டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம்!
கேள்வியும் பதிலும்!
டிராகன் போல நெருப்பை உமிழும் உயிரினம் உண்டா?
வாயில் நெருப்பை உமிழும் உயிரினம் இருக்கிறதா என்றால், இல்லை என்பதே பதில். நெருப்புக்கு இணையாக வேதிப்பொருளைப் பின்புறமாக உமிழும் உயிரினம் உண்டு. அதன் பெயர், பாம்பர்டியர் பீட்டில் (Bombardier beetle). இந்த வண்டு பிறரால் தாக்கப்படும்போது சூடான, எரிச்சல் உண்டாக்கும் திரவத்தை விசிறியடிக்கிறது. இதில் இரு வேதிப்பொருட்கள் உள்ளன.
ஹைட்ரோகுயினோன் (Hydroquinone), ஹைட்ரஜன் பெராக்சைடு (Hydrogen peroxide) இந்த இரண்டுமே வண்டின் வயிற்றுப் பகுதியில் தனித்தனி இடங்களில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும் அவசரநிலையில், ஒன்றாக கலக்கப்பட்டு வெளியேறுகிறது. இதனை ஏதேனும் உயிரினம் விழுங்கினால் கூட வேதிப்பொருட்களை ஸ்ப்ரே செய்வதால், இதனை கீழே துப்பிவிடுகின்றன.
நர்ட்லெஸ் (Nurdles) என்றால் என்ன?
சிறிய பிளாஸ்டிக் துண்டு அல்லது துகள்கள் எனலாம். இதனை பிளாஸ்டிக் உற்பத்தித் துறையில் பயன்படுத்துகிறார்கள். தோராயமாக ஆண்டுக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் டன்கள் தயாரிக்கப்பட்டு நிலம், நீரில் கழிவாக தேங்குகிறது. கடலில் நர்ட்லெஸ் கழிவுகள் போடப்படுவதால், கடல் உயிரினங்கள் இதனை உணவு என நினைத்து சாப்பிடும் வேதனையான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக