இடுகைகள்

விளைச்சல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காபி பயிரில் புதிய வகை - எக்ஸெல்சா

படம்
  எக்ஸெல்சா காபி செடி காபியில் புதிய ரகம்! காபி ரகங்களைப் பொறுத்தவரை இரண்டு வகைகள்தான் அனைவரும் அறிந்தவை. அராபிகா, ரோபஸ்டா. இந்த இரண்டு வகை காபிகளைத்தான் ஒருவர் அருந்தியிருக்க முடியும். இதிலும் நிறையப் பேர் குறிப்பிட்ட வகை காபிக் கொட்டைகளை வாங்கி வறுத்து பொடி செய்வது உண்டு. இல்லையெனில் குமார் காபி, குரு காபி, நரசுஸ் காபி, லியோ காபி என காபி நிறுவனங்களில் கூட வாங்கிக்கொண்டு காபி போட்டு குடிப்பார்கள். உலகளவில் அராபிகா, ரோபஸ்டா என்பவைதான் பிரபலமானவை. ஆனால், இந வகை காபி செடிகளை பயிரிடுவதில் நோய்த்தாக்குதல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் இதன் ஆண்டு விளைச்சலும் குறைந்து வருகிறது. இதன் விளைவாக வேறு காபி ரகங்களை தேடும் அவசியம் ஏற்பட்டுள்ளது. காபி   பயிரில் மொத்தம் 124 இனங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் வணிகரீதியாக வளர்த்து அதைப் பயன்படுத்தும் காபி கொட்டைகளுக்கு ஏற்றவை என வணிகர்கள் அராபிகா, ரோபஸ்டா என இரண்டை மட்டுமே ஏற்றனர். அதை மட்டுமே விளைவித்து பயன்படுத்தி வந்தனர். ஆனால், இனி அவற்றை பயன்படுத்துவதில் அதிக பயனில்லை. மேற்சொன்ன இரண்டு ரகங்களுக்குப் பதில் எதிர்காலத்தில் லைபீரியா என்ற காபி

மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

படம்
  அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம் -பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,   குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு   முன்னரே தன் நிலத்தில் பிடி பருத்தியை

இயற்கை வேளாண்மை பற்றிய தகவல்கள்!- அங்கீகாரம் பெற்ற மாநிலங்கள்

படம்
  இயற்கை வேளாண்மை 2021-2022 காலகட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கான அங்கீகாரம் பெற்ற நிலப்பரப்பு 59 லட்சம் ஹெக்டேர்களாகும்.  இந்திய மாநிலங்களில் இயற்கை வேளாண்மையில் முன்னிலை வகிக்கும் மாநிலம், மத்தியப் பிரதேசமாகும். இதற்கடுத்து மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அமைந்துள்ளன.  2016ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் தனது வேளாண் நிலப்பரப்பு முழுவதும் இயற்கை வேளாண்மைக்கென அங்கீகாரம் பெற்றுள்ளது.  இந்தியாவில் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தியான பொருட்களின் அளவு 3 கோடியே 50 லட்சம் மெட்ரிக் டன்களாக உள்ளது. இதைப்பற்றிய தகவலை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேலாண்மை ஆணையம் (Apeda) தெரிவித்துள்ளது.  மழைப்பொழிவு கொண்ட நாடுகள், இயற்கை வேளாண்மையை செய்யும்போது அவர்களுக்கு விளைச்சல் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தொழில்மயமான நாடுகளில் உரப் பயன்பாடு அதிகம். எனவே, அந்நாடுகள் இயற்கை வேளாண்மைக்கு மாறும்போது பயிர் உற்பத்தி குறையும் என ஐ.நாவின்  உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (UN Food and Agriculture Organization) தகவல் தெரிவித்துள்ளது.  TOI image - wallpape

90 நொடியில் மண்ணில் இயல்பை அறியலாம்!

