எஸ்ஓஎஸ் சிக்னல்- ஆபத்தில் உள்ளவர்களை காக்கும் அடையாளம்
எஸ்ஓஎஸ் சிக்னல் (SOS Signal)
கடலில் அல்லது மலைப்பகுதியில் அவசர நிலையின்போது, ஆபத்தில் உள்ளவர்கள் தீப்பந்தம் ஒன்றை எரிய விடுகிறார்கள். இதனை ஃபிளேர்ஸ் (flares) என்று அழைக்கின்றனர். இதிலுள்ள வேதிப்பொருட்கள் பல்வேறு நிறங்களில் எரியும் என்பதால், தொலைதூரத்தில் உள்ளவர்களும் இதனைப் பார்க்கலாம். ஆபத்து சமிக்ஞையைப் பார்க்கும் விமானப்படையினர், எளிதாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவுகிறார்கள்.
ஃப்ளேர்ஸ், பெரும்பாலும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் தயாரிக்கப்படுகிறது. பகல் மற்றும் இரவிலும் இதனை எளிதாக காணலாம். இதில் சிலவகை ஃபிளேர்ஸ், எரியும்போது புகையை மட்டுமே வெளிவிடும். காடுகளில் இவ்வகையைப் பயன்படுத்துகிறார்கள். வானில் விமானத்திலிருந்து பார்க்கும்போது காடுகளின் பகுதிகளை துல்லியமாக பார்க்க முடியாது. இச்சமயங்களில், நெருப்பை விட புகையை எளிதாக அடையாளம் காணலாம்.
ஒருவர் கையில் பிடித்து ஃப்ளேர்ஸை எரித்தால் அது 1 நிமிடம் முழுதாக எரியும். அதனை ஐந்து கி.மீ. தூரத்தில் இருப்பவர்கள் பார்க்கலாம்.
ஃப்ளேர்ஸில் உள்ள வேதிப்பொருட்கள் எரியும்போது, ஆக்சிஜனை வெளியேற்றுகிறது. இதன் காரணமாகவே அதில் பற்றிவைக்கப்படும் நெருப்பு பிரகாசமான ஒளியை வெளியிடுகிறது. வெடிகுண்டு பௌடரிலும் சல்பர், கரி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வெடிமருந்தின் பயன்பாடு வேறு என்பதால் அதனை இறுக்கமாக மூடி உருவாக்குகின்றனர். ஃப்ளேர்ஸைப் பொறுத்தவரை அதனை பாதுகாப்பானதாக கையாளும்படி உருவாக்குகிறார்கள்.
ஃப்ளேர்ஸை பற்ற வைக்கும்போது, அதில் கலந்துள்ள வெவ்வேறு உலோக உப்புகள் பல்வேறு நிறங்களில் எரிகின்றன. ஆய்வாளர்கள் இதனை சோதித்தபோது, அடர்த்தியான சிவப்பு நிறத்தை ஸ்ட்ரான்டியமும் (strontium), ஆரஞ்சு நிறத்தை கால்சியமும் (Calcium), மஞ்சள் நிறத்தை சோடியமும் (sodium)கொடுத்தது அறியப்பட்டது.
தகவல்
super science encyclopedia
how science shapes our world
https://www.mentalfloss.com/article/31911/what-does-sos-stand
image - Pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக