கடத்தப்பட்ட குழந்தையை பணம் கொடுக்காமல் மீட்கும் பணக்கார தந்தை! - ரான்சம்- மெல்கிப்சன்

 


















ரான்சம்


ஏர்லைன்ஸ் சர்வீஸ் வைத்து நடத்துபவர் டாம் முல்லன் -மெல்கிப்சன். இவரது மகனை அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் கடத்தி சென்றுவிடுகிறார்கள். அவனை மெல்கிப்சன் போலீசாரோடு சேர்ந்து மீட்டாரா இல்லையா என்பதுதான் கதை. 

படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இல்லை. முழுக்க உணர்ச்சிமயமான காட்சிகள்தான் அதிகம். மெல்கிப்சன் தான் நேசிக்கும் மகனை இழந்துவிடுவோமோ என பயப்படும் காட்சியிலும் மாடியில் உடைந்து அழும் காட்சியிலும் அவர் நடிக்கிறார் என்பதே மறந்துபோகிறது. 




படம் முழுக்க மூளை விளையாட்டுதான். பையனை மீட்க பணம் கேட்போம். அது கிடைத்தவுடன் அவனைக் கொன்றுபோட்டுவிடுவோம் என நினைக்கிறது கடத்தல் கூட்டம். ஆனால் அங்கும் கூட சிறுவன் மீது நேசம் வைக்கும் ஒருவன் இருக்கிறான். அவனைப்பொறுத்தவரை பணம் அவசியம்தான். ஆனால் அது கிடைத்துவிட்டபிறகு எதற்கு கொலை என கேட்கிறான். இந்த கேள்வியே அதற்குப் பிறகான காட்சிகளில் சிக்கலாக மாறுகிறது. 

அந்தக்கூட்டத்தில் உணர்ச்சிவசப்படும் இருவர், குழந்தை மீது நேசம் வைக்கும் தம்பியும், தம்பியை நேசிக்கும் அண்ணன் ஒருவரும்தான். இவர்கள் குழந்தையை கடத்தி வைத்து பணம் சம்பாதிக்கும் முயற்சியில், தலைவனின் துரோகத்தால் இறந்துபோகிறார்கள். 

கடத்துபவன் யார் என்று பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும் அவன் எதற்கு அப்படி செய்கிறான் என்பதை படம் முடிந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை. மெல்கிப்சனின் வணிகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அவனும் ஒருவனாக இருக்கலாம் என முடிவுக்கு வரவேண்டியதிருக்கிறது. 

மெல்கிப்சனுக்கும், எஃப்பிஐ அதிகாரிக்குமான உறவு சிறப்பாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. பத்து வழக்குகளில் ஏழை வெற்றிகரமாக முடித்துவிட்டோம் எனும்போது, மெல்கிப்சனின் மனை மூன்று வழக்குகள் என்னாச்சு என்று கேட்பது...

மெல்கிப்சன் தன் மகன் பற்றிய விவரங்களைக் கேட்க வரும்போது அதிகாரி தனது மனைவியோடு பேசி மகள்களைப் பற்றி அக்கறையோடு விசாரிப்பது, 

இறுதிக்காட்சியில் குற்றவாளியை தானே சுட்டதாக அதிகாரி கூறி மெல் கிப்சனைக் காப்பாற்றுவது என ரசிக்கும்படியாக எடுத்திருக்கிறார்கள். 


கோமாளிமேடை டீம்  



கருத்துகள்