இடுகைகள்

கட்டுப்பாட்டு மையம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விரைவில் வருகிறது ஸ்மார்ட்சிட்டி! - முழுமையாக நகரங்களைக் கண்காணிக்கும் ஒன்றிய அரசு!

படம்
  ஸ்மார்ட்சிட்டியை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மையங்கள் மொத்தம் 100 ஐ அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 80 மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மீதியுள்ளவை ஆகஸ்ட் 15 அன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அண்மையில் ஸ்மார்ட்சிட்டிகளுக்கான மாநாடு சூரத்தில் ஏப்.18 - 19 என இரு நாட்கள் நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன சமாச்சாரங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறினார்.  ஸ்மார்ட்சிட்டி திட்டம் 100 நகரங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. இவற்றில் தற்சார்பான பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு செய்யவிருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டம் 2015ஆம் ஆண்டு  ஜூன் 25 அன்று தொடங்கியது.  நகரங்களில் நடப்பதற்கான பிளாட்பாரங்கள், சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் முக்கியமாக கருதுகிறார்கள்.  நகரை புனரமைப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது, நிலப்பரப்பு சார்ந்த அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இதில் முக்கியமான அம்சங்கள்.  கட்டுப்பாட்டு மையங்க