விரைவில் வருகிறது ஸ்மார்ட்சிட்டி! - முழுமையாக நகரங்களைக் கண்காணிக்கும் ஒன்றிய அரசு!

 










ஸ்மார்ட்சிட்டியை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாட்டு மையங்கள் மொத்தம் 100 ஐ அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 80 மையங்கள் அமைக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. மீதியுள்ளவை ஆகஸ்ட் 15 அன்று நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அண்மையில் ஸ்மார்ட்சிட்டிகளுக்கான மாநாடு சூரத்தில் ஏப்.18 - 19 என இரு நாட்கள் நடைபெற்றது. இதில்தான் மேற்சொன்ன சமாச்சாரங்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறினார். 

ஸ்மார்ட்சிட்டி திட்டம் 100 நகரங்களை மேம்படுத்துவதை உள்ளடக்கியது. இவற்றில் தற்சார்பான பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு செய்யவிருக்கிறது. ஸ்மார்ட்சிட்டி திட்டம் 2015ஆம் ஆண்டு  ஜூன் 25 அன்று தொடங்கியது. 

நகரங்களில் நடப்பதற்கான பிளாட்பாரங்கள், சைக்கிளில் செல்வதற்கான தனிப்பாதைகள், போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றை ஸ்மார்ட்சிட்டி திட்டங்களில் முக்கியமாக கருதுகிறார்கள். 

நகரை புனரமைப்பது, பசுமை பரப்பை அதிகரிப்பது, நிலப்பரப்பு சார்ந்த அதன் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது இதில் முக்கியமான அம்சங்கள். 

கட்டுப்பாட்டு மையங்கள் எதற்காக என கேள்வி உங்கள் மனதில் எழலாம். இந்த மையங்களில் இருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உருவான குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, சுகாதார அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும். கண்காணிக்க முடியும். இதனை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் கவனிக்கிறது. இப்படி ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை உருவாக்கி அதனை குற்றம் தொடர்பான முகமைகளோடு இணைத்தால் எளிதாக குற்றங்களைத் தடுக்க முடியும் என ஒன்றிய அரசு நினைக்கிறது. 

இந்த கட்டுப்பாட்டு மையம்தான் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நரம்பு போன்ற அமைப்பு.  தெருவில் உள்ள எல்இடி விளக்குகள், சிசிடிவி கேமராக்கள், காற்று தரத்தை சோதிக்கும் சென்சார்கள், வாகன நிறுத்துமிட சென்சார்கள், வைஃபை, இ மருத்துவமனைகள், வரி மேலாண்மை, பொறியியல் அமைப்புகள் என பல்வேறு சேவைகளை இந்த மையமே ஒருங்கிணைக்கிறது. பெருந்தொற்று காலத்தில் இந்த மையங்கள்தான் அவசர கால மையங்களாக செயல்பட்டன. 

2015இல் தொடங்கிய ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு 2021ஆம் ஆண்டுதான் இலக்காக வைக்கப்பட்டது. தற்போது, நூறு நகரங்களில் 20 நகரங்களில் வேலைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன.பெருந்தொற்று காரணமாக நகரங்களின் வேலைகள் தள்ளிப் போய்விட்டன.எனவே, காலக்கெடு 2023 என மாறியிருக்கிறது. 

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து பைலட் முறையில் சோதிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 

IE

anisha dutta

tenor





கருத்துகள்