போக்சோ சட்டத்திற்கு வயது 10!

 









1

வரும் நவம்பர் மாதம் வந்தால் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல், குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்திற்கு வயது 10 ஆகப்போகிறது. 

2012ஆம் ஆண்டு மே 22 அன்று போக்சோ சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. உறுப்பினர்கள் வாக்களித்து ஏற்கப்பட்டு நவம்பர் 14 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் ஆபாசப்படும், பாலியல் சுரண்டல், வல்லுறவு செய்யப்படும், சீண்டப்படும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். இதற்கான விசாரணைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையான வழியில் இருக்கும். இதுதான் சட்டத்தின் சிறப்பம்சம். 




நகரங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள் 

திருச்சி - 177

சென்னை - 1404

கோவை - 284

சேலம் - 361 

மதுரை -440

திருநெல்வேலி - 198 

திருப்பூர் - 187

2012ஆம் ஆண்டு போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -43

2020ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -3,187


2

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்குகளை வேகமாக பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசினார். இது குழந்தைகளுக்கான செயல்பாட்டாளர்களுக்கு பெரும் உற்சாகம் அளித்தது. இதனால் குற்றம் பற்றி சொல்லத் தயங்கியவர்கள் கூட இப்போது தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகின்றன. 

மதுரையில் கடந்த மாதம் அறிவியல் ஆசிரியர் 33 மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரிய வந்தது. இதற்கான உண்மை கண்டறியும் குழுத் தலைவராக நிர்மலா ராணி நியமிக்கப்பட்டிருக்கிறார். “வழக்கு விசாரணை முழுக்க மாணவிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் நடைபெறும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை நாங்கள் பின்பற்றுகிறோம்” என்றார் நிர்மலா. 

தொடக்கத்தில் போலீசார் இதுபோன்ற வழக்குகளை பெண்கள் புகார் செய்ய வந்தால், அவர்களே நீதிதேவதையாகி தராசு தட்டை கையில் ஏந்த தொடங்கிவிடுவார்கள். பல்வேறு கேள்விகளை கேட்பதே, பெண்கள் அங்கு புகார்களை பதிவு செய்யக்கூடாது என்பதை நோக்கமாக கொண்டுதான். இதனால் பல்வேறு விசாரணைகளில் பெண்களால் தங்களுக்கு, தங்களது மகளுக்கு நடந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாத நிலை இருந்தது. 

மேலும் இதுபற்றிய விசாரணை பல்வேறு அமைப்புகளின் மூலம் நடப்பதால், ஒரே கேள்வி, முன்பு சொன்ன அதே பதில் என அயர்ச்சி கொள்ள வைக்கும் முறை அது. பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்களுக்கு டூ பிங்கர்  என்ற சோதனையை இன்றும் கூட செய்துவருகிறார்கள். இதனை செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் கூறியபிறகும் கூட இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த சோதனையை மருத்துவர் செய்வார் என்றாலும் இது பாதிக்கப்பட்ட பெண்ணை மோசமான மனநிலைக்கு கொண்டு செல்லும். 

போக்சோ வழக்கு பதிந்தவர்களிடம் காவல்துறையினர் ஒரு விண்ணப்பம் ஒன்றை கொடுப்பார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை பதிவதோடு, அவர்களுக்கு அரசு தரும் இழப்பீடு, சட்டரீதியான உதவிகள், வசதிகள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும். மக்கள் பலருக்கும் இந்த வசதிகள் இருப்பதே தெரிவதில்லை. 

இதில் 16-18 வயதுடைய இளம்பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தீர்க்க பெண்களுக்கான நீதிமன்றங்களுக்கு வழக்குகளை அனுப்பி வைக்க தொடங்கியுள்ளனர். மேலும், இந்த வயதில் உள்ள பெண்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஒரு துணையை தேர்ந்தெடுத்தாலும் கூட அவர்களையும் போக்சோ வழக்கில் இணைத்துவிடும் பிரச்னையும் உள்ளது. காலத்திற்கேற்ப போக்சோ சட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்யவேண்டியது அவசியம். அப்போதுதான் பதிவாகும் குற்றங்களை வேகமாக தீர்க்க முடியும். 

இந்து ஆங்கிலம்

எஸ் பூர்வஜா 

pinterest




 


கருத்துகள்