இடுகைகள்

கொரிய தொடர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செஃபின் உதவியாளர் உடலில் புகுந்து தான் இறந்துபோன காரணத்தை தேடும் இளம்பெண் ஆவி!

படம்
  ஓ மை கோஸ்டெஸ் கே டிராமா ராக்குட்டன் விக்கி   சன் என்ற ஹோட்டலில் நா போங் சன் என்ற இளம்பெண் கிச்சன் அசிஸ்ட்டெண்டாக வேலை செய்கிறாள். அவள் அந்த வேலைக்கு வர காரணமே செஃப் காங் வூ சன்தான் அவரை அவள் தனது குருவாக காதலனாக பார்க்கிறாள். ஹோட்டலில் வேலை என்றால் பாத்திரங்களை கழுவி வைப்பதுதான். அவள் வேலையில் தூங்கி வழிகிறாள். அதற்கு காரணம், அவளால் பேய்களை பார்க்க முடியும் என்பதுதான். தற்கொலையால் இறந்த பேய் ஒன்று ஷின் சூன் ஆ, நா போங் சன்னின் உடலுக்குள் புகுகிறது. தனது இறந்த காலத்தை தனக்கு என்ன நடந்தது என்பதை அறிய முயல்கிறது. இதனால் நா போங்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை தொடர் விவரிக்கிறது. இந்த கொரிய தொடர், சற்று ஜாலியாக பார்க்க வேண்டியது என்பதால் பதற்றம் கொள்ளவேண்டாம். சமையல் சார்ந்த சாகச தொடர்.   செஃப் காங் வூ சன், அவனது தங்கை இயுன் ஜீ ஆகிய இருவருமே பிறரால் கேலி கிண்டல செய்யப்பட்டு உருவானவர்கள்தான். அதிலும் காங் , சிறுவயதில் இருந்தே தனியாக இருந்து வளர்ந்தவன். அவனது அம்மா வேலைக்கு சென்று வந்தவள் என்பதால், அவளது கையில் சாப்பாடு கூட சாப்பிட்டதில்லை. எனவே, ரெடிமேட் நூடு

இரண்டாவது வாய்ப்பில் அரசியல்வாதியை திட்டம்போட்டு பழிவாங்கும் அரசு வழக்குரைஞர்! அகெய்ன் மை லைஃப்

படம்
  அகெய்ன் லைஃப் தென்கொரிய டிவி டிராமா எஸ்பிஎஸ்  லீ ஜூன் ஜி, கிம் ஜி யூன், கையாங் இயாங் இயக்குநர் ஹன் சுல் ஹூ வெப் நாவல் எழுத்தாளர் லீ ஹா நால் ராகுட்டன் விக்கி ஆப் சியோயில் உள்ள அரசு வழக்குரைஞர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்பவர், கிம் ஹியூ வூ. இவர் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினரான அதிகாரம் பொருந்திய ஜே டே சியோப் என்பவரை   விசாரணைக்கு அழைக்கிறார். அவருக்கு எதிரான சாட்சியத்தை வழக்குரைஞர் தக்க வைத்த தைரியத்தில் இதை செய்கிறார். ஆனால், சாட்சியத்தை கொன்றதோடு, தன்னை வழக்குரைஞர் நிறுவனத்திற்கு வரவைத்த கிம் ஹியூ வூவையும் இரக்கமே இல்லாத அடியாள் மூலம் அடித்து   போதை ஊசி போட்டு கொன்று கட்டிடத்தில் இருந்து தூக்கி வீச செய்கிறார் ஜே டே சியோப். இது முதல் எபிசோடில் நடந்துவிடுகிறது. கதை அம்புட்டுத்தானா என தோன்றுகிறதா அங்க தான் முக்கியமான ட்விஸ்ட்.   இறந்துபோன வழக்குரைஞர் கிம்மின் உடலில் இருந்து ஆத்மா தனியாக பிரிந்து இறந்துபோன கட்டிட மொட்டை மாடியில் நிற்கிறது. தனக்கு என்ன நேர்ந்தது என தெரியாமல் பதற்றத்தில் இருக்கிறது. அப்போது, அவரது அருகில் சிவப்பு உடை அணிந்த பெ

நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்! - த.சீனிவாசனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
pixabay நூலகத்திற்கு செலுத்தும் நன்றிக்கடன்!  5.4.2021   அன்பு நண்பர் சீனிவாசனுக்கு, வணக்கம். நலமா? நான் தற்போது ஈரோட்டுக்கு வந்துவிட்டேன். ஜூன் இறுதியில் நாளிதழ் வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அதுவரையில் நான் ஊரில் இருக்க திட்டமிட்டுள்ளேன். நீங்கள் கொடுத்த அடோமிக் ஹேபிட்ஸ் என்ற நூலை இங்கே படிக்க எடுத்து வந்துவிட்டேன். அதில் பதிமூன்று பக்கங்கள்தான் படித்துள்ளேன். சென்னையிலிருந்து ஈரோட்டுக்கு வரும் பேருந்து பயணம் பெரும் களைப்பை உடலில் ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சேலம், சேலத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து கரூர் என மூன்று பேருந்துகளில் ஏறி எட்டு மணிநேரத்திற்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டும்.  இப்படி பாடுபட்டு முக்கி முனகி வீட்டுக்கு வந்தால் இரவில் மின்சாரம் இல்லை. அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா? தட்டில் சோற்றைப் போட்டு சாப்பிடும் நேரத்தில்....  நூல்களை நூலகத்திற்கு தரும் உங்களது பழக்கத்தைப் பின்பற்றி, எங்கள் ஊர் நூலகத்திற்கு தர ஒன்பது நூல்களை எடுத்து வைத்துள்ளேன். இவை அனைத்துமே புத்தக திருவிழாவில் வாங்கியவைதான்.  தேர்தல் முடிந்தபிறகு நூல்களை கொண்டு சென்று கொடுப்பேன். நூல

தனது குடும்பத்தை அழித்த டிவி நிருபரை பழிவாங்கப் போராடும் சகோதரர்களின் கதை! பினாக்கியோ - கொரிய தொடர்

படம்
                  பினாக்கியோ கொரிய தொடர் 10 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்    Genre: Romance, Drama, Comedy, Family Written by: Park Hye-ryun Directed by: Jo Soo-won, Shin Seung-woo   Pinocchio is a 2014–2015 South Korean television series starring Lee Jong-suk, Park Shin-hye, Kim Young-kwang and Lee Yu-bi தீயணைப்பு வீரரின் குடும்பம் எப்படி ஊடகங்களின் தவறான செய்தியால் அழிகிறது . அதில் மிஞ்சிய அண்ணன் அதற்கு காரணமான ஆட்களை கொலை செய்ய திட்டமிட்டு வாழ்ந்து வருகிறான் . அவன் தற்கொலை செய்துகொண்டதாக கருத்ப்படும் தம்பி சொய் தொல்போ என்ற பெயரில் வயதான ஒருவரால் தத்து எடுக்க்ப்பட்டு வளர்க்கப்படுகிறான் . விதிவசத்தால் அவனை கடலிலிருந்து மீ்ட்டு வளர்க்கும் குடும்பம் வேறு யாருமில்லை . அவனது குடும்பத்தை அவதூறு செய்து அம்மா தற்கொலை செய்துகொள்ள காரணமான செய்தி ஆசிரியர் சாவ் கீ யின் கணவர் குடும்பம்தான் . மனைவி தன் பேச்சை கேட்காத காரணத்தால் அவளை விவகாரத்து செய்துவிட்டு தனது தந்தையுடன் வாழ்கிறார் சாவ் கீ கணவர் . சாவ் கீயின் மகளை இன்கா ஒரு பினாக்கியோ குறைபாடு கொண்ட சிறுமி . இந்

காதலியைத் தேடுவதற்காக தண்ணீர் கேன் போடும் இதய அறுவைசிகிச்சை வல்லுநர்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

படம்
                    டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் 10 எபிசோடுகள் எம்எக்ஸ் பிளேயர்    Written by: Park Jin-woo, Kim Joo Directed by: Jin Hyuk, Hong Jong-chan     தண்ணீர் கேன் விற்பனை செய்பவன் , குழந்தையின் உடைந்த விரலை சரி செய்கிறான் . குழந்தையின் அப்பாவுக்கு ஆபரேஷன் செ்ய்துவிட்டு மாயமாகிறான் . யார் அவன் என்பதை பார்வையாளர்கள் அறிந்தால் அதுதான் டாக்டர் ஸ்ட்ரேஞ்சர் . இந்த தொடர் வெறும் காதல் மட்டும் கொண்டது அல்ல . வடகொரியா , தென்கொரியா என இருநாட்டு அரசியலும் தீவிரமாக பேசப்படுகிறது . இதில் எதிர்மறையாக திடமாக காட்டப்படும் நாடு வடகொரியாதான் . இரு நாட்டு அரசியல்வாதிகளும் எப்படி மக்களை பயன்படுத்தி தங்கள் நலன்களை வளர்த்துக்கொள்கிறார்கள் , அதற்கு பலியாகும் மனிதர்கள் , அவர்களின் குடும்ப வாழ்க்கை என உணர்ச்சிகரமாக தொடரை எடுத்திருக்கிறார்கள் . பார்க் குவான் பள்ளி சென்று கொண்டிருக்கும் சிறுவன் . அவனது அப்பா , மியாங் சாங் மருத்துவமனையில் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர் . அவரை வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வைக்க தென்கொரிய அரசியல்வாதி திட்டமிடுகிறார் . அப்படி அவர் அங்