இடுகைகள்

வர்க்கீஸ் குரியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணெய் வித்துகளில் தற்சார்பை இழந்த இந்தியா!

படம்
  கி.மு 3500 காலகட்டத்திலேயே ஹரப்பாவில் எள் பயிரை பயன்படுத்தியுள்ளனர் என்று 1930ஆம் ஆண்டு அகழ்வராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆனால், இதனை எதற்காக எப்படி பயன்படுத்தினர் என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால் எண்ணெய் உற்பத்திக்காக அதை பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகம்.  எள்ளின் பயன்பாடு பற்றி வேதகால எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பேஷர்னா, யந்த்ரா, சக்ரா என மூன்று வடிவங்களில், பயன்படுத்தியதாக எழுதப்பட்டுள்ளது என உணவு வரலாற்று வல்லுநர் கே டி அச்சயா தனது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால வணிகத்தில் பயன்பட்ட பொருளும் எண்ணெய் வித்துகள்தான். இந்தியாவில் எள் என்றால் மத்திய தரைப்பகுதி நாடுகளில், ஆலிவ் எண்ணெய்யைப் பயன்படுத்தினர். இன்றுவரை எண்ணெய் வித்துகள் சார்ந்த தொழிலில் இருக்கும் நிறுவனங்கள் வலிமையான வகையில் செயல்பட்டு வருகின்றன.  ஆர்ச்சர் டேனியல்ஸ், பங்கே, கார்ஜில் லூயிஸ் டெரிஃபஸ், அதானி வில்மர் ஆகிய நிறுவனங்கள் உலகளவில் எண்ணெய் வித்துகளை அரைத்து விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் எண்ணெய் என்பது இந்துஸ்தான் லீவரின் டால்டா வனஸ்பதியிலிருந்து தொடங்குகிறது. இதனை பங்கே நிறுவனம்

பால் மனிதர் குரியன்! - வர்க்கீஸ் குரியனின் சாதனை ’அமுல்!’

படம்
வெண்மைப்புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்  பிறந்த தினம் இன்று. இன்று பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் உள்நாட்டு வேளாண்துறையை, பால்துறையை பாதிக்கும் என்று கூறி அதனை தடுக்கின்றனர். இதேபோன்ற சிக்கலை அன்று அமுலின் தலைவரான வர்க்கீஸ் குரியன் சந்தித்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் பால் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. இவை அரசுக்கு உதவினாலும் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் எந்த ஆதரவையும் வழங்கவில்லை. காங்கிரசின் திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவில் கைரா மாவட்டத்தில் பல்வேறு ஊக்கமூட்டும் செயல்பாடுகளை குரியன் செய்தார். அனைத்தும் தன்னுடைய மேதமையை உலகிற்கு சொல்வது அல்ல. மக்களுக்கு உதவுவதாகவே அமைந்திருந்தன. கைரா பால் உற்பத்தியாளர் சங்கத்தை திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவுடன் வர்கீஸ் குரியன் உருவாக்கினார். இன்று அமுல் உலகின் முக்கியமான பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான உள்ளது. தனியார் நிறுவனம் போல செயல்பட்டாலும் கூட்டுறவு அமைப்பாக மக்களின் நலன்களுக்கானதாக உள்ளது. 1964ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கை