நாய்களைப் பாதுகாத்து பராமரிக்கும் பொறியாளர் பெண்மணி!
கோவையில் உள்ளது சீரநாய்க்கன்பாளையம். இங்குதான், ஹியூமன் அனிமல் சொசைட்டி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் சுவர்கள் முழுவதும் விதவிதமான நாய்கள் நம்மை பல்வேறு வித குணங்களுடன் செய்கைகளுடன் பார்க்கின்றன. ஐ லவ் யூ, யூ வில் ஃபீட் மீ என பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தெருநாய்கள், காயமுற்ற நாய்களை பாதுகாக்கும் அமைப்பு இது.
தன்னார்வ தொண்டு அமைப்பாக 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 70 ஆயிரம் நாய்களை பாதுகாத்து பராமரித்துள்ளனர். இந்த செயல்பாடுகளைத் தொடங்கி வைத்தவர் மினி வாசுதேவன். இவர் தனது கணவரோடு அமெரிக்காவில் பொறியாளராக வேலை செய்து வந்தவர். பிறகே, பதிமூன்று ஆண்டுகள் கழித்து அங்கிருந்து இந்தியாவிற்கு வந்தார். இவரது கணவர் பெயர், மது கணேஷ்.
2019இல் மினி வாசுதேவனுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சீரநாய்க்கன்பாளையத்தில் உள்ள காப்பக இடம் போதாமல், கோவை வழுக்குப்பாறை அருகில் 15 ஏக்கர் நிலத்தில் காப்பகம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இங்கு இயற்கை சூழலில் நாய்களை பாதுகாத்து பராமரிக்கிறார்கள். இதில் வேலை செய்யும் சம்பள பணியாளர்களின் எண்ணிக்கை 23. தன்னார்வலர்களாக 50 பேர் உள்ளனர்.
தொடக்கத்தில் காப்பகத்திற்கான செலவுகளை மினி வாசுதேவன் தனது சேமிப்பில் இருந்து செய்தார். இப்போது நிறைய நிதி வசதிகள் வெளியிலிருந்து கிடைக்கிறது. நாய்களுக்கான மருந்துகள் வழங்குவது, அறுவை சிகிச்சை செய்வதுஆகியவற்றையும் மினி வாசுதேவன் குழுவினர் தகுந்த கால்நடை மருத்துவர்களை வைத்து செய்து வருகின்றனர். நாய்களை பராமரிக்கும் பணியில் கோவை மாநகராட்சியின் ஆதரவும் கிடைக்க, அவற்றுக்கு முறையாக தடுப்பூசிகளை போடுவது ஆகியவற்றை மினி செய்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
அரவிந்த் ராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக