பெண்களே நடத்தும் பூம்புகாரின் டால்பின் உணவகம்!

 

டால்பின் உணவகம் நடத்தும் மீனவப் பெண்கள்


பூம்புகாரில் உள்ள கடற்கரையோரமாக அமைந்துள்ளது. டால்பின் உணவகம். ஆஸ்பெஸ்டாஸ் போட்ட கூரைகளால் அமைந்து உணவகம் இது. கடற்கரையோரம் இதுபோல கடைகள் அமைவது பெரிய ஆச்சரியம் அல்ல. இதனை முழுக்க பெண்களே கூட்டாக பணம் போட்டு நடத்துவதுதான் ஆச்சரியமானது. 

கடற்கரையோரமாக வாழும் பெண்கள், தொழில்முனைவோராக இருப்பது ஆச்சரியமல்ல. ஆனால் இப்படி முறையாக கடை தொடங்கி நடத்துவது வியப்பளிப்பதுதான். தங்களது இனக்குழுவில் உள்ள ஆண்கள், பெண்கள், போட்டி கடைகள் என நிறைய சவால்களைச் சந்தித்துத்தான் பெண்கள் டால்பின் உணவகத்தை நடத்தி வருகிறார்கள். 

பெருந்தொற்றுக்கு முன்னதாக, தினசரி 5 ஆயிரம் வரை வருமானம் வந்துகொண்டிருந்தது. ஆர்டர்களுக்கு ஏற்று உணவு தயாரித்தால்,  தொழிலில் உள்ள பெண்களுக்கு தலைக்கு 25 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என கூறுகிறார்கள். 





டால்பின் உணவகம் நடத்துவதற்கான ஐடியா, உதவிகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்னேகா என்ற அமைப்பின் எல் கிருஷ்ணன் செய்துகொடுத்துள்ளார். இந்த அமைப்பு, சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை கொடுத்து உதவியதோடு, பொருட்களை மதிப்புகூட்டி எப்படி விற்பனை செய்வது என பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். 

2016ஆம் ஆண்டு டால்பின் உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. வி ஸ்டெல்லா கிரேசி, ஏ உமா, ஏ செல்வராணி, ஆர் ராஜகுமாரி, கே சரோஜா ஆகிய பெண்கள் அனைவரும் இணைந்து உணவகத்தைத் தொடங்கியுள்ளனர். தொடக்கத்தில் கருவாடு விற்று, மீன் கட்லெட், இறால் பக்கோடா என முன்னேறியுள்ளனர். 

TNIE

Antony fernando


கருத்துகள்