மூளை பற்றி நடைபெற்ற முக்கியமான ஆராய்ச்சிகள்!
மூளை ஆராய்ச்சி!
கி.பி இரண்டாம் நூற்றாண்டில் காலன் ஆப் பெர்க்காமன் என்ற மருத்துவரை சுற்றி அனைவரும் கூடியிருந்தனர். அவர் அக்காலத்தில் மருத்துவர்களின் இளவரசன் என்று புகழப்பட்டவர். அன்று சபையில் அவர் செய்துகாட்டிய காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்றுவரை இதயம்தான் நமது நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறிவந்த மூடநம்பிக்கை அழிந்துபோனது. பன்றி ஒன்றை வைத்து மூளைதான் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காரணம் என பெர்க்காமன் நிரூபித்தார். இதனை இப்போது நவீன மருத்துவர்கள், அறிவியலாளர்கள் கேட்கும்போது புதிதாக சுவாரசியம் ஒன்றும் தோன்றாது. காலன் நிகழ்த்திய டெமோவை உலகின் புகழ்பெற்ற மருத்துவ நிரூபணம் என்று வரலாற்று ஆய்வாளர் சார்லஸ் கிராஸ் இதனை புகழ்கிறார். காலன் அந்த நிகழ்ச்சியை டெமோ காட்டி புகழ்பெற்றார். ஆனால் அதற்கு முன்னதாகவே அதுதொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து வந்தன.
பொதுவாக மூளையை ஆராய்ந்ததை விட அதுபற்றிய மூடநம்பிக்கைகளில்தான் உலகம் பெரும்பாலான நேரம் இருந்தது என்பது உண்மை. இதற்கு முக்கியக்காரணம் தேவாலயங்களை மூளையைப் பற்றி ஆராய்வதற்கு விதித்திருந்த தடைதான். எனவே ஆராய்ச்சியாளர்களால் விலங்குகளின் மூளையைத் தாண்டி மனித மூளைக்கு வரவே பல நூற்றாண்டுகளாகிவிட்டன. இதில் முக்கியமான ஆராய்ச்சி என்பது 1664ஆம் ஆண்டு ஆங்கில மருத்துவர் தாமஸ் வில்லிஸ் செய்ததுதான். இவரின் அனாட்டமி ஆப் பிரெய்ன் எனும் நூல் மூளையின் உபயோகமில்லாத பாகம் என்று கூறப்பட்ட செரிபிரல் கார்டெக்ஸ் என்ற பகுதியை விவரித்தது.
1803ஆம்ஆண்டு லண்டனில் ஜியோவனி ஆல்டினி, மூளையில் மின்சாரம் பாய்ச்சுவது முகத்தில் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்துவதை டெமோ செய்து காட்டினார். நரம்புகளில் பாயும் மின்னோட்டம் இந்த தன்மையை ஏற்படுத்துகிறது என்று விளக்கிறார். இதற்கு அவர் மனைவி, பிள்ளை இருவரையும் கொன்ற கொலைகாரரான பாஸ்டர் என்வரை தேர்ந்தெடுத்திருந்தார்.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக