இடுகைகள்

விலைவாசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வரி உட்பட அதிகபட்சவிலை என்பது நகைச்சுவையா?

படம்
      மதுரையைச் சேர்ந்த பல்பொடி நிறுவனம். பல்பொடி, அலுப்பு மருந்து என விற்று இன்று அதே பல்பொடியில் பற்பசை அளவுக்கு முன்னேறியுள்ளது. அந்த நிறுவனத்தின் பல்பொடி பிராண்ட் பத்து கிராம் அளவுகொண்ட பாக்கெட் ரூ.2 விலை அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், நடைமுறையில் ஐந்து ரூபாயில் விற்கிறார்கள். அப்போது ரூ.2 என விலையை அச்சிட்டுள்ளது நகைச்சுவைக்காகவா? ஐந்து ஆண்டுகள் என காலாவதி காலத்தை அச்சிட்டுள்ள துணிச்சலான நிறுவனம், விலையை ஏன் இப்படி மாற்றி விற்க வேண்டும் என்று தெரியவில்லை.  இந்த நிலையில் பல்பொடியை, சித்த மருத்துவம் என்று வேறு போட்டு அதையும் கீழான நிலைக்கு கொண்டுவருகிறார்கள். வியாபாரிகள் இன்று அரசியலில் வலிமை பெற்று வருவதால், குறைகளை சுட்டிக்காட்டினால் கூட சட்டரீதியாக வழக்கு தொடர்ந்து மிரட்டும் ஆபத்துகள் அதிகரித்துள்ளன.   

வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! - பாயும் பொருளாதாரம்

        பாயும் பொருளாதாரம் 8 வட்டி விகிதம் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள்! உள்நாட்டு உற்பத்தி குறைவைப் பற்றி பேசினோம் அல்லவா? கும்பமேளாவுக்கு மக்களை ரயிலில் கூட்டிவந்து ஆற்றில் குளிக்கவைப்பதை விட அரசுக்கு நிறைய கடமைகள் பொறுப்புகள் உள்ளன. மும்பையில் முஸ்லீம் நடிகரைக் கத்தியால் குத்திவிட்டார்கள். அவர் முஸ்லீம் என்பதால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என மதவாத கட்சி வாதிடக்கூடும். பொருட்களின் விலை ஆண்டுதோறும் ஏறிக்கொண்டேதான் இருக்கும். அதை பணவீக்கம் எனலாம். மக்களின் வருமானம் உயர்ந்தால் பணவீக்கம் பற்றி பல்வேறு வர்க்க மக்களும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், வருமானம் குறைந்து வேலைநேரம் அதிகரித்து பொருட்களின் விலையும் விண்ணுக்கு ஏறினால் மக்கள் வெளிப்படையாக பேசுவார்கள். கைக்கூலி ஊடகங்கள் முணுமுணுப்பாக பேசிவிட்டு, கோவில் குடமுழுக்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சு, பற்பசையில் உப்பு இல்லை என திசைதிருப்ப பல பிரச்னைகள் உண்டுதானே? விலைவாசி உயர்வு, வேலையின்மை என பல்வேறு காரணங்களால் மக்கள் காசை செலவழிக்காமல் சேமித்து வைப்பார்கள். இப்படியான சூழலில் விலைபோகாத பொருட்கள், மெல்ல விலை குறையு...

Whole foods புகழ்பெற்றது எப்படி?

படம்
pixabay மிஸ்டர் ரோனி முழுமையான உணவு என்று ஒன்று உண்டா? முழுமையான உணவு என்பது அறுசுவையும் சேர்ந்து பாரதி மெஸ்சிலும், சரவணபவனிலும் சாப்பிடுகிறோமே அதுதான். இதுதான என திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் அத்தனை பொருட்களிலும் அளவு குறைத்து வைக்கும் தாராள மனசுக்காரர்கள் இவர்கள்தான். முழுமையான உணவு இயக்கம் 1940ஆம் ஆண்டு தொடங்கி புகழ்பெற்றது. இது எந்த வகையான உணவுமுறை என்றால் பதப்படுத்தாத பொருட்களை சாப்பிடுவதை வலியுறுத்துகிற முறை. இதில் ஆர்கானிக் என்ற வகை, அப்படி இல்லாத வகையும் உண்டு. ஆர்கானிக் என்றால் விலங்குகளின் கழிவுகளை, மரங்களின் இலைகளை உரமாக போட்டு பயிர்களை விளைவிப்பது. முழுமையான உணவு முறையில் செயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைய உண்டு. ஆனாலும் இது முழுமையான உணவு முறை என கூற முடியாது. இதில் பதப்படுத்தும் முறைகள் உண்டா? தக்காளியை அப்படியே சாப்பிட  அனைவராலும் முடியாது. அப்படி சமைத்தாலும் குறைந்தளவு வெப்பநிலையை பரிந்துரைக்கின்றனர். காரணம் அதிலுள்ள சத்துகள் இழக்கப்படுவதுதான்.ஆப்பிளைக் கூட தோலை உரிக்காமல் கழுவிவிட்டு அப்படியே சாப்பி...