படம்
  90 நொடியில் மண்ணின் நலம் அறியலாம்! ஐஐடி கான்பூரைச் சேர்ந்த மாணவர்கள் மண்ணின் தரத்தை எளிதில் கண்டுபிடிக்கும் பூ பரிஷக் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். ஸ்மார்ட்போன் ஆப் மூலம் இயக்க முடியும் இக்கருவியால் 90 நொடிகளில்  மண்ணின் தரத்தை அறியலாம். வேகமாக மண் மாதிரிகளை சோதிக்கும் இக்கருவியால்,  ஒரு லட்சம் மாதிரிகளை சோதிக்கலாம். இதன்மூலம் விவசாயிகள் மண்ணிற்கு தேவையான உரங்களை எளிதாக அறிந்து பயன்படுத்த முடியும்.  இதற்கு முன்னர், மண்சோதனைகளை செய்து அதன் தன்மையை அறிய இரு வாரங்கள் தேவை. ஆய்வு செய்து,மண் தரம் பற்றிய அட்டையை விவசாய ஆராய்ச்சியாளர்கள் வழங்குவார்கள். இனி அத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. நியர் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோஸ்கிராபி தொழில்நுட்பம் (Near infrared Spectroscopy) மண்சோதனைக் கருவியில் பயன்படுகிறது.  மண் சோதனை முடிவுகளை கூகுள் பிளே ஸ்டோரிலுள்ள பூ பரிஷக் ஆப்பை தரவிறக்கி அறிந்துகொள்ளலாம். இக்கருவியில் ஐந்து கிராம் மண்ணை வைத்தாலே அதிலுள்ள ஊட்டச்சத்துகளைப் பற்றி எளிதாக அறியலாம்.  சிலிண்டர் வடிவிலான கருவியில், மணலை சோதிக்கிறார்கள். இதனை போனில் ப்ளூடூத் வழியாக இணைத்தால் 90 நொடிகளில

பயிர்களை வளர்க்க பயன்படுத்தும் நீர்ப்பாசன முறைகளை மாற்றிக்கொள்வது அவசியம்! - அரியல் ஆர்டிஸ் போயியா

படம்
  நேர்காணல் அரியல் ஆர்டிஸ் போயியா பொருளாதார பேராசிரியர், கார்னெல் பல்கலைக்கழகம் உங்களது ஆராய்ச்சி பற்றி கூறுங்கள். வரலாறு மற்றும் எதிர்காலத்தில் காலநிலை மாற்றங்கள்  பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். குறிப்பாக, வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள்.  2021ஆம் ஆண்டு நானும், சக பணியாளர்களும் வேளாண்மையில் ஏற்படும் காலநிலை மாற்றங்களை பற்றிய ஆய்வை செய்தோம். இதில் பயிர்கள், மரங்கள், பண்ணை விலங்குகள் ஆகியவை உள்ளடங்கும். 1960ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை 99.9 சதவீத உலக வேளாண்மை உற்பத்தியை நாங்கள் ஆய்வில் உள்ளடக்கியிருந்தோம். வெப்பம் அதிகரித்த காலத்தில் வேளாண் துறையில் உற்பத்தி வீழ்ச்சியை அடையாளம் கண்டோம். இதற்கு, சரியான அளவில் முதலீடுகள் தேவை.  பயிர்களை எப்படி விளைவிப்பது? மனிதர்களின் உதவியின்றி முன்னமே பயிர்கள் இங்கு சிறப்பாக வளர்ந்து வந்துள்ளன. மனிதர்களின் எண்ணிக்கை பெருகியபோது, வேளாண்மையின் உற்பத்தி குறையத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில், 7 ஆண்டுகளுக்கான வேளாண்மை உற்பத்தித் திறனை நாம் அறிந்தே அழித்திருக்கிறோம்.  நீங்கள் உற்பத்தித் திறனை வளர்க்க தீர்வுகளை வைத்திர

மண்ணின் தரத்தை 90 நொடியில் அறியலாம்!