸூடன் வேலை செய்திருக்கிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது?
குறுக்கெழுத்து போட்டிகளை உருவாக்கி, அதனை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை பிரசுரிக்கிறது என்பது ஒருவருக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயமாகவே நான் பார்க்கிறேன்.
நீங்கள் உருவாக்கிய குறுக்கெழுத்து புதிர்கள் எத்தனை முறை நியூயார்க் டைம்ஸில் பிரசுரமாகியுள்ளது?
இந்தக்கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. நான் வில்லுக்காக புதிர்களை உருவாக்கினேன். அவர் அதை ஏற்றால் பத்திரிகையில் பிரசுரமாகும். அப்படி செய்தது ஒருமுறைதான். ஆனால் அந்த புதிர் நூறு சதவீதம் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தது. நான் பெரும்பாலும் லாஜிக்காக புதிர்களை உருவாக்குகிறேன். எண்களை குறைவாகவே பயன்படுத்துகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்னர் நியூயார்க் டைம்ஸ் புதிர்களை மாற்றியமைத்து முழுப்பக்கமாக மாற்றியது. அதில் லாஜிக்கலான புதிர்களை இடம்பெறச்செய்தனர். நான் அதில் இரண்டு ஆண்டுகளாக புதிர்களை கொடுத்து வந்தேன். பக்கம் மாற்றப்பட்டு எனக்கு குழந்தை பிறக்கும் வரை என்று சொல்லலாம்.
தற்போது என்னென்ன புதிர்களை உருவாக்கி வருகிறீர்கள்?
திங்ஃபன் என்ற நிறுவனத்திற்காக புதிர்களைக் கொண்ட மெக்கானிக்கல்பொம்மைகளை உருவாக்கி வருகிறேன். இதில் மிகவும் புகழ்பெற்றது, ரஷ் ஹவர் என்ற விளையாட்டுதான். நான் இவர்களோடு பத்து ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறேன்.
தற்போது என்ன நூல்களை வாசித்து வருகிறீர்கள்?
நான் சிறுவயதில் ஐசக் அசிமோவின் நூல்களை வாசித்து வந்தேன். பிறகு நிறைய புதிர் நூல்களை படிக்கத் தொடங்கினேன். இவற்றை படித்தேன் என்று கூறமுடியாது. நாவலைப் படிப்பதும் புதிர் நூல்களை படிப்பதும் வேறுவேறு. நான் இப்போது பெரும்பாலும் இணையத்தில் செய்திகளை படிக்கிறேன். வாக்ஸ்.காம் என்ற தளத்தை தொடர்ந்து படிக்கிறேன். அதில் அரசியல் சார்ந்தி விஷயங்களை அறிந்துகொள்கிறேன்.பைவ்தேர்ட்டிஎய்ட்.காம் என்ற வலைத்தளத்தை அவர்கள் தரும் தகவல்களுக்காக படிக்கிறேன். இவையன்றி, காமிக்ஸ்களையும், கிராபிக் நாவல்களையும் படித்து வருகிறேன்.
சயின்ஸ் நியூஸ்
மாயா
கருத்துகள்
கருத்துரையிடுக