மீன் பிடிப்பதைத் தடை செய்தால் என்னாகும்?

 








மீன் பிடிப்பதை தடை செய்தால்...



உலகம் முழுக்க  உள்ள மக்கள் மீன்களை அதிகளவு உண்டு வருகிறார்கள். இதற்காக, கடலில் பிடிக்கப்படும் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கடலில் மாசுபாடும் கூடுகிறது. 1961 முதல் 2016 வரை செய்யப்பட்ட ஆய்வில் இறைச்சியை விட மீன்களை அதிகளவு உணவாக மக்கள் எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. உலக நாடுகளிலுள்ள அரசுகள் மீன்பிடிப்பதை தடை செய்தால் என்னாகும்?

உணவுத்தேவை

உலகம் முழுக்க 40 கோடிக்கும் அதிகமான மக்கள்  மீன்பிடித்தொழில் இருக்கிறார்கள்.அரசின் தடையால், இவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.  ”சிறியளவில் மீன்களை பிடித்து விற்கும் மீனவர்களைப் பற்றிய ஆவணங்கள் கிடைப்பதில்லை” என்றார் சூழலியலாளர் ஸ்டீவன் பர்செல். தெற்காசியா, இந்தியா, மற்றும் பசிபிக் கடல் தீவுகளில் உள்ள மக்கள் புரத தேவைக்கு அதிகமும் மீன்களையே சார்ந்துள்ளனர்.  ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகளவு மக்கள் புரத தேவைக்கு இறைச்சியை சார்ந்துள்ளனர். நிலத்தில் குறைந்தளவு விவசாயம் செய்யும் நாடுகளில் மீன்பிடி தடை என்பது உணவுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். மீன் பிடிப்பதை முழுமையாக தடை செய்தால், மக்கள் பலரும் பதப்படுத்த டின் உணவுகளை சாப்பிடும் சூழல் ஏற்படும். 

மீன் பண்ணை

கடலில் மீன்பிடிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டால், மீன்களின் தேவைக்கு தனியார் மீன் பண்ணைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். இப்போது கடல் உணவுகளில் பெரும்பாலனவை இப்படித்தான் உற்பத்தியாகி உணவு மேசைக்கு வருகிறது. ஐரோப்பாவில் சாலமன் பண்ணைகளில்தான் பெருமளவு வளர்க்கப்படுகிறது. ”எதிர்காலத்தில் அதிகளவு கடல் உயிரினங்கள் வளர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன” என்றார் கடல் அறிவியல் ஆய்வாளரான  சோஃபியா ஃபிரான்கோ. கடலை முழுக்க பயன்படுத்தாமல் பண்ணைகளை நம்பியே உலக மக்கள்  உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியுமா? என்றால் பலருக்கும் இதற்கான பதில் தெரியவில்லை. 

மீன்களின் பெருக்கம்

அரசுகள் விதிக்கும் பருவகால மீன்பிடி தடைக்காலம், மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இதன் மூலம் குறிப்பிட்ட மீன் இனங்கள் முழுமையாக மீனவர்களால் பிடிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது.  தடைக்காலம் என்பது சில வாரம் முதல் மாதங்கள் வரை நீடிக்கும். அதிகரித்த மீன்பிடிக்கும் பழக்கத்தால் ஏற்கெனவே மீன் இனங்கள் கடலில் குறைந்துவிட்டன. இந்தோனேஷியாவில் ஷெல்ஃபிஷ் மீனின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதன் எண்ணிக்கையை உயர்த்த நினைத்தாலும் கூட அச்செயல் எளிதானது அல்ல என்கிறார்கள் கடல் ஆய்வாளர்கள். 

கடல் தூய்மை

உலகளவில் ஆயிரம் கிலோ இறால் மீனை பிடிக்க 20 ஆயிரம் லிட்டர் எரிபொருள் செலவாகிறது என  2014இல் நடந்த கடல் ஆய்வு கூறுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகளை தடை செய்தது சூழலை மேம்படுத்தக்கூடியது. மீன்களை பிடிக்கும் மீனவர்கள், கடலில் அதிகளவு மாசுபாடுகளை செய்கிறார்கள் என வாதிடுகிறார்கள். பவளப்பாறைகளில் 4 ஆயிரன் மீன் இனங்கள் வாழ்கின்றன. மீன்பிடிப்பது நிறுத்தப்பட்டால், மீன்களும் பவளப்பாறைகளும் சிறிது காலம் பிழைத்திருக்க வாய்ப்புண்டு. கடலின் வெப்பநிலை உயர்ந்தால் பவளப்பாறைகள் அழியத் தொடங்கும். இதன் மற்றொரு விளைவாக பாசிகள் அதிகம் வளர்ந்து நீர்ப்பரப்பில் பரவும். எனவே, மீன்பிடி தடை மட்டுமே சூழலை பாதிப்பிலிருந்து மீட்காது. 

 

தகவல்

BBC Science focus specials 

what if  we banned fishing (Hayley bennet)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்