இடுகைகள்

வாழ்க்கைச் சுழற்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கைச்சூழலை மேம்படுத்துவதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு!

படம்
  இயற்கைச் சூழலை மேம்படுத்தும் பட்டாம்பூச்சி!  பட்டாம்பூச்சிகளைப் பார்த்தால் என்ன தோன்றும்? அன்பு, அழகு, மகிழ்ச்சி ஆகிய  உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்தும். இந்த வகையில் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு கூட ஒருவருக்கு ஆறுதல் தரலாம். மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வராலி கோகடேவும் இப்படித்தான் பட்டாம்பூச்சியால் ஈர்க்கப்பட்டார். இவர், புனேவில், அபாசாகேப் கார்வாரே கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் துறையில் படித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் படிப்பில், கொரோனா பெருந்தொற்று குறுக்கிட்டது. இக்காலத்தில் தேவ்கட் தாலுக்காவில் உள்ள தனது கிராமத்திற்கு வந்தார் ஸ்வராலி. அங்குதான், தனது பேராசிரியர் ஆனந்த் பாத்யே அறிவுறுத்தல்படி பட்டாம்பூச்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார்.  தேவ்கட் பகுதியில், மரங்கள் வெட்டப்பட்டதால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டறிந்தார். இதற்கு மரங்களை அழித்து கட்டுமானங்களை எழுப்பிவருவதும் முக்கியமான காரணம் என்பதை அறிந்து செயல்படத் தொடங்கினார். பட்டாம்பூச்சி லார்வா நிலையிருந்து கம்பளிப்பூச்சியாக மாறுவதைப் பார்த்து, அவற்றை பாதுகாக்க தொடங்கினார். பொதுமு