ஆனந்தபஜார் பத்திரிகை - நூற்றாண்டைக் கொண்டாடும் நாளிதழ்!

 





anandabazar patrika 100 year supplementary 29 oct 2021











ஆனந்த பஜார் பத்திரிகை - நூற்றாண்டு கடந்த சாதனை!

குறிப்பிட்ட மொழியில் பணியைத் தொடங்கி, பிறகு அனைத்து மொழிகளிலும் முக்கியமான நாளிதழாக அல்லது ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்பது நிச்சயம் சாதனைதான். அதுவும் குறிப்பிட்ட கொள்கைக்காக நாளிதழைத் தொடங்கியவர்களுக்கு சமரசம் செய்வது மிக கடினமாகவே இருக்கும். 

தமிழிலும் கூட தமிழ்நாட்டிற்காக, அதனை தனிநாடாக்க பத்திரிகை தொடங்கி இன்றுவரை அதற்கான உழைப்பில் இருக்கும் சில பத்திரிகைகள் உண்டு. இப்படி தொடங்கும் பத்திரிகைகளில் உள்ள இயக்குநர், ஆசிரியர் நாளிதழை நடத்துபவர்களின் குடும்பங்களில் இருந்து வந்தவர்களாகவே இருப்பது ஆச்சரியமல்ல. அப்படித்தான் நாளிதழை கட்டுப்படுத்தி வைத்து இலக்கை நோக்கி நடத்துகிறார்கள். 

ஆனந்த  பஜார் பத்திரிகை இன்று ஏபிபி ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. ஏபிபி நாடு என யூடியூப் சேனலைப் பார்த்திருப்பீர்கள். தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இந்த ஊடக நிறுவனத்தின் டிவி சேனல்கள் உண்டு. தமிழ், தெலுங்கில் டிஜிட்டல் வலைத்தளமாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் அவர்கள் டிவி சேனல்களை தொடங்கலாம். வங்காள மொழியில் பத்திரிகையோடு டிவி சேனல்களையும் வைத்திருக்கிறார்கள்.

ஆனந்த பஜார் பத்திரிகை 1922ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனை பிரபுல்லா குமார் சர்கார் என்பவர், சுரேஷ் சந்திர மஜூம்தார் என்ற தனது நண்பருடன் சேர்ந்து தொடங்கினார். அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான இந்திய தேசியவாதம் கொண்ட பத்திரிகை. எனவே, பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. பிரபுல்லா குமாரை  பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது அதனை, அவரின் மகன் அசோக்குமார் பார்த்துக்கொண்டார்.  இவரையும் பிரிட்டிஷார் விட்டுவைக்கவில்லை. இருபது வயதிலேயே கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளனர். 

தேசப்பற்று என்பதுதான் பத்திரிகையின் அடிப்படையான தலையங்கத் தொனி. செய்திகளையும் அதன்பொருட்டு மாற்றியமைத்து வெற்றி கண்டனர். தொடக்கத்தில் 4 பக்கமாக மாலை நாளிதழாக வெளிவந்தது. விலை 2 பைசா. 

பிறகு ஆனந்தபஜார் பத்திரிகை மெல்ல ஆங்கில மொழியிலும் கால்பதிக்கத் தொடங்கியது. பிஸினஸ் ஸ்டாண்டர்ட், நியூடெல்லி, சண்டே, தி டெலிகிராப் ஆகிய பத்திரிகளைத் தொடங்கினர். இதில் நியூடெல்லி மட்டும் நினைத்த வெற்றியை அடையவில்லை. பிற பத்திரிகைகள் எல்லாமே மக்களின் வரவேற்பினால் புகழ்பெற்றவை. 

-------------------------------

நன்றி

பிஸினஸ் ஸ்டாண்டர்ட்

ருத்ராங்சு முகர்ஜி









கருத்துகள்