உக்ரேன் பற்றி முழுமையாக அறிய உதவும் நூல்களின் வரிசை!

 


























உக்ரைன் பற்றித்தான் பேச்சு. பலரும் பெருந்தொற்று காலத்தில் போனை எப்படி நோண்டிக்கொண்டே பதற்றத்துடன் இருந்தார்களோ இப்போதும் அதேயளவு பழக்கம் அதிகரித்து வருகிறது என ஊடகங்கள் சர்வே எடுத்து சொல்லி வருகின்றன. போர் காட்சிகள், அழுகை, மரண ஓலம் என அனைத்தும் உடனுக்குடன் காட்சிகளாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஷ்ய இலக்கியத்தை நிறையப் பேர் படித்திருப்பார்கள். அதன் வழியாக ரஷ்ய நிலப்பரப்பு பற்றி அறிந்தவர்கள் பலர். ஆனால் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, தனியாக சுதந்திர நாடுகளான பல நாடுகளைப் பற்றி நமக்கு தெரிந்தது குறைவு. இப்போது நாம் பார்க்கப்போகும் நூல்கள் உக்ரைன் பற்றியதுதான். 

தி கேட்ஸ் ஆப் யூரோப் எ ஹிஸ்டரி ஆப் உக்ரைன்
செர்கி புளோகி

ஹார்வர்ட் உக்ரேனியன் ஆராய்ச்சி கழக தலைவர் புளோகி. இவர் உக்ரைன் நாடு சுதந்திர நாடாகவும் தனி அடையாளத்திற்காகவும் கி.மு.45,000 ஆண்டுகளாக முயன்று வந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் முன்வைக்கிறார். இந்த ஆதாரங்களும் சம்பவங்களும் கடந்தகாலத்தை நினைவுபடுத்துவதோடு நிகழ்காலத்தைப் பற்றியும் யோசிக்க வைக்கிறது. 

கிரே பீஸ் 
ஆண்ட்ரேய் குர்கோவ்

கிழக்கு உக்ரேனில் உள்ள தேனீ வளர்ப்பவரின் வாழ்க்கை வழியாக உக்ரேனின் வரலாறு பற்றி பேசும் நூல் இது. இதனை எழுதிய ஆண்ட்ரேய் முக்கியமான நாவலாசிரியர். இவர் எழுதிய உக்ரேன் டயரிஸ் என்ற நூலும் முக்கியமானது. 

ஃபீல்ட்வொர்க் இன் உக்ரேனியன் செக்ஸ்
ஒக்சனா ஸாபுஷ்கோ

உக்ரேன் சுதந்திரமடைந்த பதினைந்து ஆண்டுகளில் பெரும் செல்வாக்கு பெற்ற நூல் என குறிப்பிடப்படுகிறது. நூலில் கவிஞர் மற்றும் பேராசிரியர் ஆகிய இருவரின் வாழ்க்கைப் பற்றி பேசப்படுகிறது. உக்ரேனில் உள்ள பிரச்னைகளைப் பற்றி நாவல் வெளிப்படையாக பேசுகிறது. 

கான்ஃபிலிக்ட் இன் உக்ரைன் 
ராஜன் மேனன் அண்ட் யூஜின் ரூமெர்

2014ஆம் ஆண்டு உக்ரேனின் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தது. இந்த நூல் ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் உள்ள பிரச்னைகளைப் பேசுகிறது. வரலாற்று ரீதியாக ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் உள்ள தொடர்பையும். பிரச்னைகளையும் வாசகர்கள் எளிதாக தெரிந்துகொள்ள உதவும் நூல் இது. 

தி ஆர்பனேஜ்
செர்கி ஸாதன்

கிழக்கு உக்ரேனில் உள்ள ஆசிரியர் பாஷா. இவர் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உறவுக்காரரை மீட்க நினைக்கிறார். இவரால் அதனை செய்ய முடிந்ததா இல்லையா என்பதை நாவல் விவரிக்கிறது. 

ரெட் ஃபெமைன்
ஸ்டாலின் வார் ஆன் உக்ரேன்
அன்னா ஆப்பிள்பாம்

புலிட்சர் பரிசு வென்ற வரலாற்று வல்லுநரான அன்னா ஆப்பிள்பாம் எழுதியுள்ள நூல் இது. ஸ்டாலின் கம்யூனிய ஆட்சியால் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளை விளக்கி ஆதாரங்களுடன் எழுதியுள்ளார். அரசியல், சமூகம் ரீதியாக என்ன மாற்றங்கள், விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று பேசியுள்ளார். 

பேபி யார்
அனடோலி குஷ்னெட்சோவ்

1941ஆம் ஆண்டு எழுதப்பட்டு வெளியான நூல் இது. இதனை எழுதியவர் டீனேஜ் பையனாக இருந்த அனடோலி. நாஜிக்கள் அப்போது ரஷ்யாவின் மீது தாக்குதல் நடத்தியதில் உக்ரேனின் கீவ் நகரில் இருந்த 33,771 யூதர்கள் கொல்லப்பட்டனர். அதனை உணர்ச்சிகரமான முறையில் பதிவு செய்துள்ள நூல் இது. 




டைம்ஸ் ஆப் இந்தியா 




கருத்துகள்