மதிய உணவுத்திட்டம் - இன்றைய நிலை

 





சேலம் மாவட்ட மதிய உணவு திட்டம், தமிழ்நாடு




1


கர்நாடக மாநிலம் பதிமூன்றாவது மாநிலமாக தனது மதிய சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்க்கவுள்ளது. அண்மையில் வெளியான தேசிய குடும்ப நல ஆய்வில், ஐந்து வயதுக்குள் உள்ள சிறுவர்கள் சரியான ஊட்டச்சத்து இன்றி இருப்பதாக கூறியிருந்தது. இந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் 35 சிறுவர்கள் உள்ளனர். இப்பாதிப்பில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இறந்துபோகவும் வாய்ப்புள்ளது. இந்த வகையில் 20 சதவீதம் பேர் உள்ளனர். 

ஆனால் எப்பாடு பட்டாலும் அரசு சத்துணவில் முட்டையை சேர்க்க கூடாது சில கருத்தியல் மதவாத கும்பல்கள் குறுக்கீடு செய்து வருகின்றனர். 

தற்போது உள்ள மதிய சத்துணவு திட்டம்  பிஎம் போஷான் சக்தி நிர்மாண் என்ற திட்டத்தின் கீழ் வருகிறது. 2021ஆம் ஆண்டு அமலான தேசிய திட்டம் இது. இதற்கான மூலத்திட்டம் 1995ஆம் ஆண்டே தொடங்கிவிட்டது.  இந்த மதிய உணவு திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட திட்டம் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கானதாக இருந்தது. 2007இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு இதனை எட்டாம் வகுப்பு வரை நீட்டித்தது. 

1920ஆம் ஆண்டு மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷன்  தான் முதன்முதலில் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் என்பதை உருவாக்கியது. இதனை அன்று ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி கொண்டு வந்தது. பிறகு ஆட்சிக்கு வந்த முதல்வர் கே.காமராஜ், அதனை செம்மைபடுத்தினார். மதிய உணவுத்திட்டம் என்ற வடிவத்தை உருவாக்கியவர் இவர்தான். உருவாக்கிய ஆண்டு 1956. இதற்குப் பிறகு கேரள மாநிலம் 1961ஆம் ஆண்டு கேரளாவில் மதிய உணவுத்திட்டம், அமலானது. இதனை தனியார் அமைப்பு செயல்படுத்தியது. இதனை மாநில அரசு 1984ஆம்ஆண்டு டிசம்பர் 1 அன்று தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது. 

பிறகு வந்த ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்கள் மதிய உணவுத் திட்டத்தை கையில் எடுத்து சில மாற்றங்களை செய்து பயன்படுத்தின. பிறகு 1995ஆம் ஆண்டு மத்திய அரசு மதிய உணவுத் திட்டத்தை தன் கையில் எடுத்து நிதியுதவி செய்ய முடிவெடுத்தது. 






2

இன்றைய நிலைமை

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 11.80 கோடி மாணவர்கள் மதிய உணவுத் திட்டத்தால் பயன் பெறுகிறார்கள். 11.20 லட்சம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இதனால் பயன் பெறுகின்றன. இதனை உள்ளூர் நிர்வாக அமைப்புக்ள நிர்வாகம் செய்கின்றன. 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மதிய உணவு திட்டத்திற்காக மத்திய அரசு 10,233 கோடி ரூபாயை  ஒதுக்கியுள்ளது. மாநிலங்கள் 6,277 கோடி ரூபாயை செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய அரசு அனைத்தையும் பிரிட்டிஷ் அரசு போல சட்டப்படி தானே செய்யும்? அதற்காகத்தான் உணவு பாதுகாப்பு உரிமை சட்டம் 2013 உள்ளது. அதன் அடிப்படையில்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 


சாப்பாட்டு மெனுவில் என்ன இருக்கும்?


அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய், கொழுப்பு என மொத்தம் 450 கலோரி ஆற்றல் இருக்கவேண்டும். 12 கிராம் புரதம் முக்கியம். இதெல்லாம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கானது. மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு 700 கலோரியும் 20 கிராம் புரதமும் தேவை. இதற்காகவே வேர்க்கடலை, பால், முட்டை, பழங்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். கூடுதல் உணவு வகைகளை மாநிலங்களே வழங்குகின்றன. இதனுடைய அர்த்தம், அதற்கான செலவும் அவர்களுடையது என்பதுதான். 

குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், லடாக், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு சீஸ், காளான் ஆகியவை குறிப்பிட பகுதிகளில் வழங்கப்படுகிறது. ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரத்தில் வேர்க்கடலை வழங்கப்படுகிறது. லட்சத்தீவுகளில் கோழிக்கறி வழங்கப்படுகிறது. 

முட்டையை உணவில் சேர்க்க என்ன தயக்கம்?

செலவும் முக்கியமான காரணம். அருணாசலப்பிரதேசம் முட்டையை மதிய உணவுத்திட்டத்தில் சேர்க்க செலவைக் காரணம் காட்டி தயங்குகிறது. கூடவே மதம், சாதி, சமயம் ஆகிய காரணங்களும் முட்டையை உண்ணுவதில் பெரும் தடையை ஏற்படுத்துகின்றன. அறிவியல்பூர்வமாக முட்டையை உணவில் சேர்ப்பது மாணவர்களின் உடல், அறிவு வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கிறது என்பது உண்மை. சில மாநிலங்கள் இதன் அடிப்படையில் முட்டையை மதிய உணவு திட்டத்தில் சேர்த்து வருகின்றன. 

சத்தீஸ் மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த மாநிலம் தான் செய்த ஆய்வுப்படி உணவில் 35 சதவீதம்தான் புரதம் உள்ளது என அறிந்தது. இதன்படி அரசியல் எதிர்ப்பையும் தாண்டி வாரத்திற்கு இரு முட்டைகளை மதிய உணவுத்திட்டத்தில் சேர்த்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசின் மதிய உணவுத்திட்டத்தில் முட்டையை சேர்க்கும் திட்டத்தை பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக அரசு நிறுத்திவிட்டது. இது 2020ஆம் ஆண்டு நடந்தது. கர்நாடகத்தில் முட்டையை மதிய உணவுத்திட்டத்தில் சேர்க்கும் அரசு முடிவுக்கு லிங்காயத்துகள், ஜெயின்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

சில மாநிலங்கள் முட்டைக்கு பதிலாக பல்வேறு பழங்களைக் கொடுத்து சமாளித்து வருகின்றன. தமிழ்நாட்டில் முதலில் அவித்த முட்டையைக் கொடுத்து வந்தனர். இப்போது அதனை ருசியாக கொடுக்க முடிவெடுத்து செயல்படுத்தி வருகின்றனர். 

தொடக்கப்பள்ளி மாணவர் ஒருவருக்கு 4 .97 ரூபாயும், மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு 7.45 ரூபாய் என கணக்கிட்டு உணவு வழங்குகிறார்கள். இதில் செலவு 60க்கு 40 என்ற அளவில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு செலவிடுகின்றன.


இந்தியன் எக்ஸ்பிரஸ் 

சௌரவ் ராய் பர்மன் 


 











கருத்துகள்