அமெரிக்காவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் - கீதாஞ்சலி ராவ்

 







பிறரது வாழ்க்கையை மாற்ற விரும்புகிறேன்! 

கீதாஞ்சலி ராவ், இந்தியாவை பூர்விகமாக கொண்ட அமெரிக்க மாணவி.  அமெரிக்காவின் கொலராடோவில் ஹைலேண்ட் ரான்ஞ்சில் பள்ளிப்படிப்பு படிக்கிறார் கீதாஞ்சலி. கூடவே, கொலராடோ பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறையில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

தான் கேள்விப்படும் செய்தியிலிருந்து பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவது கீதாஞ்சலியின் வழக்கம். ஜிகா வைரஸ் நோய் பரவியபோது,  ஜீன் எடிட்டிங் செய்வதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று யோசித்தார்.2014ஆம் ஆண்டு மலேசிய விமானம் காணாமல் போனபோது, கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்தார்.

 அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஃபிளின்ட் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, குடிநீரில் உள்ள காரீயம் என்ற நச்சுப் பொருளைக் கண்டுபிடிக்கும் கருவியைக் கண்டுபிடித்தார்.  அண்மையில், கைண்ட்லி (Kindly) எனும் ஆப் ஒன்றை கோடிங் எழுதி உருவாக்கியுள்ளார். இதனை ப்ரௌசரில் இணைத்து கொள்வதன் மூலம், இளம் வயதினர் சைபர் தாக்குதல்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முடியும்.  இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியுடன் செயற்கை நுண்ணறி வு பயன்படுத்தப்படுகிறது. 

பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி மக்களுக்கு வழங்கியதன் மூலமாக இளம் கண்டுபிடிப்பாளர் என பாராட்டப்பட்டார்.  இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழில் 30 வயதிற்குட்பட்டோர் பட்டியலில் இடம்பிடித்தார்.  2020ஆம் ஆண்டு அமெரிக்காவின் டைம் வார இதழில் அட்டைப்படத்தில் இடம்பெற்றார். யுனிசெஃப் அமைப்பின், அறிவியல் விழிப்புணர்வாளராக கீதாஞ்சலி நியமிக்கப்பட்டுள்ளார். இப்பணிக்காக, இவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.  தனது கண்டுபிடிப்பு பற்றி 37 நாடுகளில் உள்ள  58 ஆயிரம் மாணவர்களுக்கு விளக்கியுள்ளார். 

“நான் இரண்டாவது படிக்கும்போது, சிறு நாற்காலி ஒன்றை உருவாக்கினேன். வாழும் இடத்தை பொருட்கள் நிரப்பாமல் பயன்படுத்துவதற்கானது அது. நாம் உருவாக்கும் கருவி பிறரின் வாழ்க்கையில் சிறு மாறுதலை ஏற்படுத்தினாலே போதுமானது. அந்த வகையில்,மாற்றங்களை உருவாக்கியவளாகவே அறியப்பட விரும்புகிறேன் ” என்றார் கீதாஞ்சலி. உலகம் முழுக்க உள்ள அறிவியல் அமைப்புகள், குழுக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து அறிவியல் கண்டுபிடிப்புக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது வலைத்தளத்தை காண

https://gitanjalirao.net/

தகவல்

The new indian express

to foster the future of innovation (kannalmozhi kabilan)

TNIE 15.2.2022

Gitanjali rao

https://www.newindianexpress.com/cities/chennai/2022/feb/15/to-foster-thefuture-of-innovation-2419414.html

 https://time.com/5916772/kid-of-the-year-2020/


கருத்துகள்