தாத்தாவின் சொத்தை மீட்க நினைக்கும் பேத்தி, அவளுக்கு உதவும் காதலன்! - கல்யாணி - தேவன்

 





கல்யாணி - தேவன்










கல்யாணி

தேவன்

அல்லயன்ஸ்

220


தேவன் எழுதிய ஹாஸ்யரசமிக்க நாவல் இது. சென்னை முதல் கும்பகோணம் வரை வந்து பிறகு மீண்டும் சென்னைக்கு சென்று நிறைவு பெறுகிறது. இப்படி சொன்னால் ஏதோ ரயில் பயணத்தைப் பற்றிய சொல்லுவது போல உங்களுக்குத் தோன்றும். உண்மை அப்படித்தான் என்றாலும் கதையில் நெருக்கமான உணர்ச்சிகள் மிக குறைவு. 

கல்யாணி சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது அவளுக்கு அவளுடைய தாத்தாவிடமிருந்து கடிதம் வருகிறது. அதாவது அவளது தாத்தா இறந்து 15 நாட்கள் ஆகிவிட்டது. எனவே, நீ உடனே கிளம்பி வா என்று. கல்யாணிக்கு பயங்கரமான அதிர்ச்சி. சமீப நாட்களில் அவளை தாத்தா வீட்டுக்கு அழைக்கவில்லை. ஏனென்ற காரணம் தெரியாமல் தவித்து வருகிறாள். திடீரென இறப்புச் செய்தி வர தடுமாறிப் போகிறாள். இவளது ஆப்த தோழி உமாவிடம் என்னவென்று பார்க்கப் போகிறேன் என்று சொல்லி கிளம்புகிறாள். 

ரயில் கிளம்பும்போது அவளுக்கு கிடைக்கும் டிக்கெட்டை சுந்தரம் என்பவன் எடுத்து தருகிறான். இத்தனைக்கும் அவனும் கும்பகோணம் போகவேண்டியிருக்கிறது. கிடைத்த கடைசி டிக்கெட்டையும் அவனது நண்பன் நீலுவின் தங்கை உமாவுக்காக, அவளின் தோழி கல்யாணிக்கு கொடுத்துவிடுகிறான். டிக்கெட் கிடைக்காத காரணத்தால் அதெல்லாம் எதுக்கு என பெருமாள் மீது பாரத்தைப் போட்டு வண்டி ஏறிவிடுகிறான். ஆனால் நடுவில் டிடிஆர் வந்துவிட பயணம் தடைபடுகிறது. இந்த நேரத்திற்குள் கல்யாணி தனது தாத்தா வீட்டை அடைந்துவிடுகிறாள். அங்கு, நாகலட்சுமி என்ற சமையல்காரி இருக்கிறாள். கூடவே அவளின் இரு மகள்களான அலமேலு, காந்தா. இவர்கள் தாத்தாவின் வட்டிக்கு சேர்த்த சொத்தை அபகரித்து விட்டனர். கல்யாணியை கண்டபடி ஏசி சொத்து எங்களுக்கு சொந்தம் நீ மரியாதையாக வீட்டை விட்டு போய்விடு என பேசுகிறார்கள். 

கல்யாணிக்கு சொத்து என்பதை விட தாத்தா இறந்துபோன துக்கமே அதிகம் இருக்கிறது. 

இந்த நேரத்தில் அங்கு வரும் சுந்தரம் தனது நண்பன் அய்யாச்சாமியுடன் சேர்ந்து ஏதாவது வேலை செய்யலாம் என நினைக்கிறான். துரதிர்ஷ்டமாக அய்யாச்சாமி தங்கியிருக்கும் கீழ்வீடு, மேல்மாடி என அந்த குடியிருப்பே கல்யாணியின் தாத்தாவுக்கு சொந்தானது. இதனால் கல்யாணிக்கு நேர்ந்ததைக் கேட்ட சுந்தரம், அவளுக்கு உதவி செய்ய நினைக்கிறான். அதனால் நேரும் பல்வேறு பிரச்னைகள்தான் கதை. 

இதில் நாகலட்சுமியை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்க நினைக்கும் நரசிம்மனின் சாமர்த்தியம், துப்பு துலக்குவதில் ஆச்சரியமான திறமை கொண்ட சந்துரு, உளறிக் கொட்டும் விபூ ஆகியோரின் பாத்திரங்கள் வாசிப்பை சுவாரசியமாக்குகின்றன. இதில் சந்துருவுக்கு இணையான சாமர்த்தியம் கொண்ட பாத்திரமாக நீலு என்ற சுந்தரத்தின் அலுவலக நண்பன் வருகிறான். இவன்தான் நாவலில் வரும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் கல்யாணி வேண்டும் ஈச்வரன். 

துப்பறியும் சாம்பு கதையில் வரும், கோபாலன் இதில் வருகிறார். அவருக்கு இதிலும் நல்ல குணம் கொண்ட பாத்திரம்தான். ஸர்க்கிள் எமகாதகன் என அவரை டெரராக காட்ட முயல்கிறார்கள். ஆனால் அது சந்துருவுக்கு வேலை செய்கிறது. 

கீழேவிழும் கல்யாணியை சுந்தரம் தாங்கிப்பிடிப்பதுதான் ஜோடிகளுக்கு இடையிலான ஒரே கெமிஸ்ட்ரி. வேறெதுவும் இல்லை. எல்லாமே மனப்பூர்வமான சமாச்சாரங்கள்தான். 

சுபமான முடிவு கொண்ட கதைதான் அதனால் சந்தோஷமாக நீங்கள் வாசிக்கலாம். தேவனின் சுவாரசியமாக எழுத்தும் நகைச்சுவையும் எடுத்த நூலை வேகமாக வாசிக்க வைக்கிறது. 




45ஆவது புத்தக கண்காட்சி

சென்னை நந்தனம்




கருத்துகள்