இயற்கைச்சூழலை மேம்படுத்துவதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு!
இயற்கைச் சூழலை மேம்படுத்தும் பட்டாம்பூச்சி!
பட்டாம்பூச்சிகளைப் பார்த்தால் என்ன தோன்றும்? அன்பு, அழகு, மகிழ்ச்சி ஆகிய உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்தும். இந்த வகையில் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு கூட ஒருவருக்கு ஆறுதல் தரலாம். மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வராலி கோகடேவும் இப்படித்தான் பட்டாம்பூச்சியால் ஈர்க்கப்பட்டார்.
இவர், புனேவில், அபாசாகேப் கார்வாரே கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் துறையில் படித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் படிப்பில், கொரோனா பெருந்தொற்று குறுக்கிட்டது. இக்காலத்தில் தேவ்கட் தாலுக்காவில் உள்ள தனது கிராமத்திற்கு வந்தார் ஸ்வராலி. அங்குதான், தனது பேராசிரியர் ஆனந்த் பாத்யே அறிவுறுத்தல்படி பட்டாம்பூச்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார்.
தேவ்கட் பகுதியில், மரங்கள் வெட்டப்பட்டதால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டறிந்தார். இதற்கு மரங்களை அழித்து கட்டுமானங்களை எழுப்பிவருவதும் முக்கியமான காரணம் என்பதை அறிந்து செயல்படத் தொடங்கினார். பட்டாம்பூச்சி லார்வா நிலையிருந்து கம்பளிப்பூச்சியாக மாறுவதைப் பார்த்து, அவற்றை பாதுகாக்க தொடங்கினார். பொதுமுடக்கம் முதன்முறையாக அமலானபோது, நூற்றுக்கும் மேலான கம்பளிப்பூச்சிகளை பாதுகாத்து வளர்க்கத் தொடங்கினார். புழு, கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி என மாறும் இதன் வாழ்க்கையையும் ஆவணப்படுத்தினார். இவ்வகையில் நான்கு வகை பட்டாம்பூச்சி இனத்தை (common mormon, lime butterfly, tailed jay, common jay ) பாதுகாத்தார்.
ஸ்வராலியின் பாதுகாப்பு பணிகளை அவரது வீட்டைச் சுற்றிலும் உள்ளவர்கள் முதலில் ஆச்சரியமாக பார்த்தனர். சிறிய கூட்டிலிருந்து மாற்றம் பெற்று பட்டாம்பூச்சி வருவதைப் பார்த்து வியந்தனர். பிறகு, மரத்தில் இருந்து அதன் புழுக்களை அகற்றமாட்டோம், பூச்சிமருந்தை பயன்படுத்தமாட்டோம் என்று கூறியுள்ளனர்.
சிறுவயதில் தாவரங்கள், விலங்கினங்களை அறிய ஆவலாக இருந்தவர் ஸ்வராலி. தனக்கு தோன்றிய கேள்விகளை புனேவிலுள்ள இயற்கை வரலாற்று கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை அணுகி பதில்களைப் பெற்றார். இவரது வீட்டுக்கு அருகில் மாங்குரோவ் காடுகள் மற்றும் சதுப்புநிலம் அமைந்திருந்தது. இங்குள்ள சில கிராமங்களுக்கு செல்ல வாகன வசதிகளே குறைவு. எரிவாயு உருளைகளைப் பெற முடியாத காரணத்தால், கிராம மக்கள் காட்டில் உள்ள மரங்களை வெட்டி விறகாகப் பயன்படுத்த தொடங்கினர். இப்பிரச்னையைத் தீர்க்க பாலம் ஒன்றை அரசு கட்டியது.
ஸ்வராலி, மாங்குரோவ் காடுகளில் உள்ள 125 வகை பறவைகள் மற்றும் பூச்சி இனங்களை ஆய்வு செய்யத் தொடங்கினார். அழிந்து வரும் மாங்குரோவ் காடுகளில் வளரும் தாவரங்களைக் கண்டறிந்து அதனை மீண்டும் வளர்த்தெடுப்பதை உலகநாடுகளில் செய்கிறார்கள். இம்முறையில் நிலத்தடியில் உள்ள நீரின் வளம் மேம்பட்டது. இச்செயல்பாட்டை மகாராஷ்டிர அரசு சுய உதவிக்குழுக்கள் மூலம் தேவ்கட் பகுதி காடுகளில் செயல்படுத்தியது. ஸ்வராலியின் முயற்சியால் ஈர்க்கப்பட்ட, கிராமத்து மக்கள் சதுப்புநிலத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
daily pioneer
reimaging the ecosystem
charkha features
https://www.dailypioneer.com/2021/vivacity/reimaging-the-ecosystem.html
கருத்துகள்
கருத்துரையிடுக