இடுகைகள்

தேவன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உரையாடல்களில் வல்லவரான தேவன் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  24.1.2022 அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். உடல்நலமும் மனநலமும் மேம்பட்டிருக்க பேரிறையை வேண்டுகிறேன். பத்து நாட்களுக்கு முன்னர் ஆர்டர் செய்த வினோத் மேத்தா பற்றிய நூல் இன்றுதான் கைக்கு வந்தது. டிஹெச்எல் ப்ளூடர்ட் ஆட்கள் கூரியரில் கிடைத்தது. அவுட்லுக் பத்திரிகை நிறுவனர், ஆசிரியரின் சுயசரிதை நூல். இனிமேல்தான் படிக்கவேண்டும். அரசின் மின்நூலகத்தில் மறைமலையடிகள் கடித நூலை தரவிறக்கிப் படித்தேன். தமிழ் சொற்களின் பயன்பாடு நன்றாக உள்ளது. அவர் எழுதிய கடிதங்கள் அனைத்தும் ஆண்டு அடிப்படையில் தொகுக்கப்படவில்லை. கடிதத்ததில் உரிய பெயர்களும் கூட இல்லை. மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாம் பாகத்தை படித்துக்கொண்டு இருக்கிறேன். மனிதரின் குணத்தை உடனே வெளிப்படுத்தும் தெரிந்துகொள்ளும் வகையிலான உரையாடல்கள் எழுத்தாளர் தேவன் வல்லவராக இருக்கிறார். உறவினர்களால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழந்த வேதாந்தம் எப்படி சென்னைக்கு வந்து பத்திரிகையாளராகி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்கிறார் என்பதே கதை. உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி அன்பரசு படம் - ஞானசம்பந்தன் வலைத்தளம்

விளைவுகளை அறியாமல் செயல்படும் நாட்டின் தலைவர்!

படம்
  விளைவுகளைப் பற்றிய அறிவற்ற தலைவர் 8.1.2022 சென்னை -4   அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா? நேற்று புக்டே.இன் எனும் தளத்திற்கு சென்றேன். பாரதி புத்தகாலயத்தின் தளம். அதில் படிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருந்தன. ஆகார் படேலின் நேர்முகம் ஒன்றைப் படித்தேன். கரண் தாப்பர் நேர்காணல் செய்திருந்தார்.’’ தீர்மானமான ஆற்றல் மிக்க என்பதோடு, விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடியவர்’’ என ஆகார் படேல் பயன்படுத்திய சொற்கள் வினோதமாக பட்டது. மோடியைப் பற்றிய கூறியவை. கரண்தாப்பர், அவர் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என கேட்டு கேள்விகளை அமைத்திருந்தார். நல்ல நேர்காணல். போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றால் வெளியே எங்காவது போகவேண்டும். ‘’மாணவர் இதழை 50 இதழ்களாக வெளியிடலாம்’’ என எடிட்டர் கூறினார். ஆனால் ஒரு இதழ் வெளிவருவதே கடினமாகிவிட்ட சூழ்நிலை. தேவையான விஷயங்களை எழுதி கணினியில் ஏற்றிவிட்டு எங்காவது செல்ல முடிந்தால் திட்டமிட்டு செல்லவேண்டும். காரியத் தடைகளால் அனைத்தும் அப்படியே நிற்கின்றன. இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளம் சென்று பார்த்தேன். நிறைய நூல்களை வைத்திருக்கிறார்கள்.

வலியால் மரத்துப்போகும் உடல்! - கதிரவனுக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  12.7.2021 மயிலாப்பூர் அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  வீட்டில் அப்பாவும் அம்மாவும் நன்றாக இருக்கிறார்களா? வேலை எப்படி போகிறது? தாய் - மார்க்சிம் கார்க்கி நாவலைப் படித்தேன். 1334 பக்கம். தொழிலாளர்களின் போராட்டம்தான் கதையின் மையம். பொதுமக்களிடம் புரட்சி பற்றி நீலவ்னா பாத்திரம் பேசுவது போல அமைந்த பகுதிகள் உணர்வெழுச்சியுடன் அமைந்துள்ளன.  ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி இதழுக்கான வேலைகள் தொடங்கும் என நினைக்கிறேன். அப்படித்தான் மேலிடம் கூறியிருக்கிறது. பார்ப்போம். பதிப்பக வேலைகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. இந்தளவு பதிப்பாக வேலைகள் ஜவ்வாக இழுபடுவதை நான் எங்கும் பார்க்கவில்லை. ரூமில் படுத்து தூங்க பாய் இன்னும் வாங்கவில்லை. பிளாஸ்டிக் பாய்தான் என்னுடைய விருப்பம். சாதாரண பாய் வாங்கினால், எளிதாக பூஞ்சைத் தாக்குதலுக்கு உள்ளாகிவிடுகிறது. தேவன் எழுதிய சின்னஞ்சிறு கதைகள் எனும் நூல் தொகுதியைப் படித்துக்கொண்டு இருக்கிறேன். குறைவான விவரிப்புகளுடன் புன்னகையோடு படிக்கும் சிறுகதைத் தொகுதி இது.  அன்பரசு  2 21.7.2021 மயிலை அன்புள்ள கதிரவனுக்கு, வணக்கம். நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. ஒரு கடிதம் எழுதி அன

தேவனின் நீரோட்டம் போன்ற எழுத்து கொடுத்த ஆச்சரியம்! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புள்ள வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா? நேற்று முழுக்க அறையில்தான் இருந்தேன். நீரெல்லாம் கங்கை - கடித நூலை எழுதி தொகுத்து அமேசானில் வெளியிட்டேன். உங்களிடம் உள்ள கடிதங்களை மறுமுறை வரும்போது பெற்றுக்கொள்கிறேன். நான் வடிவமைத்த அட்டைப்படத்தை உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன்.  ஃபேஸ்புக்கில் உள்ள உங்களது படங்களை எனது பிளாக்கில் பயன்படுத்தியுள்ளேன். இதற்கான தொகையை பிறகு தீர்ப்பேன். மிஸ்டர் வேதாந்தம் - தேவன் நாவலைப் படித்தேன். 44 வயதில் இறந்துபோன தேவனின் எழுத்து நீரோட்டம் போல செல்கிறது. கதை தஞ்சாவூரில் தொடங்கி, கும்பகோணம் சென்று பிறகு சென்னையில் மையம் கொள்கிறது.  தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தத்தின் வாழ்க்கைப்பாடுதான் கதை. அரவிந்த் குப்தா அவர்களின் வலைத்தளத்தை அண்மையில் பார்வையிட்டேன். அதில் ஏராளமான நூல்கள் உள்ளன. ஆச்சரியமாக இருந்தது.  போனில் தரவிறக்கி வைத்திருந்த மின்னல் முரளி மலையாளப்படத்தை பார்த்தேன். பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை இயல்பான முறையில் எடுக்க முயன்றிருக்கிறார்கள். ஷிபு பாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரம்தான் ஈர்க்கிறார். ஜெய்ஷன், ஷிபு என இரு நபர்களுக்கு கி

தாத்தாவின் சொத்தை மீட்க நினைக்கும் பேத்தி, அவளுக்கு உதவும் காதலன்! - கல்யாணி - தேவன்

படம்
  கல்யாணி - தேவன் கல்யாணி தேவன் அல்லயன்ஸ் 220 தேவன் எழுதிய ஹாஸ்யரசமிக்க நாவல் இது. சென்னை முதல் கும்பகோணம் வரை வந்து பிறகு மீண்டும் சென்னைக்கு சென்று நிறைவு பெறுகிறது. இப்படி சொன்னால் ஏதோ ரயில் பயணத்தைப் பற்றிய சொல்லுவது போல உங்களுக்குத் தோன்றும். உண்மை அப்படித்தான் என்றாலும் கதையில் நெருக்கமான உணர்ச்சிகள் மிக குறைவு.  கல்யாணி சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு அவளுடைய தாத்தாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதாவது அவளது தாத்தா இறந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. எனவே, நீ உடனே கிளம்பி வா என்று. கல்யாணிக்கு பயங்கரமான அதிர்ச்சி. சமீப நாட்களில் அவளை தாத்தா வீட்டுக்கு அழைக்கவில்லை. ஏனென்ற காரணம் தெரியாமல் தவித்து வருகிறாள். திடீரென இறப்புச் செய்தி வர தடுமாறிப் போகிறாள். இவளது ஆப்த தோழி உமாவிடம் என்னவென்று பார்க்கப் போகிறேன் என்று சொல்லி கிளம்புகிறாள்.  ரயில் கிளம்பும்போது அவளுக்கு கிடைக்கும் டிக்கெட்டை சுந்தரம் என்பவன் எடுத்து தருகிறான். இத்தனைக்கும் அவனும் கும்பகோணம் போகவேண்டியிருக்கிறது. கிடைத்த கடைசி டிக்கெட்டையும் அவனது நண்பன் நீலுவின் தங்கை உமாவுக்காக, அவளின் தோழி கல்யாணிக்கு

எழுத்து திறமையை வளர்த்துக்கொண்டு சாதிக்கும் வேதாந்தம்! - மிஸ்டர் வேதாந்தம் 2 - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் 2 தேவன் அல்லயன்ஸ்  மிஸ்டர் வேதாந்தம் நூலின் இரண்டாவது பாகம்.  முதல் பாகத்தில் வேதாந்தம், தலைமுறையாக பணக்காரனாக இருந்தாலும் மெல்ல குடும்ப நிலையை உணர்கிறான். ஆனால் அதற்குள் நிலைமை கைமீறிப்போகிறது.  தஞ்சையில் இருந்த அப்பா தேசிகாச்சாரி, பணத்தை கௌரவமாக செலவிட்டு நிறைய கடன்களுக்குள் சிக்கியிருக்கிறார். அதனை பையனுக்கு நேரடியாக சொல்லாமல் தவிர்க்கிறார். படிப்பில் அவன் பட்டம் பெற்றால், தனது வாழ்க்கையைப் பாரத்துக்கொள்வான் என நினைக்கிறார். ஆனால் வேதாந்தத்தின் மனம் படிப்பில் செல்லவில்லை. அவனுக்கு எழுதுவதில் திறமை உள்ளது. அதனை வளர்த்துக்கொண்டு வேலையைத் தேடலாம் என நினைக்கிறான்.  தேசிக்காச்சாரியின் உடல்நிலை கெடும்போது, அவனது நிதிநிலை அவனது மாமா கோபாலசாமி அய்யங்காருக்கு தெரிய வருகிறது. அவருக்கு தேசிகாசாரியின் பணத்தின் மீது ஆசை. தனது பேத்திகளில் ஒருத்திக்கு வேதாந்தத்தை மணம் செய்து கொடுத்தால்,  சொத்து கிடைக்கும் என நினைக்கிறார். ஆனால் தேசிகாச்சாரிக்கு கடன் மட்டுமே இருக்கிறது என தெரிந்ததும், கடன்காரர்களோடு சேர்ந்து கூடி சொத்தை சூறையாடுகிறார். இதனால் வேதாந்தம் அத்தையோடு தங்கியிருக்கிறான

எழுத்தை நம்பி சென்னைக்கு வரும் தஞ்சாவூர் இளைஞனின் போராட்டம்! - மிஸ்டர் வேதாந்தம் - தேவன்

படம்
  மிஸ்டர் வேதாந்தம் - 1 தேவன் மிஸ்டர் வேதாந்தம் முதல் பாகம் தேவன் அல்லயன்ஸ்  வேதாந்தம் என்ற இளைஞனின் வாழ்க்கை, தடாலென ஒரேநாளில் கீழே விழுகிறது. அதற்குப் பிறகு அவன் தனது வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்கிறான் என்பதே நாவலின் மையம்.  தினந்தந்தியின் திரைவிமர்சனம் போல கதையின் கரு இதுதான் என்று சொன்னாலும் கூட நாவல் நெடுக வேதாந்தத்தின் மனநிலையை விவரிப்பது கடினமானது. சில பக்கங்களை வாசித்து விட்டு மெல்ல அவரின் மனநிலையோடு இணையும்போது நாவலை ரசிக்கத் தொடங்குகிறோம்.  தஞ்சாவூரில் வாழும் தேசிகாச்சாரி என்பவரின் மகன் வேதாந்தம். இவரின் பணம், செல்வாக்கு காரணமாக ஊரில் பெரிய மதிப்பு உண்டு. ஆனால் அவரை உண்மையாகவே மதிப்பவர்கள் குறைவு என்பதை அவர் மறைவின்போது, வேதாந்தம் கண்டுகொள்கிறான். அவனுக்கு அந்த சூழலில் ஆதரவு தருவது அவனது அத்தையும் அவளது பெண்ணான செல்லமும்தான். அத்தங்காள் செல்லம் என்றே கடிதங்களில் வருகிறது. அப்படியே வைத்துக்கொள்வோம் அழகாக இருக்கிறது அல்லவா? தேசிகாச்சாரிக்கு கிடைத்த பணம் அவரை ஆணவம் கொண்டவராக மாற்றுகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பணத்தை செலவு செய்கிறார். குறிப்பாக அவரது மாமா கோபாலசாமி அய்

உறவுகளை சமாளித்து குற்றங்களை துப்புதுலக்கும் சாம்பு! - துப்பறியும் சாம்பு - 2 - தேவன்

படம்
  துப்பறியும் சாம்பு - 2 தேவன்  அல்லயன்ஸ்  சாம்புடன் எழுத்தாளர் தேவன் - நன்றி - இந்து தமிழ் துப்பறியும் சாம்பு பற்றிய குறிப்பை முன்னதாகவே எழுதியிருக்கிறோம். இதனால் நேரடியாக கதைக்குள் போய்விடலாம். முட்டாள் சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறி நிறைய வழக்குகளை கண்டுபிடிக்கிறார். கூடவே இதன் மூலம் தனக்கான இனத்தில் வேம்பு என்ற பெண்ணையும் கரம் பிடிக்கிறார். அவள் மூலம் ட்ரேட்மார்க் மூக்கு கொண்ட சுந்து என்ற ஆண் பிள்ளை பிறக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் சாம்புவுக்கு சுப்பு என்ற பெண் குழந்தை பிறக்கிறது.  அதுதான் கதையா என அயர்ச்சியாக கூடாது. இம்முறை சாம்பு, இங்கிலாந்து சென்று கோமாளித்தனங்கள் செய்து அடிவாங்கியும் கூட புகழ்பெற்று வருவதோடு கடைசி அத்தியாயம் முடிவுக்கு வருகிறது. அதில்தான் செய்தியாக சுப்பு என்ற பெண்பிள்ளை பிறப்பதாக கூறப்படுகிறது. வேம்புவும் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்து சேர்கிறாள்.  இந்த நாவலில் பெரும்பாலும் கதைகள் எப்படி அமையும் என்றால், சாம்பு ஏதேனும் வழக்கை கோபாலன் சொல்லி எடுத்துக்கொள்வார். பிறகு தன் மனம்போக்கில் அதனை ஆராய்ந்து அடிவாங்கி பிறகு கோபாலன் மூலம் அதிலிருந்து மீண்டு வருவ

கோமாளித்தனமான சாம்பு, துப்பறியும் சாம்புவாக மாறும் கதை! - துப்பறியும் சாம்பு - தேவன்

படம்
  துப்பறியும் சாம்பு 1 தேவன் அல்லயன்ஸ் வெளியீடு துப்பறியும் சாம்பு நூல், வங்கியில் வேலை செய்யும் சாதாரண எழுத்தர் எப்படி புகழ்பெற்ற துப்பறிவாளர் ஆகிறார் என்பதை விவரிக்கிறது. சாம்பு, நீளமான பினாச்சியோ மூக்கு, விளாங்காய் மண்டை, கோட், வேஷ்டி கட்டிய பிராமணர். முகத்திலேயே அசடு வழிபவரை பார்த்தவுடனே யாரும் முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். இப்படி இருக்கும் ஒருவர் அதிர்ஷ்டத்தால் தொட்டது அனைத்தும் துலங்கி புகழ்பெற்ற துப்பறிவாளர் எப்படி ஆகிறார் என்பதுதான்  முதல்பாக துப்பறியும் சாம்புவின் மையக்கதை.  பதினான்காவது பதிப்பு 2021இல் வெளியாகியிருக்கிறது. முதல் பாகத்தில் 27 அத்தியாயங்கள் உள்ளன. இதில்தான் வங்கியில் வேலை செய்யும் சாம்பு, அவமானப்படுத்தப்படுகிறார். அதற்காகவெல்லாம் அவர் ரொம்ப துடிக்கவில்லை. சோறு முக்கியமே என அதனை சகித்துக்கொண்டு இருக்கிறார். அப்போது வங்கி மேலாளர் அலுவலக காரை பயன்படுத்தி தகிடுதத்தம் செய்கிறார். அதை சாம்பு ஊழ்வினை காரணமாக மோப்பம் பிடிக்கிறார். அதை மேலாளரிடமே உளறி வைக்க அவர் பணத்துடன் தப்பியோடுகிறார். உடனே வங்கியின் தலைவர் அந்த கோபத்தில் சாம்புவை வெளியே போடா முட்டாள் என்கிறார்.