சதுப்புநிலத்தைக் காக்கும் இந்திய அரசின் திட்டம்!

 








சூழலைக் காக்கும் சதுப்புநில நண்பன்  திட்டம்!

இந்தியா முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள், சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு உதவுகின்றன. இவற்றை பாதுகாப்பதும், ஆக்கிரமிப்பிலிருந்து தடுப்பதும் சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்கான தீர்வை வெட்லேண்ட் மித்ரா (Wetland Mitra) எனும் திட்டத்தை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. 

தற்போது, சென்னையில் 'சதுப்புநில நண்பன்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, சூழலியலில் ஆர்வம் உள்ளவர்கள், தன்னார்வலராக இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட இடைவேளையில் ஏரி, சதுப்பு நிலங்களைக் கண்காணிக்க வேண்டும். இதுதான் அவர்களது பணி. இதன்மூலம் ஏரி, சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உறுதிப்படுகிறது. அங்கு வரும் பறவைகள், பட்டாம்பூச்சிகள் பற்றிய துல்லியமான தகவல்களும் சதுப்புநில ஆணையத்திற்கு கிடைத்துவிடுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக மாவட்ட ஆட்சியர் உள்ளார். தேவையான அரசு அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க தன்னார்வலர்களின் தகவல்கள் உதவுகின்றன. 

“தற்போது சென்னையில் 106 சதுப்பு நில நண்பர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைப் பெற்று சதுப்புநிலங்களைப் பற்றிய தகவல் தொகுப்பை எளிதாக உருவாக்கமுடியும் ” என்றார் மாவட்ட வனத்துறை அதிகாரியான பிரியதர்ஷினி வெங்கட்ராமன். 

சதுப்புநில நண்பராக பணிபுரிய, விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதில் ஒருவர் , தான் கண்காணிக்க விரும்பும் ஏரியின் பெயரைக் குறிப்பிட வேண்டும். அதில் மாதம்தோறும் செலவிட முடியும் நேரத்தை தெளிவாக கூறுவது அவசியம். விண்ணப்பத்தில் வயதைக் குறிப்பிட அவசியமில்லை. இப்பணிக்கு வயது தடையல்ல என்பதே இதன் பொருள். 

சென்னையில் அதிகாரப்பூர்வமாக 31 சதுப்புநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  மதிப்பீட்டு ஆய்வுகள், தூய்மைப்படுத்தும் பணி, பறவைகளைக் கணக்கெடுத்தல், விழிப்புணர்வு பிரசாரம் என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவற்றில் தன்னார்வலர்கள், தங்களுக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதில் இணைந்துகொள்ளலாம். பள்ளிகளில் சூழல் கிளப்புகள் இருந்தால், அவர்கள் சதுப்புநிலத்தை காக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை செய்யலாம் என வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

சதுப்புநில நண்பன் திட்டத்தின் விண்ணப்பத்தைப் பெற

Chennaiwetland@gmail.com

தகவல்

Do you want to be a chennai wetland mitra?(prince frederic)

hindu downtown

pinterest



கருத்துகள்