ஒருவரை பலவீனங்கள் கொண்ட மனிதராக காட்சிபடுத்தினால் பிரச்னையில்லை! - இயக்குநர் ஷியாம் பெனகல்
இயக்குநர் ஷியாம் பெனகல் படம் - IE |
ஷியாம் பெனகல்
திரைப்பட இயக்குநர்
முஜீப் - தி மேக்கிங் ஆப் எ நேஷன் எனும் ஷேக் முஜிபர் ரஹ்மான் சுயசரிதையை படமாக எடுத்துள்ளார். இப்படத்தை வெளியிட தயாராக உள்ளார்.
இயக்குநர் ஷியாம் பெனகல் படம் - இந்தியா டுடே |
பொதுவாக அரசியல் சார்ந்த ஒருவரின் வாழ்க்கையை சுயசரிதையாக எடுப்பதில் நிறைய ஆபத்துகள் உள்ளன. இதை எப்படி எதிர்கொள்ள நினைத்துள்ளீர்கள்?
படத்தில் ஒருவரை மனிதராக பார்க்கும் தன்மையை இழக்கவிட்டுவிடக் கூடாது. அப்படி செய்தால், நீங்கள் உருவாக்கும் படம் சூப்பர்மேன் தனமாக வாழ்க்கையைத் தாண்டியதாக உருவாகிவிடும். ஒரு மனிதரின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அவரின் பலவீனங்களையும் பார்க்கத்தான் வேண்டும். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் பலவீனங்கள் உண்டு. அதைத்தாண்டி அவரின் திறன், பலம் இருக்கிறதா என்பதை பாருங்கள். அதை யாரும் ஒருவரிடமிருந்து அகற்றி விட முடியாது. இதை நீங்கள் மனதில் கொண்டால் எந்த பிரச்னையும் வராது.
ஷேக் முஜிபர் ரஹ்மானிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள என்ன விஷயங்கள் இருக்கின்றன?
நல்ல பழக்கவழக்கங்களைக் கூறலாம். அவர் தனது மக்களை நேசித்தார். அவர்களை அளவுக்கு அதிகமாக விரும்பினார். பலரையும் நிறைய நம்பினார். அதாவது அவரின் கூடவே இருந்தவர்களை.... அவர்களின் பார்வைக்கோணங்களை முஜிபர் சரியாக கவனிக்கவில்லை. அரசியலில் நம் கூடவே இருந்தாலும் அவர்களின் பார்வைக்கோணம், பலவீனம் பற்றி நாம் கவனம் கொண்டிருக்கவேண்டும்.
சமூக பிரச்னைகளைப் பேசும் படங்களை விடுங்கள். அரசியல் வரலாறு சார்ந்த படங்களை உருவாக்க உங்களை தூண்டுவது எது?
நான் எனது நாடு பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்துகொள்ள நினைக்கிறேன். எப்போதும் நான் கற்றுக்கொண்டே இருக்க நினைக்கிறேன். எனது படங்களின் வழியாக என்னைப் போலவே அதைப் பார்க்கும் மக்களும் நிறைய விஷயங்களை கற்பார்கள் என நம்புகிறேன். இதன்மூலம் இந்தியாவை எந்த ஃபில்டரும் இல்லாமல் நேரடியாக புரிந்துகொள்ள முடியும்.
போர்ச்சுக்கீசிய இயக்குநர் மனோல் டி ஒலிவெய்ரா, 105 வயது வரை திரைப்படங்களை உருவாக்கி வந்தார். இப்போது உங்களை இந்த வயதிலும் இயக்குவது எது?
நான் அவரை லிஸ்பன் நகரில் சந்தித்தேன். அப்போது அவருக்கு 96 வயது. அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. எனக்கு போர்ச்சுக்கீசிய மொழி விளங்கவில்லை. அவரிடம் 25 வயது இளைஞரின் திரைப்பட ஆர்வத்தைப் பார்த்தேன். அவரிடம் பார்த்தது போன்ற ஆர்வம்தான் என்னை இயக்குகிறது.
சுகானி சிங்
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக